இது தொடர்பாக அரவானிகள் உரிமை சங்கத் தலைவி ஜீவா கூறியது:
சமூகத்தில் ஒரு அங்கமாகவே அரவானிகள் சமூகம் உள்ளது. தமிழக அரசின் அரவானிகள் நலவாரியத்தின் மூலம் அரவானிகளுக்கு பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
தேசிய அளவில் அரவானிகளின் பாலின அடையாளம் பதிவு செய்யப்பட வேண்டும். எனவே, வரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் அரவானிகளை தனிப் பாலினமாக அடையாளப்படுத்தி பதிவு செய்ய வேண்டும். கணக்கெடுப்பு தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டங்களில் அரவானிகளின் பிரதிநிதிகள் பங்குபெறச் செய்ய வேண்டும். வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் அரவானிகளின் பாலினம் குறித்த சட்டம் இயற்றப்பட வேண்டும்.
தவிர, வாக்காளர் அடையாள அட்டையில் பாலினப் பிரிவில் “மற்றவர்கள்’ என்று குறிப்பிடப்படுவதற்குப் பதிலாக அரவானிகள் என்றே குறிப்பிடப்பட வேண்டும் என்றார் ஜீவா.
தெலுங்கானாவுக்கு ஆதரவான போராட்டத்தில் தீக்குளித்த மாணவர்,நேற்று பரிதாபமாக பலியானார்.
இதனால், தெலுங்கானா பகுதி முழுவதும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.”ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க வேண்டும்’என, தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய அரசு அமைத்துள்ள ஸ்ரீகிருஷ்ணா கமிட்டிக்கு இவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான மாணவர்கள், சட்டசபை வளாகத்தை முற்றுகையிட முயற்சித்து, கைதாயினர்.
முன்னதாக, உஸ்மானியா பல்கலை வளாகத்தில் ஏராளமான மாணவர்கள் திரண்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த யாதைய்யா என்ற மாணவர், திடீரென பெட்ரோலை எடுத்து, தனது உடலில் ஊற்றி, தீ வைத்துக் கொண்டார்.தெலுங்கானா ஆதரவு கோஷங்களையும் எழுப்பினார். அவரது உடலில் தீப் பற்றி எரிந்தது. அருகில் இருந்த போலீசார், தீயை அணைத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். உடல் முழுவதும் தீக் காயங்கள் அதிகமாக இருந்ததால், அந்த மாணவரின் நிலை கவலைக்கிடமான நிலையில் இருந்தது.இந்நிலையில், நேற்று அதிகாலை அந்த மாணவரின் உயிர் பிரிந்தது. இந்த தகவல் ஆந்திரா முழுவதும் வேகமாக பரவத் துவங்கியது.
அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், பலியான மாணவரின் உடல், ஐதராபாத்தில் இருந்து, அவரது சொந்த ஊரான ரங்கா ரெட்டி மாவட்டம் நகராமுக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டது.கடிதம்: மாணவர் இறந்த தகவல் பரவியதால், தெலுங்கானா பகுதி முழுவதும் பெரும் பதட்டம் நிலவுகிறது. முக்கிய இடங்களில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, மாணவர் யாதைய்யா வைத்திருந்த பையிலிருந்து, அவர் எழுதிய கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில்,”தெலுங்கானா தனி மாநிலம் அமைந்தால் தான், என் போன்றவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தெலுங்கானாவுக்காக என் வாழ்வை தியாகம் செய்கிறேன். தனி மாநிலம் கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட வேண்டாம்’என, தெரிவிக்கப்பட்டுள்ளது.உஸ்மானியா பல்கலை வளாகத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருவதால், முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள் ளது. ஐதராபாத்துக்கு ஊர்வலமாக செல்ல முயன்ற 600 மாணவர்கள் வாரங்கல் மாவட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டனர்.
Alex
You give useful information.
But locating them at the wrong spots makes them lose their value.
Please choose your locations with care.
அரவானிகளை தனிப் பாலினமாக பதிவு செய்வது நல்லதுதான்