காசுமீர் முதல் கன்னியாகுமரி வரை என்பது இந்தியத் தேசியப் பற்றாளர்களுக்குப் பிடித்தமான ஓர் அடுக்குத்தொடர்.இந்திய அரசின் கீழ் இருக்கும் வடகோடி முதல் தென்கோடி வரை இணைக்கிற பொதுத்தன்மை என்னவென்று தேடிப்பார்த்தால் மிஞ்சுவது அடக்குமுறையும் அடிமைத்தனமுமே.
இந்தியா பிரித்தானிய வல்லாதிக்கத்தில் அடிமை நாடாக இருந்தபோது அடக்குமுறைச் சட்டங்களின் அணிவகுப்பு தொடங்கிற்று. சுதந்திரம் என்ற பெயரில் அரசியல் அதிகாரக் கைமாற்றம் நிகழ்ந்த பிறகும் அடக்குமுறைச் சட்டங்களின் பயணம் முடிவடையவில்லை. அது இன்றளவும் தொடர்கிறது.
ஒரு சட்டம் நியாயமானதாகவும், முறையானதாகவும், இயற்கை நீதியின்பாற்பட்டதாகவும், அறிவுக்குப் பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும் என்பது சட்டத்திற்குரிய இலக்கணமாகும். இவ்வாறான சட்டங்கள் அவற்றால் பாதிக்கப்படுவோர் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உரிய வாய்ப்பை வழங்கும். ஆனால், அடக்குமுறைச் சட்டங்கள் இந்த இலக்கணத்திற்கு உட்படுவதில்லை. எனவேதான் அவற்றைக் கறுப்புச் சட்டங்கள், ஆள்தூக்கிச் சட்டங்கள் என்கிறோம்.
பிரித்தானிய ஆட்சிக் காலத்தின் முதல் கறுப்புச் சட்டமாகக் கருதப்படுவது ரௌலட் சட்டமாகும். முதல் உலகப் போரின் முடிவில் வளர்ந்த விடுதலை எழுச்சியை அடக்கி ஒடுக்குவதற்காகக் கொண்டு வரப்பட்டது இச்சட்டம்.
1919ஆம் ஆண்டில் இந்த ரௌலட் சட்டத்தை எதிர்த்து அமிர்தசரஸில் ஒரு பொதுக் கூட்டத்துக்காகத் திரண்டிருந்த மக்கள் மீது வெள்ளை ஆட்சியின் அதிகாரி ஜெனரல் டயர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கணக்கானவர்கள் மடிந்தார்கள். இதுவே ஜாலியன்வாலாபாக் படுகொலை. இந்தப் படுகொலையை நிகழ்த்திய ஜெனரல் டயர் “சுட்டேன், சுட்டேன், சுட்டுக் கொண்டே இருந்தேன், துப்பாக்கியில் தோட்டாக்கள் தீரும் வரை சுட்டேன்” என்று திமிராய்க் கூறினான்.
ஜாலியன் வாலாபாக் தொடர்பாக லண்டனில் நடைபெற்ற நீதி விசாரணையில் “அப்பாவிப் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது ஏன்?” என்று கேட்ட போது, ஜெனரல் டயர் பதிலளித்தான்:
“பாஞ்சால மக்களிடம் உளவியல் தாக்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே துப்பாக்கிச் சூடு நடத்தினேன்”.
ஜெனரல் டயர் சொன்னதன் பொருள் மக்களிடம் அச்சமூட்ட வேண்டும் என்பதே. துப்பாகிச் சூட்டுக்கு மட்டுமல்ல, அதற்கு வழிகோலிய ரௌலட் சட்டத்திற்கும் இதே நோக்கம்தான். அடக்குமுறைச் சட்டங்கள் அனைத்தும் மக்களை அச்சுறுத்தி திகிலடையச் செய்வதற்காகவே!
