கண்டன கூட்டம்
உதயன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்தும்
கருத்துசுதந்திரத்தை வலியுறுத்தியும் தேடகத்தினால் கண்டன கூட்டம்
ஒழுங்கு செய்யபட்டுள்ளது.
காலம் 27-02-2010
இடம் ஸ்காபுரோ சிவிக் சென்டர்
நேரம் 3.00 pm– 6.00pm
அனைவரையும் தோழமையுடன் அழைக்கின்றோம்!
தேடகம்,
Tamil Resource Centre (Thedakam)
Toronto, Ontario, Canada
416 840 7335
www.trcto.org
” சுதந்திரமாக ஊடகங்களை நடாத்த முடியாத அளவுக்கு சுயதணிக்கை செய்து செய்திகளை வெளியிட வேண்டிய நிலை இன்னமும் கனடாவில் உள்ளது.” உதயன் ஆசிரியர் கருத்து.
இத்தனை காலமாக அராஜகங்களுக்கு துணை போன உதயன் எந்தக் கருத்தை வெளியிட்டதற்காய் அல்லது வெளியிட மறுத்தற்காய் இந்த தாக்குதல் நடந்தது என்று இந்த தேடகக் கும்பல் சொல்வார்களா?
அரச உதவிப் பணத்திற்காய் அல்லாடுகிறவர்களுக்கு மாற்றுக் கருத்து, சனநாயகம்,சுதந்திரம் இந்தக் கனடாவில் கட்டாயம் தேவை. இடைக்கிட தண்ணியடிச்சு நியாயம் பறைய ஏதாவதொரு விஷயம் வேணும் பாருங்கோ.முன்னாள் இயக்க எடுபிடிகள்,இப்ப அரச ஆமாஞ் சாமிகளா தேடகம் பண்ணுகினம்.
புலம் பெயர் அமைப்புக்களுள் தேடகமும் ஒன்று. தேடகம் பற்றிய ஆய்வு அவசியம். கண்ணை மூடிக் கொணடு தாக்குதல் நடாத்துவதை விட ஆக்க பூர்வமாக உதாரணங்களுடன் நிறுவுவது அவசியம. அதே போல் புலம் பெயர் மற்றைய அமைப்புக்களைப் பற்றியும் அவர்கள் விட்ட தவறுகளைப் பற்றியும் நல்ல விடயங்கள் பற்றியும் ஆய்வு செய்வோம்.
உதயனுக்கு நடந்தது கண்டிக்கப்படவேண்டியது. அவர் புலிக்கு ஆதரவாக இருந்தார் என்பதும் அராஜகத்துக்கு துணைபோனார் என்பதும் உண்மை.
ஆனா இந்த புலிவால்பிடியலாதான் இன்று எங்கள் இனத்திக்கு இந்த நிலைமை. இவையள் நாளைக்கும் பிழைப்புக்கு இதுதான் செய்வினம். இப்ப மகிந்தவின் காலை நக்க தென்டிக்கினம். இவயளுக்கு அனுதாபப்படுவது நாங்கள் எங்கடை மக்களுக்கு செய்யிற பெரிய துரோகம்.
முந்தி ஜெயராஜா எண்டு ஒருத்தர் செந்தாமர்ரையிலை புலியை கனடாவிலை வளர்த்தவர், பிறகு மஞ்சரி எண்டு வியாபாரப் போட்டியில புலிய வளத்து மாத்த்யாவை பற்றி எழுதி இதைபோல புளியாலையே அடி வாங்கினவர். இவயலை அம்பலப்படுதவேனும்.
ஏந்தத் தவற்றையும் கட்டப் பஞ்சாயத்துப் பாணியில் வன்முறை மூலம் தண்டிக்கும் உரிமையும் அதிகாரமும் அராஜகமான வன்முறைக் கும்பல்கட்கு இருப்பது ஆபத்தானது.
அதை நியாயப்படுத்துகிற போக்கு இருக்கிறதே, அது அதினும் ஆபத்தானது.
