மகிந்த ராஜபக்ச அரசு வன்னிப் படுகொலைகளை நிகழ்த்தி முடித்த மூன்றாவது வருடம் அண்மித்துக்கொண்டிருக்கின்றது. ஈழப் போராட்டத்தில் தன்னைத் தானே இணைத்துக்கொண்ட அமரிக்க அரசின் மனித முகமாகத் தொழிற்படும் நோர்வே அரசு இரண்டு வருடங்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுடனும் இலங்கை அரசுடனும் நடைபெற்ற பேச்சுவார்த்தையை மீளாய்வு செய்து ‘பிரமாண்டமான’ அறிக்கையை வெளியிட்டிருக்கின்றது.
இலங்கையில் நடைபெற்ற இன அழிப்புக்குறித்து எங்காவது ஒரு முலையில் கூட அவர்களின் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. உலகில் நடைபெறுகின்ற போராட்டங்களை ஒட்டச் சிதைப்பதில் நோர்வே அரசு “அளப்பரிய” சேவையாற்றியுள்ள வரலாற்றுப் புள்ளிவிபரத்தோடு ஈழப் போராட்டமும் இணைக்கப்படும்.
எது எவ்வாறாயினும் உலகின் அனைத்து ஏகபோகங்களும் வன்னிப் படுகொலைகளின் காலத்தில் ஒரே நேர்கோட்டிலேயே பயணித்தன. இந்திய அரச அதிகாரம் நேரடியான ஆதரவை இலங்கை அரசிற்கு வழங்கிய மறுபக்கத்தில் மேற்கு நாடுகள், சீனா, ரஷ்யா என்ற அனைத்து அதிகாரங்களும் போட்டிபோட்டுக்கொண்டு மனிதப்படுகொலைகளை நிறைவேற்ற இலங்கை அரசிற்குத் தமது முழுமையான ஆதரவை வழங்கின.
லிபியாவில் அந்த நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருந்த கடாபி மனித உரிமை மீறுகிறார் என்று போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஆக்கிரமித்த மேற்கின் அதே ஏகபோக அதிகாரங்கள் ராஜபக்சவின் கொலைகளை செய்மதியில் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தன.
தமிழ்ப் பேசும் மக்களின் தலைமையைத் தமது கட்டுப்பாட்டு எல்லைக்குள் வைத்துக்கொண்டு வியாபாரம் செய்ய விரும்பும் கூட்டங்கள் ராஜபக்சவோடும், இந்தியாவோடும், மேற்கு நாடுகளோடும் ஒட்டிக்கொண்டன. இனப்படுகொலையின் பின்புலத்தில் செயலாற்றிய அத்தனை அழிவு சக்திகளோடும் பேரம் பேசி தமது சொந்த வியாபார நலன்களை உறுதி செய்துகொண்டன.
உலகம் முழுவதும் அழிவுக்கு உள்ளாக்கப்படும் மக்கள் கூட்டங்கள், அவற்றின் தலைமை சக்திகள் தம்மிடை ஒருங்கிணைவை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். ஒருவர் மற்றவறைப் பலப்படுத்தும் ஒருங்கிணைவு உலகம் முழுவதும் ஏற்பட்டுவருகின்றது.
இலங்கையில் இனப்படுகொலையின் பின்புலத்தில் தொழிற்பட்ட இந்திய அதிகாரவர்க்கத்திற்கு எதிராகப் போராடுகின்ற பழங்குடி மக்களை ஆதரரித்து ஆயிரத்திற்கு மேலான ஐரோப்பியர்கள் சில மாதங்களின் முன்னர் நடைபெற்ற பொதுக்க்கூட்டத்தில் அருந்ததி ராய் நடத்திய பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்தியாவில் கிஷன்ஜீ கொல்லப்பட்டதும் உலகம் முழுவதுமிருந்த முற்போக்கு இயக்கங்கள் மத்தியில்ருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன. இந்திய அரசின் பழங்குடி மக்கள் மீதான இனப்படுகொலைக்கு எதிராக உலகப் பொது அபிப்பிராயம் ஏற்பட்டு வருகிறது.
