
இந்திய அரசு மக்கள் மீது தொடுத்திருக்கும் காட்டு வேட்டைக்கு எதிரான சர்வதேச நாளாக 01.07.2013 அன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பவிலுள்ள மக்கள் அமைப்புக்களாலும், ஜனநாயக முற்போக்கு மற்றும் புரட்சிகர சக்திகளாலும் இந்த நாள் இந்திய மக்கள் போராட்டத்த்ற்கு ஆதரவான நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மனித குலத்திற்கு விரோதமாக இந்திய அரச அதிகாரம் வளங்களை அபகரிப்பதற்காக பழங்குடிமக்களை விலங்குகள் போல வேட்டையாடி வருகிறது. இதற்கு எதிரான மக்கள் போராட்டம் இந்திய அரச படைகளை வீரத்துடன் எதிர்கொள்கிறது. சரணடைவுகளையும் விட்டுக்கொடுப்புக்களையும் கடந்து பல்தேசிய நிறுவனங்களில் நிலப்பறிப்பிற்கு எதிரான இப் போராட்டத்தை உலகம் முழுவதும் வாழும் ஒடுக்கப்படும் மக்கள் ஆதரிக்கிறார்கள். இலங்கை இந்திய அரசுகளும் உலகின் வல்லரசுகளும் இணைந்து இலங்கையில் நடத்தப்படும் மனித வேட்டையில் சிறுபான்மைத் தமிழ்த் தேசிய இனங்களில் நிலம் பறிபோகின்றது. இனச்சுத்திகரிப்பு தங்குதடையின்றி நிறைவேற்றப்படுகின்றது. இந்தியாவில் நடைபெறும் அழிப்பு குறித்த நூலை தரவிறக்கம் செய்துகொள்ள இங்கே அழுத்தவும்:
http://www.wprmbritain.org/democracy/PDF/operation-green-hunt-war-on-the-people.pdf