ஒரு காலத்தில டொராண்டோவில இருந்து தாயகம் வந்தது. அதன் பின் எல்லாம் வியாபாரத்துக்காக புலிப் பாட்டுத்தான். இப்ப டொராண்டோவில இருந்து வாற எல்லா இலவச பத்திரிகையும் விளம்பரம் எடுக்கிற போட்டியிலையும், புலிக்கு வாழ் பிடிக்கிற போட்டியிலையும் ஒரே புளிப்புராணம். இது தங்கதீபமோ, சுதந்திரனோ, உதயனோ நடுநிலைமை பத்திரிக்கை எண்டு சொல்ற எல்லாம் அதுதான்.
புலி எண்டு உரிமை கோரி பத்திரிகை, ரேடியோ நடத்துரவங்கள் பருவாயில்லை. நடுமிலமைஎண்டு இருக்கறவங்க தான் ஆபத்து. காரைநகர் இளையபரதிஎட ரேடியோ. அதில ஒரு சாதிக்காரன் புலோலியூர் பிறகும் அதில தென் புலோலியூர் எண்டு ஒரு கிரிஷ்ணிங்கம், மற்றவர் ஓர் கவி பாடி, கவிராஜா. இவங்களல்லாம் இவங்களுக்கு ஒரு பிழைப்பு. இளையபாரதி சுனாமி எண்ட பெயரில நாலு லட்சம் டொலர் செத்து புலிக்கு கொடுத்து ரேடியோ நடத்துறவர். இப்போ ஈ பி டி பி காரர் மூலம் மகிந்தவுக்கு டீல் வைக்க முயற்ச்சி.
செந்தாமரை அரசரத்தினம் இன்கிர்ருந்துதான் சென்றவர். நல்ல மனுஷன். நடுநிலமையாக பத்திரிக்கை நடத்தியவர். இருக்கும் மட்டும் இங்கு முருகன் கோவிலுக்கு வருவார். அன்பாக பேசும், உபசரிக்கும் பண்பானவர்.
முன்பு எண்பதுகளில எல்லா இயக்கமும் இங்கிருந்துதான் வளர்ந்தது. மாதகல் கண்ணனும் நாங்களும் அப்ப வேற்றுமையில்லாமல் வேலை செய்தனாங்கள். இப்ப புலோட்காரர் இங்கு அட்ரசை இல்லாமல் போயிட்டினம். மாதகல் கண்ணன் புலியின் பெயரால் டொராண்டோவில சொத்துகளுக்கு அதிபதிஎண்டு கேள்ளவி. ellarum enku pilaikkalaamendu.
நடந்த சம்பவத்திற்கு அமைதி காக்க சொல்கின்றீர்களா? எதிர்ப்பு தெரிவித்;தால் வன்முறை வளநரும் என்கிறீர்களா?
“அதில ஒரு சாதிக்காரன் புலோலியூர்”
ஏன் இந்த சாதி வெறி. அவரது பெயரைக் கூற என்ன தயக்கம். உங்களுக்கும் புலியால் பயமுறுத்தலா?
இருக்கவே இருக்கிறார்கள் தேடகத்தினர் உங்களுக்கும் கூட்டம் நடாத்துவார்கள்!
தேடகம் மீண்டும் மேடையில் ஆட வந்த பிறகு எத்தனை பத்திரிகையாளர் கடத்தப்பட்டார்கள்,கொலை செய்யப்பட்டார்கள்,யாருக்காவது குரல் கொடுத்தார்களா?
ஒரு அராஜகவாதிக்கு,நீர் தெளித்து தூய்மையாக்கி, ஆராத்தி எடுக்க, தேடகம் முற்படுகின்ற பூடகம் என்ன?
தாமும், இயக்கங்களில் அராஜகம் பண்ணித் திருந்தியதாக நடிப்பவர்கள்,எங்களுக்கும் ஆலவட்டம் பிடியுங்கள் என்பதற்காகவா?
நாளொரு அமைப்பும்,பொழுதொரு பிழைப்புமாக இந்த புறம் போக்குத் தமிழர் எதைச் செய்ய,சொல்ல முற்படுகிறார்கள்.