கடந்த வாரம் பிரான்சில் இருந்து பிரஞ்சுப் பல்கலைகழகப் பேராசிரியர் சமீர் அமீன் பிரித்தானியாவிற்கு வந்திருந்தார். வன்னிப் படுகொலைகளும் அதன் தொடர்ச்சியும் குறித்த சர்வதேசப் பிரச்சாரம் ஒன்றை முன்னெடுப்பது குறித்து அவருடன் பேச முற்பட்ட போது அதுகுறித்த புரிதல் தனக்குப் போதிய அளவு இல்லை என்பதிலிருந்தே உரையாடலை ஆரம்பித்தார்.
உலகத்தின் பெரும்பகுதி இலங்கையைப் போன்றே மனிதப்படுகொலைகளின் களமாக மாற்றப்பட்டுவிட்டது. சமீர் அமீனின் தந்தை நிலமான எகிப்தில் எதிர்ப்பியக்கங்கள் 2009 இன் ஆரம்பத்திலேயே உருவாகியிருந்தது. இவை அனைத்திற்கும் மத்தியில் ஈழப் போராட்டம் குறித்த புரிதல் உலக முற்போக்கு இயக்கத்தின் மத்தியில் எடுத்துச் செல்லப்படவில்லை.
ஏகபோகங்கள் திட்டமிட்டுக் கடத்திய இந்த நூற்றாண்டின் மனிதப்படுகொலை இந்தியா அமரிக்க அதிகார வர்க்கங்களின் எல்லைகுள்ளேயே முடக்கப்படுவிட்டது. புலிகளிடமிருந்து மக்களை விடுவித்தோம் என்ற இலங்கை அரசின் பிரச்சாரத்திற்கு எதிரான வெளிப்படையான பிரச்சார இயக்கம் முன்னெடுக்கப்படவில்லை. இதற்கு மாறால புலிகளின் புனிதம் குறித்தும் உலகின் மனித கசாப்புக்கடைக்காரர்களான அமரிக்காவினதும் அதன் ஆதரவு அணிகளின் மேன்மை குறித்துமே உலக அரங்கில் பேசப்பட்டது.
உலக முற்போக்கு இயக்கத்தைப் பலவீனப்படுத்த ஏகபோகங்கள் மேற்கொள்கின்ற அத்தனை நடவடிக்கைகளையும் புலிகள் சார்ந்த தலைமைகளும், ஊடகங்களும் மேற்கொண்ட அதே வேளை முப்பது வருடமாக ஒற்றைப்பரிமாண சிந்தனைக்குள்ளேயே முடங்கிக்கிடந்த புலம்பெயர் புலி ஆதரவாளர்களும் ஏகபோகங்களின் ஏஜண்டுகள் போலவே செயற்படுகிறார்கள்.
சர்வதேச சமூகம் என்பதற்கு உலகில் போராடும் மக்கள் மத்தியில் ஒரு வகையான அர்த்தம் உண்டு. ஒடுக்கும் மனோபாவம் உள்ளவர்களுக்கு மத்தியில் இன்னொரு வகையான அர்த்தம் உண்டு. இரண்டும் ஒன்றிற்கு ஒன்று முற்றிலும் முரணானவை. நேபாளத்திலே இந்திய – சீன அடக்குமுறைகளையும் மீறி வெற்றியடைந்த போராட்டத்திற்கு “ஒரு சர்வதேச சமூகத்தின்” ஆதரவு உண்டு. அதிலிருந்து முற்றாக எமது போராட்டத்தை அன்னியப்படுத்தி அழிப்பவர்களிடம் ஒப்படைத்த பெருமை புலம் பெயர் அரசியல் தலைமைகளையும், குறுகிய எல்லைக்குள் சிந்திக்கும் தேசியவாதிகளையுமே சாரும்.
அவர்கள் தமது தவறுகளைப் புரிந்து கொள்வதற்கான எந்த சமிக்ஞையும் தெரியவில்லை.
