Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை தூதரகம் முற்றுகை : ச‌ட்ட‌‌க்க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் 40 பே‌ர் கைது

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்ய‌ப்படுவதை கண்டித்தும், அங்கு போரை நிறுத்தக்கோரி ம‌த்‌திய அரசை வ‌லியுறு‌த்‌தியு‌ம் செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள இல‌‌ங்கை தூதரக‌த்தை மு‌‌ற்றுகை‌யிட முய‌ன்ற ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் 40 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌‌ட்டன‌ர்.

இலங்கை‌த் த‌மிழ‌ர்க‌ள் பிரச்சனை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கட‌ந்த ‌சில வார‌ங்களாகவே த‌மிழக‌ம் முழுவது‌ம் மாணவர்கள் த‌ங்களது போரா‌ட்ட‌த்தை ‌தீ‌விர‌ப்படு‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர். ஈழத் தமிழர்களுக்காக சென்னையில் நேற்று முத்துக்குமர‌ன் எ‌ன்ற இளைஞ‌ர் உயிர்த்தியாகம் செய்தார். இதன் எதிரொலியாக மேலும் ஆர்ப்பாட்டங்கள் வலுக்கின்றன.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை இன்று காலை‌யி‌ல் முற்றுகையிட முயன்ற சட்டக்கல்லூரி மாணவர்கள் 40 பேரை கா‌வ‌ல்துறை‌யின‌ர் கைது செய்தன‌ர்.

Exit mobile version