‘சுதந்திர’ இந்தியாவில் அடக்குமுறைச் சட்டங்களான இந்தியப் பாதுகாப்பு விதிகள், இந்தியப் பாதுகாப்புச் சட்டம் (மிசா), கலவரப் பகுதிகள் சட்டம், ஆயுதப் படைகள் தனி அதிகாரச் சட்டம், பயங்கரவாதச் சட்டங்களான தடா, பொடா… இவை அனைத்தும் ரௌலட் சட்டத்தின் வழிவந்தவையே. பார்க்கப் போனால், இவை ரௌலட் சட்டத்தை விடவும் கொடுமையானவை.
இந்தியத் துணைக்கண்டத்தின் எந்தப்பகுதியும் அடக்குமுறைச் சட்டங்களிலிருந்து விலக்குப் பெற்றிருக்கவில்லை.இந்தியாவை ஆள்வது ’சமயச்சார்பற்ற” காங்கிரசுக் கூட்டணியா,இந்துத்துவப் பா.ச.க.கூட்டணியோ என்பதோ,மாநில ஆட்சியைக் கையில் வைத்திருப்பது இடதுசாரிகளா,வலதுசாரிகளா,”திராவிடக்” கட்சியா,”தேசியக்”கட்சியா என்பதோ இதில் எந்த மாற்றத்தையும் தருவதில்லை.மக்கள் எழுச்சியின் அளவைப் பொறுத்தே அடக்குமுறைச் சட்டங்களின் கடுமையைக் கூட்டியோ குறைத்தோ வைத்துக் கொள்கின்றார்கள்.
வடகிழக்கிலும்,காசுமீரத்திலும் செயல்பட்டு வரும் ஆயுதப்படைகள் தனி அதிகாரச்சட்டம் தமிழ்நாட்டுக்குத் தேவைப்படவில்லை-இதுவரை.
நாளை அவர்கள் நினைத்தால் தமிழ்நாட்டிற்குள்ளும் அது நுழைவதற்குத் தடை ஒன்றுமில்லை.இந்திய ஒருமைப்பாடு என்பது அடக்குமுறைச் சட்டங்களை அடித்தளமாகக் கொண்ட ஒரு கட்டமைப்பே என்ற குற்றாய்வை உரிய விதத்தில் மறுப்பார் யாருமில்லை.
காசுமீரத்து மக்கள் ”ஆயுதப்படைகள் தனி அதிகாரச்சட்டத்தை’ (AFSPA)எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.தமிழகத்து மக்கள் தேசப்பாதுகாப்புச் சட்டம் (NSA)போன்ற அடக்குமுறைச் சட்டங்களை எதிர்த்துப் போராட வேண்டியவர்களாய் இருக்கிறார்கள்.
&&&&&&
அடக்குமுறைச் சட்டங்களின் பாதிப்பு மட்டுமின்றி அந்தச் சட்டங்களை ஆளும் அரசுகளின் அணுகுமுறையும் நம்மை அழுத்திக் கொண்டிருக்கின்றது.தேசப் பாதுகாப்புச் சட்டம் ஓர் அடக்குமுறைச் சட்டமாக இருப்பதால் மட்டுமின்றி,அந்தச் சட்டத்தைப் பயன்படுத்துகிறவர்களின் அடக்குமுறைத் தன்மையாலும் நம் உரிமைகள் நசுக்கப்படுகின்றன.
கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கொளத்தூர் மணி,சீமான்,நாஞ்சில் சம்பத் ஆகிய மூவரும் வெறும் மேடைப் பேச்சுக்காகவே தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறைப் படுத்தப்பட்டார்கள்.அவர்கள் பேசிய பேச்சுக்கள் இந்திய இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் பொது அமைதிக்கும் கேடு பயப்பதாகச் சொல்லி அந்தச் சட்டம் அவர்கள் மீது ஏவப்பட்டது.சென்னை உயர் நீதிமன்றம் தனித்தனி வழக்குகளில் அவர்கள் மூவரையும் விடுதலை செய்ய ஆணையிட்டது.கருணாநிதி தலைமையிலான தி.மு.க.ஆட்சிக்கு உயர் நீதிமன்றம் அடுத்தடுத்துச் சூடு போட்டாற் போல் இந்தத் தீர்ப்புகள் அமைந்தன.