பிரித்தானியப் பாராளுமன்றக் கட்டடத்தில் ஒன்று கூடிய தமிழ் அமைப்புக்கள் அழிவை ஏற்படுத்திய அதே அரசியலை நாம் இன்னும் முன்னெடுப்போம் எனத் தெளிவாகக் கூறுகின்றன. பிரித்தானிய தமிழர் பேரவையோடு இணைந்த மூன்று அமைப்புக்கள் பிரதானமாக அங்கு கூடியிருந்தன. லிபரல் கட்சிக்கான தமிழர்கள், அடிப்படைவாதக் கட்சிக்கான தமிழர்கள், தொழிற்கட்சிக்கான தமிழர்கள் என்ற அமைப்புக்கள் ராஜபக்ச மீதான போர்க்குற்றத்தை வலியுற்த்த இந்த ஒன்றுகூடலை நிகழ்த்தின. இவர்களோடு தமிழ் சொலிடாரிட்டி என்ற அமைப்பும் இணைந்துகொண்டது.
ஈழப் போராட்டத்தை அழிவிற்கு உட்படுத்திய, போர்க்குற்றவாளிகளின் குகைக்குள் அமர்ந்துகொண்டு அவர்களின் ராஜபக்சவைத் தண்டிக்கவேண்டும் என்று அவர்கள் பேசுவது ஒரு புறத்தில் கேலிக்குரியது மட்டுமன்றி அப்பட்டமான காட்டிக்கொடுப்பு.
உலக முற்போக்கு அணிகளிமிருந்தும், தமிழ்ப் பேசும் மக்களின் நண்பர்களிடமிருந்தும், ஒடுக்கப்பட்ட மக்களின் நேசசக்திகளிடமிருந்தும் அவர்களை அன்னியப்படுத்தி உலக மக்களின் அரங்கில் அவர்களின் குரலைப் பலவீனப்படுத்துகின்றனர்.
சமீர் அமீன் மட்டுமல்ல உலக மக்கள் மத்தியில் உரிமைப் போருக்காகக் குரலெழுப்பும் நூற்றுக் கணக்கானோர் இனிமேலாவது இணைத்துக்கொள்ளப்பட வேண்டும்.
இன்று நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன, சிறையில் ஆயிரக்கணக்கானோர் அடைத்துவைத்துச் சித்திரவதை செய்யப்படுகின்றனர், மக்களின் அவலக் குரல்கள் அத்தனை திசைகளிலும் கேட்கின்றன.
இவற்றிற்கெல்லாம் மக்கள் தமக்குத் தெரிந்த வழிகளில் போராடுகிறார்கள். புலம் பெயர் தலமைகள் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் கூட்டம் நடத்த இலங்கை அழியப் போகிறது ராஜப்கச கூண்டில் அடைக்கப்படப் போகிறார் என போலி நம்பிக்கைகளை வழங்குகின்றனர்.
முப்பது வருடமாக வழங்கப்பட்ட அதே நம்பிக்கைகள். முள்ளி வாய்க்கால் அழிவின் பின்னர் இரண்டு வருடங்களாகப் பேசிய அதே மொழி.
இவற்றிற்கு அப்பாலான புதிய அரசியல் வழிமுறை இன்னும் தாமத்தப்படுத்தப்படலாகாது.
தமிழ் அமைப்புக்களின் கூட்டத்தில் நாடு கடந்த அரசும் பங்குபற்றியது. தகவல் முழுமைபெறவில்லை. இயக்கப்பாணியில் அரசியல் செய்வதை மாற்றிக் கொள்ளவேண்டும்.இவர்களுக்குள் அதிகாரப்போட்டி. பிரித்தானிய தமிழர் பேரவைக்குள் பல பிரிவுகள். காசு இருந்தால் போராடலாமென நாடுகடந்த அரசு விளம்பரம் செய்கிறது.அதற்குள் இரண்டு பிரிவு. இரண்டும் அறிக்கைவிடுவதில் மன்னர்கள்.இப்போது ஐ.நா.சபை மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் யார் கலந்து கொள்வது என்ற போட்டி. கிருபாகரனோடு தமிழர் பேரவை மோதல். தமிழர் பேரவையின் முக்கண் [iii ] வேலைக்கு ஆதரவு அளிக்க எவர் தயார்ர்? எல்லோரும் உள்ளுக்குள் குத்துவெட்டில் ஈடுபடுகிறார்கள். ஆகவே இவர்கள் உலக முற்போக்கு அமைப்புகளுடன் இணைவார்களென்று கனவு காண வேண்டாம் .
