ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்த்தீன பிராந்தியங்களிலிருந்து விலகிச் செல்லுமாறு இஸ்ரேலிடம், இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
முற்றுகை, சட்டவிரோத குடியிருப்பு விஸ்தரிப்பு மற்றும் பிரிவு மதிற் சுவர் நிர்மாணம் ஆகியவற்றை முடிவுக்கு கொண்டுவருவதன் மூலமும், கைப்பற்றப்பட்ட பிரதேசங்களிலிருந்து 1967ஆம் ஆண்டு எல்லையோரத்திற்கு இஸ்ரேல் விலகிக் கொண்டால் மாத்திரமே தாக்குப்பிடிக்கக்கூடிய சமாதானத்தை அடைய முடியும் எனவும் இலங்கை குறிப்பிட்டிருந்தது.
இந்த நிலையிலேயே, நிலையான சமாதானத்தை அடைய முடியும் எனக் கூறி நியுயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பிரதி நிரந்தரவதிவிடப் பிரதிநிதி பந்துல ஜயசேகர இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
இலங்கை எல்லாவற்றீலும் முந்தி விடுகிறது இப்போது ஜோக் அடிப்பதில் கூட.அளவில்லாத முகமூடியைப் போட்டு அசிங்கப்பட்டு விடும் கோமாளீ போலவும் இலங்கை தெரிகிறது.
தானே அதேவிதமான குற்றத்தைச் செய்துவரும் ஒரு அரசாங்கம் இப்படிக் குரல் எழுப்புவது நம்மைச் சிரிக்கவோ சினக்கவோ வைக்கலாம்.
ஆனால் இங்கே நிலப்பறிப்புக்கு ஆளாகிவரும் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லப்படும் தமிழ்க் கட்சிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்த்தீன பிராந்தியங்களிலிருந்து விலகிச் செல்லுமாறு இஸ்ரேலிடம் எப்போதாவது கேட்டுள்ளனவா?
அது சரி, நல்ல விடயம்… நல்ல கோரிக்கை.
ஆனால் எமது நாட்டில் 1958 ம் ஆண்டு தொடங்கி இற்றைவரை வட-கிழக்குப் பிரதேசங்களை அதாவது தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலப்பகுதிகளை காலங்காலமாக பதவிக்கு வரும் சிங்கள அரசுகள் ஆக்கிரமித்து திட்டமிட்ட குடியேற்றங்களை நடத்தி வருகின்றது. இது இவர்கட்கு இவர்களின் மனச்சாட்சியை தட்டவில்லையா?
இதே மாதிரி உரிமைகள் மறுக்கப்பட்ட பலஸ்தீனர்களுக்காக இஸ்ரேலை கேட்டுக்கொண்டது போல ஈழத்தமிழர்களின் பாதிப்பினை உணர்ந்து தான் பிரதிநிதிப்படுத்தும் இலங்கை அரசாங்கத்தினையும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பிரதி நிரந்தரவதிவிடப் பிரதிநிதி பந்துல ஜயசேகர கேட்கலாமே?
பேரினவாதக் கட்சிகள் நேர்மையாக நடப்பதாக நான் சொல்லவில்லையே.
அவர்கள் கபடநோக்குடன் தான் இப்போது இஸ்ரேலை விமர்சிக்கிறர்கள். (கடந்த 15-20 வருடமாக இரண்டு பேரினவாதக் கட்சிகளுமே அடக்கித்தான் வாசித்தன).
எனது கவலை ஏதெனின், பிரதேசம் தொடர்பாக நாம் எவ்வாறு பாதிக்கப் படுகிறோமோ அதை விடப் பன்மடங்கு மோசமாகப் பாதிக்கப் படும் ஒரு மக்களுக்காகக் குரல் எழுப்ப நமது தலைமைகள் என்றுமே ஆயத்தமில்லை என்பது தான்.
இது நீதிக்காகப் போராடும் மக்களிடமிருந்து நம்மைத் தனிமைப் படுத்தும் என்பதை விட, அறம் சார்ந்த்த ஒரு பிரச்சனையுமாகும்.
நம்மிடையே இஸ்ரேல், அமெரிக்கா பற்றி உள்ள மயக்கங்கள் காரணமோ தெரியவில்லை.
திட்டமிட்ட குடியேற்றங்கள் டி.எஸ். சேனாநாயகவால் தொடக்க பட்டவை. தமிழரசுக் கட்சி அதைப் பற்றிப் பேசிய போதும் மக்கள் மத்தியில் அதைப் பிரசாரமாக எடுத்துச் செல்லவில்லை. சட்டவிரோதக் குடியேற்றங்கள் தமிழரசுக் கட்சி யூ.என்.பியுடன் 7-கட்சிக் கூட்டில் இருந்த போதும் நடந்து 1977க்குப் பிறகு தீவிரமாயின.
தமிழ் மக்கள் என்ற முறையில் அரசாஙத்தின் இரட்டை வேடத்தை நாம் விமர்சிப்பது அவசியம்.
அதே வேளை, நமது நிலைப்பாட்டையும் நடத்தையையும் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
நமக்கென ஒரு அறப் பார்வை இல்லாத போது அநீதி பற்றிய நமது சொற்கள் மதிப்பிழக்கின்றன.