கொளத்தூர் மணியும்,சீமானும், நாஞ்சில் சம்பத்தும் பேசியதாகக் காட்டப்பட்ட பேச்சுக்களை உயர்நீதிமன்றம் நியாயப்படுத்தியதாக இதற்குப் பொருளில்லை.பேச்சுகள் மீது தொடரப்பட்ட குற்றவியல் வழக்குகள் அப்படியேதான் நீடித்தன.ஆனால் தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் படித் தடுப்புக்காவல் ஆணை பிறப்பித்ததை நீதிமன்றம் ஏற்கவில்லை.பேசப்படும் கருத்துகள் ஆட்சியாளர்களுக்கு உவப்பானவையாக இல்லாமற் போகலாம்.ஏன் ஒட்டு மொத்தச் சமூகத்திற்கே ஒவ்வாத கருத்துக்களாகவும் கூட போகலாம்.
இந்தக் கருத்துகளை வெளியிடுவது சில சட்டங்கள்ளின் படித் தண்டணைக்குரிய குற்றங்களாகவும் கூட இருக்கலாம்.ஆனால் இந்த ஒவ்வாக் கருத்துகளின் அடிப்படையில் தேசப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவ முடியுமா என்றால் முடியாது.உச்ச நீதி மன்றமும் உயர் நீதி மன்றங்களும் எத்தனையோ தீர்ப்புகளில் இதைத் தெளிவாக்கியுள்ளன.சட்டம் பயில்கிற ஒரு மாணவருக்கும் கூட எளிதில் புலனாகிற இந்த உண்மை ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஏன் விளங்கவில்லை?
அடக்குமுறைச் சட்டங்களின் தாக்குதலுக்குப் பழக்கப்பட்ட ஆளும்கட்சி, அடக்குமுறைச் சட்டங்களில் சிறைப்பட்டதைப் பெருமையாகக் காட்டிக்கொள்ளும் முதலமைச்சர்….அதே போன்ற அடக்குமுறைச் சட்டங்களை மற்றவர்கள் மீது வகைதொகையின்றி ஏவத் தயங்குவதில்லையே,ஏன்?
மாநில அரசில் ஒரு சட்டத்துறை இயங்குகிறது,கொழுத்த சம்பளத்தில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் வேலை செய்கிறார்கள்.சட்ட அறிவுரை சொல்வதற்கென்றே அரசுத்தலைமை வழகுரைஞர் போன்ற பலரும் இருக்கிறார்கள்.இவர்களில் யாரும் உயர் நீதிமன்றத் தீர்ப்புகளைப் படித்து அவற்றின் படிப்பினைகளை அரசுக்கு எடுத்துச் சொல்வதே கிடையாதா?
கடந்த 2009 ஆம் ஆண்டு,பிப்ரவரி 17 ஆம் நாள் திருநெல்வேலி வழக்குரைஞர் சங்கம் ஏற்பாடு செய்த பாளை வழக்குரைஞர் சங்கம் ஏற்பாடு செய்த சவகர் திடல் கூட்டத்தில் சீமான் பேசிய ஒரு மேடைப் பேச்சுக்காகத் தேசப் பாதுகாப்புச் சட்டச் சிறையில் அடைத்து உயர் நீதிமன்றத்தில் சூடுபட்ட அதே அரசாங்கம் மீண்டும் அதே போன்ற பேச்சுக்காக அதே சீமானை அதே தேசப்பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளது என்றால் என்ன பொருள்?
இப்படியெல்லாம் நாம் தொடுக்கும் வினாக்களுக்கு ஒரேயொரு விடை தான் கிடைக்கிறது.அரசாங்க எருமைகளுக்கு மழை பொருட்டில்லை என்பதே.