நானும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர் என்ற அடிப்படையில் அங்கே மகிந்தாவை பிடித்து அடைப்போம் என்று ஒரு நம்பிக்கையும் கொடுக்கப்படவில்லை. அங்கே அழிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நீதியும், அங்கே வாழும் மக்கள் எதனை விரும்புகின்றார்களோ அதனை பெற்றுக்கொடுக்க பாடுபடல். முப்பது வருடமாக வழங்கப்பட்ட அதே நம்பிக்கைகள். முள்ளி வாய்க்கால் அழிவின் பின்னர் இரண்டு வருடங்களாகப் பேசிய அதே மொழி. என்று கூறும் நீங்கள் உங்கள் மொழியில் பெற்றுக்கொடுப்பது என்ன என்பதையும் தெளிவு படுத்தியிருக்கலாமே?
ஐயா போராட்டம் தவறான வழியில் புலிகலாலந்டத்தப்பட்டதால் அது தோற்று விட்டது, கொலை செய்வதன் மூலம் விடுதலை பெரலாம் என்று அவர்கள் எண்ணியதால் இந்தநிலை, ராஜபக்சவை சர்வதேசநீதி மன்றத்தில்நிறுத்துவதாக சொல்வது எல்லாம் கண்துடைப்பே, அப்படி செய்வதனாலும் இன்னும் 20 வருடம் போகலாம், அதற்குள் வடக்கும் கிழக்கும் சிங்கள பிரதேசமாகும், மலையகம் உற்பட, அவர்கள் தாங்கள்நினைத்ததை செய்து விட்டனர், வழி சமைத்து கொடுத்தவர்கள் வெளிநாட்டு தமிழர்களும், புலிகலும்,நீங்கள் வேண்டுமானால் கூட்டம் போட்டு ராஜபக்சவை திட்டலாம், இணையத்தள்த்தில் எழுதலாம், அதன் மூலம் உங்கள் ரத்த அழுத்தம் குறையலாம், வெறு ஒன்றும்நடக்காது, இந்த யாழ்பாணிகளின் போராட்டம் இப்படி தான் முடியும் என்று எனக்கு 87 ஆண்டே தெரியும், இனீமேல் இரண்டாம் மூன்றாம் தர பிரசையாக இருக்க பழகுவதை தவிர வேறு ஒன்றும்நீங்கள் வெளிநாட்ட்டில் இருந்து கிழிக்க முடியாது
raj!
அங்கே என்ன நடந்தது என்பதை இன்னொரு பார்வையில் இங்கே தெளிவுபடுத்தலாம்;அதை அப்படி ஒன்றும் நடக்கவில்லை எனக் கருத்து எழுதல்,வெறும் மூடி மறைப்பு;கண்துடைப்பு.
veeran!
87இல் திர்க்கதரிசனம் அறிந்தவர்,87 இன் முன் என்ன நிதர்சனம் கண்டார் என்பதை விளக்க முடியுமா?
உங்கள் போராட்டப் ‘பாணி’ எதுவென்பதை அவிட்டு விட்டால்,மூன்றாம் தர பிரசைக்கு,நாலாந்தரக் கருத்து எழுதலாம்.
மூன்றாம் தர பிரசைக்கு,நாலாந்தரக் கருத்து எழுதலாம். அதை தான்நீங்கள் எழுதுகின்ரீர்களே, தாங்கள் அதி மேதாவி என்பது தெரிந்த விடயமே
இனிமேல் இரண்டாம் மூன்றாம் தர பிரசையாக இருக்க பழகுவதை தவிர வேறு வழி இல்லையாம் பெயர் மட்டும் வீரனாம். இந்திய இராணுவம் வெளியேறியவுடன் வீரனின் வீரமும் வீராப்பும் விறகாய் ஆனதுவோ.
மார்கழி 13 — புலிகள் ஈபிஆர்எல்எவ் ஐ அழித்தொழிக்க முனைந்து 25 வருடங்கள் கடந்துவிட்டன
தோழர் மோகன்
“தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் …தர்மம் மறுபடியும் வெல்லும்.”