இவர்களின் கூக்குரலானது கனடிய சட்ட ஒழுங்கு
விதி முறைகளை கேவலப்படுத்துவதுடன் மட்டுமன்றி இலங்கை அரசின் கொடூரங்களை திசை திருப்பவும்,மறக்கடிக்கவும் முயல்கிறார்கள்.
இங்கே யாழ் நூல எரிப்போடு உதயன் உடைப்புகளை சமப்படுத்தி பார்க்கின்ற மாற்றுக் கருத்து எனும் மண்டூகங்களால் மீண்டும் வன்முறைதான் வழிமுறை என்ற நடை முறையில், மக்கள் தள்ளப்பட்டுப் போகிறார்கள்.
இது மறுபடியும் பேரழிவுக்களுக்குத்தான் வழி வகுக்கும்.
தேடகம் மீண்டும் மேடையில் ஆட வந்த பிறகு எத்தனை பத்திரிகையாளர் கடத்தப்பட்டார்கள்இகொலை செய்யப்பட்டார்கள்இயாருக்காவது குரல் கொடுத்தார்களா?
பட்டியலை தருவீர்களா?
அராஜகத்திற்கு எதிராக குரல் கொடுப்பது வன்முறையை வளா;க்கும். நல்ல சிந்தனை. அனைத்து வன்முறைகளையும் அராஜகங்களுக்கு எதராகவும் குரல் கொடுக்க வேண்டும். வீதியில் செல்லும் ஒருவா; அடிபட்டிருந்தால் உதவி செய்வதறகு பதிலாக அவா; அது செய்தவா; இது செய்தவா; என அலசி உதவி செய்யாமல் செலவது உங்கள் பாங்கென்றால்……?
“இந்த புறம் போக்குத் தமிழர் ”
ஏள் இந்த மாற்றான் தாய் மனப்பான்மை?
கனடாவில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகைக் காரியாலம் அண்மையில் சில விசமிகளால் தாக்கப்பட்டது. அதைக் கண்டித்து தேடக அமைப்பினர் கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தனர்.
அண்மைக்காலமாக தேடம் என்ற அமைப்பு பல கூட்டங்களை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது. சென்ற வாரம் கூட ‘இலங்கையின் அரசியல் நிலவரம்’ பற்றி ஒரு கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்து.
தேடகம் கனடாவில் உதயம் பெற்று இருபது வருடங்களுக்கு மேல் ஆகின்றது.
தேடகம் பற்றிய சுவாரிசமான கதைகள் நிறையவே இருக்கின்றது. அதைப்பற்றி வேறொறு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.
உதயன் ஆசிரியர் யோகேந்திரலிங்கம் முன்னாள் தேடக உறுப்பினர். இப்படி பல அன்பர்கள் தேடகத்தில் இருந்து விலகியவர்கள். அவர்களில் ‘காலம்’ செல்வம். கருமையம் சபேசன். அருவி பாபு. மனவெளி செல்வன் போன்றவர்களும் அடங்குவர். அதேபேன்று காந்தியம் சண் அண்ணா. ஈ.பி.டி.பி. மித்திரன் போன்றவர்ளும் குறிப்பிடத்தக்கவர்கள். இப்படி இருந்த தேடகம் தேய்ந்து கட்டெறும்பாகி காணமல்போய் பல காலம்.
பின்னர் முள்ளிவாய்க்களால் முற்றுகையில் தேடகமும் புததுயிர் பெற்று கானடாவில் உள்ள இந்திய காரியலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாடட்டம் செய்த்தொடங்கியதில் இருந்து இன்று வரை நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக இணையத்தள அறிக்கைகளும்இ கூட்டங்களும்இ கலந்துரையாடல் என்று தன்னை சமூகத்தில் ஒரு முக்கிய அமைப்பாக காட்டிக் கொள்ள முனைகிறது.
