18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் மூன்றில் இரண்டு அதிகாரத்துடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சீர்திருத்தத்திற்கு ஆதரவாக 161 வாக்குகளும் எதிராக 17 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இதற்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் 8 உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான உபேக்சா சுவர்ணமாலினி, நிமல் விஜேசிங்க, லக்ஷ்மன் செனவிரட்ன, அப்துல் காதர், மனுஷ நாணயக்கார, ஏர்ல் குணசேகர, பீ திகாம்பரம், பிரபா கணேஷன், ஜே. ஸ்ரீ ரங்கா ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர்.
இதேவேளை 18 வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் 07 நாடாளுமன்ற உறுப்பினர்களுமாக மொத்தம. 17 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.
இலங்கையில் திருவிழா தொடங்கி விட்டதடா சாமி! .
கரகாட்டம் , நெருப்புகுழித்தல்.சூரன் போர் .துலாகாவடி எல்லாம் இனிமேல்தான் நடக்கபோகிறது.
மலயகத்தின் புதிய மீட்பர்களாக பம்மாத்து காட்டியவர்களை சிலுவையில் அரைவோம் மீண்மடும் உயிர்த்தெழாதபடி.