1986 மார்கழி 13 தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றுப் பக்கஙகளில் துயர் தோய்ந்த ஒருநாள். விடுதலை இயக்கங்களை அழித்தொழித்து தனது ஏக அதிகாராத்தை நிலை நிறுத்தும் ஆசையில் பிரபாகரன் தனது ஆயுததாரிகளை ஈபிஆர்எல்எவ் மீது ஏவி விட்ட நாள். தமிழ் மக்களின் விடுதலையை குறிக்கோளாகக் கொண்டு ஆயுதந்தாங்கிய புலிகள் இயக்க இளைஞர்கள் பிரபாகரனதும் அவருக்கு அருகிலிருந்து ஆலோசனை வழங்கியவர்களதும் சூழ்ச்சிக்கு பலியாகி ஈபிஆர்எல்எவ் மீது தாக்குதல் மேற்கொண்டனர்.
ஏன் எதற்கு என்று அறியாமல் தலைமையின் கட்டளை என்ற பேரில் ஈபிஆர்எல்எவ் ஐ சேர்ந்த நூற்றுக்கணக்கான தோழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். புல ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். தமது இளமைக்கால ஆசைகளை தூக்கிஎறிந்து அர்ப்பண உணர்வோடு தமிழ் மக்களின் விடிவி;ற்காக போராட முன்வந்த இளைஞர்கள் எவ்வித காரணமுமின்றி கொல்லப்பட்டனர். துன்புறுத்தப்பட்டனர். ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்களை பாதுகாத்து வீடுகளில் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் எனவும் அவர்களை தமது முகாம்களில் கொண்டு வந்து ஒப்படைக்குமாறும் கிராமங்கள் தோறும் வீதிகளை வலம் வந்த புலிகளின் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள் அலறிக்கொண்டிருந்தன. ஆனாலும் புலிகளின் அச்சுறுத்தலையும் மீறி தோழர்கள் பலர் மக்களாலும் உறவினர்களாலும் பாதுகாக்கப்பட்டனர்.
பல இடங்களில் கிராம மக்கள் ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்களை கைது செய்ய வந்த புலிகளை பகிரங்கமாக எதிர்த்து நின்று பாதுகாத்தனர். புலிகளின் அராஜகத்தின் முன்னால் தோற்றுப்போய்விட்டாலும் முதல் தடவையாக மக்கள் ஒன்று திரண்டு ஊர்வலமாக சென்று வீதியை மறித்து ஈபிஆர்எல்எவ் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதலை தடுக்க முனைந்தனர்.
இவை அனைத்துக்கும் மத்தியில் ஒரு கூட்டம் தமது சொந்த நலன்களை நோக்கமாக கொண்டு புலிகளின் நடவடிக்கைகளுக்கு உந்துதலாயிருந்ததையும் மறந்துவிட முடிhயது. எது எப்படியிருந்தபோதும் வீரத்திலும் பண்பாட்டிலும் கலாச்சாரத்திலும் உயர்ந்த தமிழ் சமூகம் புலிகளின் துப்பாக்கிகளால் மௌனமாக்கப்பட்டிருந்தது.
புலிகள் ஈபிஆர்எல்எவ் ஐ அழித்தொழிக்க முனைந்து 25 வருடங்கள் கடந்துவிட்டன. அன்று தொடக்கம் செயலாளர் நாயகம் தோழர் பத்மநாபா தோழர் கிருபா தோழர் ஜேர்ச் தோழர் கபூர் தோழர் கதிர் தோழர் பெஞ்சமின் தோழர் றொபேட் போன்ற தலைமைத் தோழர்கள் உட்பட ஈபிஆர்எல்எவ் இன் பல நூற்றுக்கணகாகான தோழர்களை பிரபாகரனின் படைகள் கொன்றொழித்திருந்தன.
துரோகிகள் துணைப்படைகள் அரசாங்கத்தின் எடுபிடிகள் என சரமாரியான பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டும் மக்கள் மனங்களிலிருந்து எம்மை துடைத்தழித்துவிட முடியவில்லை.
அதேவேளை முள்ளிவாய்;க்காலில் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டு இந்த இரண்டு வருடங்களுக்குள்ளாகவே துரோகிகள் – துணைப்படைகள் – அரசாங்கத்தின் எடுபிடிகள் -காட்டிக்கொடுப்பவர்கள் – மோசடிப்பேர்வழிகள் என தங்களுக்குள் மோதிக்கொள்வதை காண்கிறோம்.
