ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புடின் 3 ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் இந்தியா வுக்கு இன்று (வெள்ளி) வருகிறார். இப்பய ணத்தில் இரு நாடுகள் இடையே 1000 கோடி டாலர் பெறுமான பாதுகாப்பு மற்றும் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. போர் விமானம் தாங்கி கப்பல் அட்மிரல் கோர்ஷ் கோவ் தொடர் பான ஒப்பந்தங்களும் ரஷ்யப் பிரதமரின் இந்த பயணத்தின்போது நிறைவேறுகின்றன.
புடினின் இந்தியப் பயணம் குறித்து அவரது வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் யுரி யுஷ் கோவ் மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், இருநாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தைக்கு பின்னர், 15 ஒப்பந்தங்கள் கை யெழுத்தாகும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
புதுதில்லியில் இந்தியத் தலைவர்களுடன் புடின் நடத்தும் பேச்சுவார்த்தையின் போது உயர் தொழில்நுட்பதுறைகளான மக்கள் பயன்பாட்டுக்கான அணுசக்தி, பாதுகாப்பு தொழில்துறை, தொலைத்தொடர்புக் கருவி உற்பத்தி ஆகிய விஷயங் களில் இருநாட்டு பகிர்வு குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதைத்தவிர போர் விமானம் தாங்கி கப்பலான அட்மிரல் கோர்ஷ்கோவ் குறித்த ஒப்பந்தமும் கடற்படைக்கான மிக் 29 எம்ஐ ஜிகே விமான சப்ளை மற்றும் இருதரப்பும் இணைந்து போக்குவரத்து விமானம் உருவாக்குதல் குறித்தும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. அட்மிரல் கோர்ஷ் கோவ் அனுப்புவதில் ஏற்படும் தாமதத்தையும் தவிர்க்கும் நடவடிக்கைகள் இந்த பேச்சு வார்த்தையில் இடம்பெறுகின்றன. இந்த நவீன போர்க் கப்பலை வடிவமைப்பதற்கும் இந்திய குழுவுக்கு பயிற்சியளிக்கவும் கூடுதலாக 235 கோடி அமெரிக்க டாலரை இந்தியா செலவிடும்.
இந்தியா-ரஷ்யா இடையே மேலும் 2 அணு உலைகள் கூடங்குளத்தில் (தமிழ்நாடு) அமைப்பதற் கான ஒப்பந்தமும் கையெழுத்தாகிறது. ஏற்கெனவே அணு உலைகள் கட்டுமானம் நிறைவடைந்த நிலையில் இந்தியாவில் 2 புதிய அணு உலைகள் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகிறது என யுரி யுஷ்கோவ் தெரிவித்தார்.