இந்த வகையில் தான் உதயன் தாக்கப்பட்டதற்காக கண்டனக் கூட்டத்தையும் ஒழுங்கு செய்திருந்தது. உதயன் பத்திரிகை செய்ததெல்லாம் பக்கம் பக்கமாக விளம்பரங்களையும்இ உதயன் ஆசிரியரும்இ அவர் சகாக்களும் பிரமுகர்களோடு நின்று எடுக்கும் புகைப்படங்களையும்இ இந்திய நட்சத்திரங்களை வரவழைத்து உதயன் விழா கொண்டாடுவதும்இ புலிகளின் வரட்டு அரசியலுக்கு வக்காலத்து வாங்குவதும்இ ஈழபோராட்டத்தை வியாபாரமாக்கியதும் தான் உதயன் செய்த காரியங்கள். உதாரணத்திற்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும்:
புலிகளினால் ஆனையிறவு இராணுவ முகாம் தாக்கப்பட்டபோதுஇ விசேட பிரதியாக நாலு பக்கங்களில்இ தமிழ் வியாபாரிகளின் விளம்பரங்களை மட்டும் அச்சிட்டு வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. தேடக உறுப்பினராக இருந்த யோகேந்திரலிங்கம்இ மயைைன்பன் என்ற புனைபெயரில் பல படைப்புகளை வெளிட்டவர் என்பதும் இங்கு சொல்லியாக வேண்டும். அவ்வாறான ஒரு பின்ணனியல் இருந்த யோகேந்திரலிங்கத்திற்கு மக்கள் தொடர்பாக பாரிய பொறுப்பும்இ கடப்பாடும் இருக்கவேண்டும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. ஆனால் யோகேந்திரலிங்கம் செய்ததெல்லாம் வெறும் வியாபாரத்திற்காக பத்திரிகை நடத்திக்கொண்டிருப்பது தான்இ எரிச்சலை உண்டுபண்ணுகிறது. அதோடு தேடகம் போன்ற அமைப்பு உதயன் போன்ற பத்திரிகைக்காக கண்டனக்கூட்டம் வைத்ததில் தவறு ஏதும் இல்லைஇ ஆனால் உதயன் பத்திரிகையின் பொறுப்பற்ற போக்கினையும் சுட்டிக்காட்டும் விதத்தில் கூட்டத்தை ஒழுங்கு செய்திருக்கவேண்டம். ஆனால் அங்கு பேசப்பட்ட பேச்செல்லாம் உதயனின் பொறுப்பற்ற தனத்தை மேலும் வலுப்படுத்தவும்இ உதயனுக்கு முதுகுசொறியும் வேலையையுமே செய்திருந்ததுஇ தேடகத்தின் பச்சோந்தித் தனத்தை மேலும் வலுப்படுத்தியிருப்பதாகவே எண்ணத்தோன்றுகிறது.
உதயன் பத்திரிகை தாக்கப்பட்டதற்கான கண்டனக் கூட்டம்:
“ உனது கருத்தோடு எனக்கு உடன்பாடு இல்லை, ஆனாலும் அந்தக் கருத்தைசொல்லுவதற்கான உனது உரிமைக்காய் நான் உயிரைக் கொடுத்தும் போராடத் தயார் “ – பிரஞ்சு அறிஞர் வால்ட்டயர்
சனிக்கிழமை Canada, Scarbourgh Civic Centerல் தேடகம் அமைப்பினரால் (Tamil Resource Centre) கனடாவில் இலவசமாக வெளியிடப்படும் உதயன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்தும் கருத்துசுதந்திரத்தை வலியுறுத்தியும் தேடகத்தினால் கண்டன கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு நடந்தது.
இதில் பலர் கலந்து kondirunthaalum குறிப்பாக oodakavillaalarkal
என்று ஒரு சிலரே கலந்து கொண்டதுடன், உதயன் வாசகர்கள் என்றும் கலந்து கொண்டவர்களைக் காணக்கூடியதாக இல்லை. குறிப்பாக தேடக அமைப்பை சேர்ந்தவர்களுடன், திரு கனகமனோகரன் அவர்கள், திரு. கனகசபாபதி, அவர்கள், திரு. கந்தவனம் அவர்கள் முக்கியமாக கலந்து கொண்டனர்.