தமது சொந்த நலன்களை பாதுகாத்துக்கொள்ள ஈபிஆர்எல்எவ் ஐ சேர்ந்த ஒரு சிலர் புலிகளிடம் சோரம் போய் ஈபிஆர்எல்எவ் ஐ உருக்குலைக்க முனைந்தபோதும் ஈபிஆர்எல்எவ் இன் கொள்கை கோட்பாடுகளை உயர்த்திப் பிடிக்கவும் மக்களின் நலன் சார்ந்த தோழர் பத்மநாபாவின் இலட்சியங்களை முன்னெடுத்துச் செல்லவும் ஆயிரக்கணக்கான தோழர்கள் உள்நாட்டிலும் உலக நாடுகள் பலவற்றிலும் இன்றும் செயற்பட்டுக்கொண்டுள்ளனர். ஆதரவு நல்கி வருகினறனர்.
தமி;ழ் மக்களின் போராட்ட வரலாற்றில் தமிழ் மக்களுக்கு கிடைத்த சட்டவலுவுள்ள ஒரே தீர்வு ஈபிஆர்எல்எவ் இன் காத்திரம் மிக்க பிரதான பங்களிப்போடும் நூற்றுக்கணக்கான தோழர்களின் உயிர் தியாகத்திற்கு மத்தியிலும் கிடைத்த வடக்கு கிழக்கு மாகாணசபை மாத்திரம் தான் என்பதையும் இங்கே குறித்துக்கொள்ளுதல் பொருந்தும்.
ஏகபிரதிநிதித்துவ கனவில் ஏனைய இயக்கங்களை அழித்தொழிக்க நினைத்த புலிகள் இந்த 25 வருடங்களுக்குள்ளாகவே தம்மையும் அழித்து தமிழ் மக்களின் 50 வருட போராட்டத்தையும் விழலுக்pறைத்த நீராக்கி தமிழ் மக்களை நிர்க்கதியான நிலையில் கொண்டுவந்து விட்டுள்ளனர்.
உயிரிழப்புக்களும் உடல் ஊனமும் பாரிய சொத்து அழிவும் அதன் விளைவுகளுமே மக்களை ஆட்டிப்படைக்கும் நிலையையே காண்கின்றோம்.
தமிழ் மக்களின் போராட்டம் புலிகளால் முட்டு;ச் சந்தில் கொண்டுவந்து விடப்பட்டபோதும் எல்லாரும் சுட்டவை எல்லாரும் பிழை விட்டவை என பொதுமைப்படுத்தி இழிவுபடுத்தும் கபடத்தனம் மேற்கிளம்பியுள்ளதை பார்க்கின்றோம்.
மக்களின் உரிமைக்கும் ஜனநாயக மீட்சிக்குமான எமது போராட்டத்தில் கடந்த 30 வருட வரலாற்றில் நாம் பல்வேறு சந்தர்ப்பஙகளில் பல்வேறு தடைகளை எதிர்கொண்டிருக்கின்றோம். அவதூறுகளை கேட்டிருக்கிறோம். அதே வேளை எமது கருத்துக்களுக்கும் நடைமுறைகளுக்கும் செழுமை சேர்க்கும ஆக்கப{ர்வமான ஆலோசனைகளையும் விமர்சனங்களையும் செவிமடுத்திருக்கின்றோம்.
வரலாறு எம்மை விடுதலை செய்யும். தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான எமது பயணத்தை தொடர்வோம்.
முழு——–உம் அந்திரெட்டிக்கெ சாம்பல் இல்லாமல் துலைந்து விட்டது
//ஈபிஆர்எல்எவ் இன் கொள்கை கோட்பாடுகளை உயர்த்திப் பிடிக்கவும் மக்களின் நலன் சார்ந்த தோழர் பத்மநாபாவின் இலட்சியங்களை முன்னெடுத்துச் செல்லவும் ஆயிரக்கணக்கான தோழர்கள் உள்நாட்டிலும் உலக நாடுகள் பலவற்றிலும் இன்றும் செயற்பட்டுக்கொண்டுள்ளனர். ஆதரவு நல்கி வருகின்றனர்// என்ன இலட்சியமாம்? என்ன செய்யப்போகின்றார்களாம்? கெதியா சொல்லுங்க தோழரே, சிரிப்பை அடக்க முடியாமல் இருக்கு.
//தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் தமிழ் மக்களுக்கு கிடைத்த சட்டவலுவுள்ள ஒரே தீர்வு ஈபிஆர்எல்எவ் இன் காத்திரம் மிக்க பிரதான பங்களிப்போடும் நூற்றுக்கணக்கான தோழர்களின் உயிர் தியாகத்திற்கு மத்தியிலும் கிடைத்த வடக்கு கிழக்கு மாகாணசபை மாத்திரம் தான் என்பதையும் இங்கே குறித்துக்கொள்ளுதல் பொருந்தும்// இந்த 25 வருசமா நீவீர் இதுதான் உண்மையென்று நினைத்துக்கொண்டிருந்தால் தயவு செய்து நல்லறிவுள்ளவர்களை அடையாளம் காணமுடியுமாயிருந்தால் கண்டு மெய்மையை கண்டறிந்து கொள்ளுங்கள் தோழரே.
மே 19 — நீங்கள், சிங்கள பேரினவாதிகள், உலக வல்லாதிக்கம் புலிகளை ஐ அழித்தொழிக்க முனைந்து 2 வருடங்கள் கடந்துவிட்டன. எனினும் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் குறிக்கோள்களை வென்றெடுப்பதற்கான புலிகளின் பயணம் இன்னும் தொடரும். மானத்தமிழர்களில் இருந்து புலிகள் எழுவார்கள் நிம்ர்வார்கள் அதுவரை கருத்து கனவாங்களே கனவு காணுங்கள்.
எனினும் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் குறிக்கோள்களை வென்றெடுப்பதற்கான புலிகளின் பயணம் இன்னும் தொடரும். மானத்தமிழர்களில் இருந்து புலிகள் எழுவார்கள் நிம்ர்வார்கள் அதுவரை கருத்து கனவாங்களே கனவு காணுங்கள். வடிவேலுவின்நகைச்சுவை போல்லுள்ளது, தாங்கள் லன்டனில் இருந்து இங்கே குடும்பத்தோடு வந்து குடியேறி போரடலாமே, இனீமேல் இரண்டாம் மூன்றாம் தர பிரசையாக இருக்க பழகுவதை தவிர வேறு ஒன்றும்நீங்கள் வெளிநாட்ட்டில் இருந்து கிழிக்க முடியாது,தங்களின் போராட்டம் எல்லாம், இனையத்தளத்தில் தான், ஏகபிரதிநிதித்துவ கனவில் ஏனைய இயக்கங்களை அழித்தொழிக்க நினைத்த புலிகள் இந்த 25 வருடங்களுக்குள்ளாகவே தம்மையும் அழித்து தமிழ் மக்களின் 50 வருட போராட்டத்தையும் விழலுக்pறைத்த நீராக்கி தமிழ் மக்களை நிர்க்கதியான நிலையில் கொண்டுவந்து விட்டுள்ளனர்
facts never die..killing by LTTE over other movements was one of the major disaster for the Eelam struggle..there is no second question on that..we can discusses this issue on intellectual basis to go forward with a positive sense..we should take the struggle as Thamils without any political bias..TGTE is not definitely doing that.. They try to carry the remnants of LTTE and pretend that they have nothing to with LTTE. They are fooling Thamils..we have to more vigilant..must question them..they should respect all the fallen heroes not only just LTTE marveerar . may god bless Thamils..
//தமிழ் மக்களின் நியாயமான அரசியல் குறிக்கோள்களை வென்றெடுப்பதற்கான புலிகளின் பயணம் இன்னும் தொடரும். மானத்தமிழர்களில் இருந்து புலிகள் எழுவார்கள் நிமிர்வார்கள்//
80 களிலும் இதைத்தான் சொன்னார்கள் (ஆயுதமே வழி), 87 களிலும் இதைத்தான் சொன்னார்கள் (இந்தியப்படை நெருக்கடி) 95 களிலும் இதைத்தான் சொன்னார்கள் (யாழிலிருந்து வன்னி நகர்வு) அப்படி சொன்னதை சொன்னபடி சாதித்தும் காட்டினார்கள். 2009க்கு பின்னரும் (முள்ளிவாய்க்கால்) இதைத்தான் சொல்லுகின்றார்கள். இலக்கு வெல்லும்.
வீணர்களால் வீங்கிய கதைகளை மட்டுமே விரயம் செய்ய முடியும். 80 களில் இருந்து இன்றுவரை இதையே இவர்களில் காணமுடிகிறது.