&&&&&
சென்ற 10-7-2010 இல் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி சென்னையில் ஓர் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.சிங்களப்படை தமிழக மீனவர்களைப் படுகொலை செய்வதைக் கண்டித்தும் இலங்கையில் தமிழ் இனப் படுகொலையை எதிர்த்து ஐ.நா.அமைத்துள்ள விசாரணைக் குழுவை எதிர்க்கும் நாடுகளைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்களைச் சீமான் மீதான தடுப்புக்காவல் ஆணை எடுத்துக்காட்டுகிறது.”வீழ்ந்து விடாத வீரம்;மண்டியிடாத மானம்;பிரபாகரன் வாழ்க! இலங்கைத்தமிழர்கள் வாழ்க! தமிழீழ நாட்டை அழித்துத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிறிலங்கா ஒழிக! பிரபாகரன் வாழ்க!தமிழீழம் வாழ்க! தமிழர்களைக்கொலை செய்யும் ராஜபக்ஷே ஒழிக! தமிழர்களைக்கொலை செய்யும் இலங்கை அரசை ஆதரிக்கும் மத்திய அரசு ஒழிக! இந்திய ராணுவம் ஒழிக!சீனப்பேரரசு ஒழிக!
ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் பேசிய தோழர் சீமான் இந்திய அமைதிப்படை இழைத்த கொடுமைகளை எடுத்துக்காட்டிக் கூட்டத்தினரை வன்முறைக்குத் துண்டினாராம்.
”தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் ஒரு சிங்கள மாணவன் கூட இந்த மண்ணில் படித்து உயிருடன் இலங்கைக்குப் போக மாட்டான்.”
சீமானுக்கு எதிரான தடுப்புக்காவல் ஆணையை நியாயப்படுத்த மிக முக்கியமாக எடுத்துக்காட்டப்படும் வாசகம் இதுவே.சீமானின் இந்த எச்சரிக்கையோடு உடன்படுபவர்களும் இருக்கலாம்,முரண்படுபவர்களும் இருக்கலாம்.ஆனால் கருத்துரிமையை உயர்த்திப் பிடிப்பதற்கு அந்த உரிமையைப் பயன்படுத்திப் பேசப்படும் கருத்தை ஆதரிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.உடன் பட்ட கருத்துக்கு மட்டும் தான் உரிமை என்றால் அதற்குப் பெயர் கருத்துரிமை அன்று.
முரண்பட்ட கருத்துக்கும் உரிமை இருக்கும் போது தான் கருத்துரிமைக்குப் பொருள் கிடைக்கிறது.
இதை விடவும் முக்கியமான ஒரு கேள்வியைத் தோழர் சீமானைச் சென்ற முறை தேசப் பாதுகாப்புச் சட்டச் சிறையிலிருந்து விடுதலை செய்த பொழுது சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பியது.சீமான் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினார் என்றால் அந்தப் பேச்சைக் கேட்டு நடந்த வன்செயல்கள் எவை?என்பதே அந்தக் கேள்வி.
இப்போதைய சீமான் பேச்சினால் எந்தச் சிங்கள மாணவன் கொல்லப்பட்டான்?அல்லது தாக்கப்பட்டான்?அப்படி எதுவும் நடைபெறவில்லை.நடைபெற வேண்டும் என்பது சீமானின் அல்லது நாம் தமிழர் கட்சியின் நோக்கமோ திட்டமோ அல்ல.தொடர்ச்சியான தமிழக மீனவர் படுகொலை என்னும் வினைக்குச் சீமானீன் உணர்ச்சிமயமான எதிர்வினையே அது.இப்படித்தான் பகுத்தறிவுள்ள எவரும் அதைப்புரிந்து கொள்வார்கள்.அரசாங்க எருமைகளிடம் பகுத்தறிவை எதிர்பார்ப்பதற்கில்லையோ?
சரியோ,தவறோ பேசப்படும் ஒரு கருத்தினால் தேசப்பாதுகாப்புக்கே ஆபத்து வந்துவிடும் என்றால் அந்த தேசம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்க முடியாது.
(தமிழகத்தில் கருணாநிதி தலைமையில் நிலவும் பாசிச ஆட்சியில் கருத்துரிமைக்கு சாவு மணி அடித்து விட்ட போக்கை அம்பலப்படுத்தும் ‘’கல்லறையில் கருத்துரிமை” நூலில் இருந்து தோழர் தியாகு எழுதிய கட்டுரையை இங்கே பிரசுரித்திருக்கிறோம். ஈழ ஆதரவுப் போராட்டங்களை ஒட்டி தமிழகத்தில் கருணாநிதி நடத்திய பாசிச தர்பாரை அம்பலப்படுத்தும் இந்நூல் அனைவராலும் படிக்கப்பட வேண்டியது.)