இது உதயன் ஆசிரியர் கடந்த காலங்களில் விட்ட தவறுகள், ஊடகத்தன்மையை புதைகுழி தோண்டி புதைத்தமைக்கு ஓர் மக்களின் தீர்ப்பா அல்லது என்ன நடந்தாலும் நமக்கேன் வம்பு, இலவச பத்திரிகை உதயன் ஆசிரியர் ஆச்சு, அவர் வளர்த்தவர்கள் இன்று அலுவலகத்தை உடைப்பார்கள், நாளை ஒன்று சேர்வார்கள் என்றோ, தெரியவில்லை.
இங்கு உரையாற்றிய இன்னொரு புலியின் குரலான “கீதவாணி” நடா. இராஜ்குமார் அவர்கள் பேசும்போது குறிப்பிடார், “இங்கு ஆறு வானொலிகள், பதினைந்திற்கு மேற்ப்பட்ட பத்திரிகைகள், பல சஞ்சிகைகள், பல இணைய தளங்கள் இருந்தாலும் ஒருவரும் இங்கு இல்லை”. இதில் இவரின் ஆதங்கம் தெரிந்தது. மேலும் அவர் பேசும்போது தனது நிலையை விளக்கும் பொது, தான் புலிப்பாட்டு பாடி இவ்வளவு நாளும் இருந்ததை, “ஒவ்வொரு மனிதனிற்கும் ஒவ்வொரு கொள்கை விருப்பு, வெறுப்பு உள்ளது” என்பதி சூசகமாக எடுத்துரைத்துடன், தான் உதயன் ஆசிரியரை உடன் பேட்டி கண்டு தனது வானொலியில் போட்டதற்கு தனக்கு பல அச்சுறுத்தும் தொலைபேசிகள், மின்னஞ்சல்கள் வருவதாகவும், அத்தொலைபேசி எண்களை தன்னுடன் தற்போதும் வைத்திருப்பதாகவும், இப்படி அச்சுறுத்தல்களுக்கு கனடாவில் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்பதயும் நினைவுபடுத்தி ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தினார்.
அடுத்ததாக உரையாற்றிய Canadian Tamil Broadcasting Corporation (CTBC ) னின் புலிக்குரல் “தென்புலோலியூர்” கிருஸ்னலிங்கம், “ஊடக சுதந்திரம்; ஜனநாயகம்; கருத்தை கருத்தால் சந்திக்க வேண்டும்” என்று வலியுறுத்தியதுடன், “வன்முறையால் சந்தித்ததை நந்திக்கடலில் பார்த்தோம்” என்று கூறியதுடன், உதயன் பத்திரிகை அலுவலகத்தை தாக்கியவர்கள் இன்னும் யார் என்று தெரியவில்லை (இனம்-தெரியாதவர்கள்) என்று குறிப்பிட்டதுடன், “இந்த அமைதி பூங்காவை குழப்பபோகிறோமா? கனடிய பாதுகாப்பு அமைச்சரே பாதுகாப்பு இல்லாமல் உள்ளார்”, என்று குறிப்பிட்டு இவரும் யார் அலுவலகத்தை தாக்கியவர்கள் என்பதை சொல்லாமல் நழுவிவிட்டார்.
இதன்பின் உரையாற்றிய தமிழர் விடுதலை கூட்டணியின் மூத்த உறுப்பினரும், பொதுநலவாதியும், சட்டத்தரணியுமான திரு கணகமனோகரன் அவர்கள் பேசும்போது, தனது அனுபவங்களை, தான் சந்தித்தவைகளை நினைவு கூறுமிடத்து, தனது பன்னிரண்டு வருட பழைய காரை புது கார்களில் திரிபவர்கள் உடைத்ததையும், ஓர் முறை தனது ஆக்கம் ஒன்று உதயனில் வந்ததையிட்டு தான் உதயன் அலுவலகத்திற்கு தொடர்புகொண்டபோது, உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கத்தின் மனைவி தொலைபேசியை எடுத்தவிடத்து, தான் லோகேந்திரலிங்கத்தை கேட்க, “அவர் வெளியில் நிற்கிறார், உலகத்தமிழர் பிரதம ஆசிரியர் கமல் வெளியே கூட்டிக்கொண்டே கதைக்கிறார்” என்றும் தனது ஆக்கத்தால் உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அச்சுறுத்தப்பட்டதை நினைவு கூர்ந்ததுடன், ஓர் சுவாரசியமான…உண்மையான விடயம் ஒன்றும் பகிர்ந்தார் அதாவது தான் ஈழவேந்தன் அவர்களை சந்திக்கும் பொது “அமிரின் சிலையையும் உடைத்துப்போட்டான்கள்” என்று சொல்ல, “அமிருக்கு எங்கே சிலை இருந்தது?” என்று ஈழவேந்தன் கேட்டாராம்.