மானத்தமிழர்களில் இருந்து புலிகள் எழுவார்கள் நிமிர்வார்கள்// வடிவேலுவின்நகைச்சுவை போலுள்ளது
நான் சொன்னது மானத்தமிழர்களை தங்களைப்போன்ற ஈனத்தமிளர்களை அல்ல.
மானத்தமிழர்களை என்றால் அந்த கோவனம் கட்டி வெள்ளை கொடி பிடித்து சரணடைந்தவர் போன்றவர்களா, தங்களின்நகைச்சுவை வடிவேலுவையும் மிஞ்சி விட்டது, வாழ்த்துகள்
எதிரிக்கு சொம்புதூக்குபவர் தன்னை வீரன் என்று சொல்லும் போது வீரமென்றால் அவருகென்னவென்றே தெரியாது.
இவர் வீராதி வீரர் அது தான் லன்டனில் ஒழிந்து இலங்கையில் போராட்டம் செய்கின்றார்,
வீரரே, குண்டியில் காலடிபட ஓடிய அனுபவத்தையும் பின்னர் கையை தூக்கிக்கோண்டு வந்து சரணடைந்து மன்னிப்பு பெற்ற பாக்கியத்தையும் பெற்ற நீர் மற்றவர்களின் சரணடைவு பற்றி சொல்வதற்கு என்ன தகுதியுண்டு.
தங்கள் இருவரும்நல்லநகைச்சுவை உணர்வு மிக்கவர்கள், வாழ்த்துக்கள்
வீரரே, குண்டியில் காலடிபட ஓடிய அனுபவத்தையும் பின்னர் கையை தூக்கிக்கோண்டு வந்து சரணடைந்து மன்னிப்பு பெற்ற பாக்கியத்தையும் பெற்ற நீர் .. தாங்கள் அப்போது பெருமனதுடன் எனக்கு மன்னிப்பு அளித்த்தையிட்டு மிக்கநன்றி, தாங்கள் மட்டக்கள்ப்பு பெண்களை கொலை செய்தாலும் பெருமனதுடன் எனக்கு மன்னிப்பு அளித்தீர்கள், தாங்களின் இரக்க்மே இரக்கம்,
காமடியில் காவடியாடும் காமடி பீஸ் காமடிகளேயென கை காட்டுகிறது, வீரன் என்னும் பெயர் கூட வடிவேலின் நானும் ரவுடிதான் காமடிபோல் உள்ளது.
காமடி வீரரே, மட்டக்களப்பின் பெயரைச் சுட்டி பிரதேச வாதத்தை தூண்டலாம் என காமடி செய்யாதீர். தமிழீழ தேசத்துக்காகவும் தேசியத்துக்காகவும் மட்டு மண் என்றும் எப்போதும் துணை நிற்கும் ஓரிரு புழுத்த கழுத்தறுக்கும் புறநடைகளைத் தவிர.
மட்டு மண் துனைநின்றது,நீங்கள் யாழ்ப்பாணிகள் லண்டனுக்கு ஓடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து, இணையத்தளதில் போராட்டம் செய்யுங்கள்,
அரிசந்திரன், மட்டு மண்ணில் பிறந்தவன் யாழ் மண்ணில் வளர்ந்தவன் வன்னி மண்ணில் வாழ்ந்தவன். என் தேசம் தமிழீழம் அதை குழப்பியடிக்க அல்லது கூறு போட எத்தனிக்கும் எந்த எத்தர்களையும் நாம் எவ்வேளையிலும் விட்டு வைக்க தயாரில்லை. அவர்கள் களத்தில் இருந்தாலும் சரிதான் புலத்தில் இருந்தாலும் சரிதான். மௌனம் கலையும்.
அரிசந்திரன், மட்டு மண்ணில் பிறந்தவன் யாழ் மண்ணில் வளர்ந்தவன் வன்னி மண்ணில் வாழ்ந்தவன். என் தேசம் தமிழீழம் — ஆனால்நாட்டை விட்டு 83 ம் ஆன்டே ஒடி லன்டனில் சொகுசு வாழ்க்கை, பொழுது போக்காக் புலி ஆதரவு என்பதையும் எழுதவும்