வன்னி மனிதப்படுகொலைகளின் முக்கிய சூத்திரதாரியான கோத்தாபய ரஜபக்ச மனிதச் சிறுநீரகத்தை விற்பனை செய்யும் சர்வதேச சட்டவிரோத வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் ரைம்ஸ் நாழிதழ் தெரிவிக்கின்றது. கோத்தாபய ராஜபக்சவின் முதலீட்டில் இயங்கும் முன்னைய அப்பலோ வைத்தியசாலையில் சிறு நீரக மாற்றுச் சிகிச்சையை வெளிநாட்டு நோயாளர்களுக்குத் தாமதமின்றி வழங்குவதற்கு பெரும் தொகைப் பணத்தை சட்டவிரோதமாக அறவிட்டுக்கொள்கிறார்கள். இத் தனியார் வைத்திய சாலை சிறு நீரகம் போன்ற மனித உறுப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்குப் பொருத்தமான இடமாக சட்டவிரோத மனித உறுப்பு விற்பனையாளர்களால் சிபாரிசு செய்யப்படுகின்றது. அதற்காக அவர்களால் பெருந்தொகைப் பணமும் அறவிடப்படுகின்றது. இத் தகவல்களை ரைம்ஸ் நாழிதழ் வெளியிட்டுள்ளது. கோத்தாபயவின் ஆணையின் கீழ் பிணமாக்கப்படும் மனித உயிர்களின் சிறுநீரகங்கள் தானா விற்பனையாகின்றன என்ற தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.