கடைசியாகப் பேசிய உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கம், தனது ஆரம்ப பத்திரிகை துறையை நினைவு கூர்ந்தவிடத்து, எண்பதுகளில் ஈழத்திலிருந்து வெளிவந்த தனது “மாற்று” சஞ்சிகை பற்றி கூறுமிடத்து, அக்காலத்தில் விடுதலை அமைப்பினர் தனது சஞ்சிகை வாங்குவது மட்டுமல்லாமல் இந்தியாவிற்கும் வள்ளத்தில் கட்டி அனுப்புவார்களேன்ரும் ஒரு முறை, கிட்டு தலைமையிலானவர்கள் TELO வை அடிக்கும்போது TELO வினர் இருந்த ஓர் வீட்டில் “மாற்று” சஞ்சிகை இருப்பதை பார்த்துவிட்டு தன்னை விசாரித்தவிடத்து, அப்போ நல்லூருக்கு பொறுப்பாக இருந்தவர், “இது ஒரு சஞ்சிகை இவரை விடுங்கள்” என்று கேட்டதற்கு இணங்க கிட்டு விட்டதை நினைவு கூர்ந்து, அவ் நல் மனிதர் தற்போது கனடாவில் இளம் சட்டத்தரணியாக இருப்பதையும் நினைவு கூர்ந்தார்.
மேலும் அவர் பேசும் பொது இன்று தனது அலுவலகம் உடைக்கப்பட்டது, கருத்திற்க்காகவில்லை என்றும், வர்த்தகப் போட்டியாலேயே என்றும் கூறியதோடு, தனக்கு ஓர் விளம்பரம் 1000 டொலருக்கு எடுக்கக்கூடியதாக உள்ளதென்றால், மற்றவர்கட்க்கு 100 டொலருக்கு எடுக்கக்கூடியதாக உள்ளது என்று கூறியதுடன், “பலர் இங்கு வரவில்லை; பலர் சமூகமளிக்கவில்லை; ஊடகம் புனிதமான தொழில்; ஊடகம் அறிவோடு சம்பந்தப்பட்டது; ஆனால் இங்கு ஒருவரும் இல்லை” என்று தனது ஆதங்கத்தை கூறினார்.
அத்துடன் தனது அலுவலகம் உடைத்ததை சொல்லும்போதும், இனம்-தெரியாதவர்களேன்றே அப்படியே அதை விட்டதுடன், உலகத்தமிழர் பத்திரிகை பிரதம ஆசிரியர் கமலுடன் தான் தொடர்பில் உள்ளதாகவும், தினசரி பேசுவதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.
இதிலிருந்து ஒன்று மட்டும் தெரிகிறது, வயிற்று வலி தனக்கு தனக்கு வந்தால் தான் தெரியும்” இங்கு உரையாற்றிய உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கம் உட்பட மூன்று ஊடகவியலாளர்களும் இதுவரை இங்கு புலம் பெயர்ந்த நாட்டில் வாழும் மக்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றி ஓர் தவறானா செய்தியை கொடுத்ததுமட்டுமல்லாமல் ஓர் மாயையை உருவாக்கி வைத்ததற்கு பெரும் வகித்துள்ளார்கள். அத்துடன் இவர்களுக்கு இன்னும் ஒன்று விளங்கவேண்டும், இங்கு ஜனநாயகத்திக்காக குரல் கொடுக்க சக பத்திரிகையாளர் ஒருவரும் இக்கூட்டத்திற்கு நேரடியாக சமூகமளிக்கவில்லை என்பதையும், தமக்கு மக்கள்…. வாசகர்கள் மத்தியில் இருக்கும் மரியாதையும். இன்று உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கம் உட்பட மூன்று ஊடகவியலாளர்களும் புரிந்திருக்கும், தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களை அழைத்திருந்தால் வயது வித்தியாசமின்றி கூட்டம் அலை மோதியிருக்கும்.
இச் சம்பவத்திற்கு ஒரு மாதம் முன் இதே Canada , Toronto வில் 1982 ம் ஆண்டு யாழ் சித்திரா அச்சகத்தில் வைத்து இதே அமைப்பின் தலைவரால் சுட்டுக்கொல்லப்பட்ட யாழ்-சுழிபுரம் “புதியபாதை” ஆசிரியர், சதாசிவம் சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்) அவர்களின் 28வது நினைவு தினத்தை முன்னிட்டு, ஜனவரி 16ம் திகதி தமிழ் ஊடகத்துறையினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக “ஊடகங்களின் தவறான செய்திகள், ஆய்வுகள் உரிமை போராட்டத்தை எவ்வளவு தூரம் பின் நகர்த்தியுள்ளது” என்ற கருப்பொருளில் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தது. இக் கருத்தரங்கிற்கு எத்தனை ஊடகவியலாளர்கள் சமூகமளித்திருந்தார்கள் என்பது கேள்ளிவிக்குறியே.
ஆனால் அக்கருத்தரங்கு ஒழுங்கமைப்பாளர்களில் ஒருவர் புளொட் உறுப்பினர் திரு. நிலாநேசன் அவர்கள் இக்கண்டனக் கூட்டத்தில் சமூகமளித்திருந்தது காணக்கூடியதாக இருந்தது.
மேலும் தேடகம் அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்ட இவ் உதயன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்தும்
கருத்துசுதந்திரத்தை வலியுறுத்தியும் கண்டன கூட்டம் பலரின் ஊடகங்களுக்கான அடக்குமுறைகள், ஜனநாயகத்திர்க்கான மறுதலிப்புகள் முதலியவற்றின் கருதுப்பரிமாறல்களுடன், மே 18 இன் பின் நடந்த முதல் ஊடகத்திற்கெதிரான தாக்குதல் என்று பேசப்பட்டதுடன் முன்பு உதயன் பத்திரிகை போன்று மஞ்சரி பத்திரிகை ஆசிரியர் தாக்கப்பட்டு அப்பத்திரிகை தடை செய்யப்பட்டதையும், “தாயகம்” பத்திரிகை தடை செய்யப்பட்டதையும் நினைவு கூர்ந்தார்கள்.
இதிலிருந்து உண்மையை உண்மையாக எழுதாமல், உண்மைகளை மறைத்து, திறுத்தி எழுதும் ஊடகவியாளர்கள் இனியாவது திருந்துவார்களா?
ஊடகம் என்பது, மக்களுக்காக; மக்களுக்கு செய்தியை சொல்வதற்காக; ஊடகங்கள் மக்களின் ஓர் அங்கம்; காலையில் எழுந்தவுடன் தினசரி பத்திரியையில் என்ன தலைப்பு செய்தி என்று பார்க்கிறோம்; தொலைக்காட்சியில் என்ன செய்தி என்று உடன் பார்க்கிறோம்; வானொலியை திருகி என்ன செய்தியென்று கேட்கிறோம்; ஊடகங்களையே நம்புகிறோம்; இன்று இப்பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதற்கு தனிய தமிழ் ஊடகங்களோ, கனடிய ஊடகங்களோ குரல் கொடுக்கவில்லை, ஊடகதர்மத்திர்க்காக அனைத்து ஊடகங்களும் குரல் கொடுத்துள்ளன.
இவற்றை உண்மைகளை திரித்து எழுதும் உதயன் பத்திரிகை போன்றவர்கள் இத்தருணத்திலாவது உணர்ந்து திருந்துவார்களா?
எல்லாவற்றிக்கும் மனிதாபிமானமும்; மனித நேயமும் வேண்டும்!