நூல் -கல்லறையில் கருத்துரிமை.
விலை- 50, கிடைக்குமிடம்., சமூக விழிப்புணர்வு பதிப்பகம்.,68,எல்டாம்ஸ் சாலை,தேனாம்பேட்டை,,சென்னை- 600018- பேசி- 9488576166
இந்தியா எனும் குடும்பத்தில் பிரச்சனைகள் இருக்கின்றன் அதனால் இந்தியாவே பிரச்சனையாக இருக்கிறது என்றூ அர்த்தமில்லை.இந்தியாவை தீபாவ்ளீ இணக்கிற்து கலாச்சாரம் கட்டிப் பாதுகாக்கிறது.மொழியும்,மொழியும்,ம்தமும் பிரிப்பதாக நினைக்கிற உல்கையே வியக்க வைக்கும் இந்திய் ஒருமைப்பாடு ப்ற்றீ இங்கிலாந்தில் எழுதுகிறார்கள்.அமைதிக்காக அலையும் அமெரிக்கனுக்கு இந்தியாவின் ஆச்சிரம்ங்களே அடைக்கலம் தருகின்றன்.
India is doing all sort violence sitting behind the cover of nonviolence. I think India will face the consequences one day. The reason for this situation in India is family politics. Democracy is based on party politics not family politics. See all the best known democratic countries in the world. All are governed by political parties in which how the leaders are elected to contest election.
What is now in India is neither kingdom nor democracy. Rather than boasting Americans coming for peace to India, see the reality. Individuals (saints) are running their meditation centers in India wnich are popular among people all over world to certain extend, percentage negligible. That is nothing to do with Indian culture or great countries practicing democracy for own people . Even the saints make small mistakes they are criticized, insulted and punished at great extend. But Indian culture is boasting about about Vishvamithirar and Menaka. When anybody make mistake that must be dealt with democracy. Any families man become saint or vise verse. there must be system or law. Mass media and Politicians can’t take upper hand on any matters. There must be a team of saints to deal any misbehavior of any saint or so called saint doing wrong thing.
In short, India is not a democratic country. People of the India should thing about it.
all people that on earth do dwell
sing to the lord with cheerful voice him serve with fear his praise forth tell come je before him and rejoice.
நண்பர் தமிழ் மாறன் இந்தியா எப்போதுமே ஒன்று பட்ட நாடாக இருந்ததில்லை. ஆளும் வர்க்கங்கள் மிரட்டியே இந்த அராஜகமான நாட்டை உருவாக்கினார்கள். இன்று வரை காஷ்மீர் எரிய இதுவே கரணம். நான் தனித் தமிழ் நாட்டை ஆதரிக்கிறேன் என்று அர்த்தம் கொள்ள வேண்டாம். உண்மையான மக்கள் ஜனநாயகம் இந்தியாவில் மலர வேண்டும் என்பதே எனது ஆசை.
இந்தியா என்றுமே ஒரு நாடாக இருந்ததில்லை. அது ஐரோப்பாவை விடப் பன்முகத் தன்மை கொண்ட ஒரு கண்டம். அதற்குப் பொதுவாக எதுவுமே இல்லை.
வெள்ளையன் 1947இல் இந்தியாவைப் பிரித்தான் என்று சொல்லுகிறார்கள்.
இந்தியா என்ற நாட்டை இயலுமாக்கியதே பிரித்தானிய கொலனி ஆட்சி தான்.
அதற்காக இந்தியா 50, 100 துண்டுகளாக உடைய வேண்டியதில்லை.
இந்திய ஒற்றுமை என்பது இன்று சுரண்டும் வர்க்கங்களின் நலன் பற்றியதாக உள்ளது. அதை மாற்றாமல் உண்மையான இந்திய ஒற்றுமை இயலாதது.
எந்த வர்க்க நலன்கள் இந்தியாவை ஒன்று படுத்துகின்றன என்பதே நாட்டை ஒன்று படுத்துவது வன்முறையா பொது நன்மையா என்பதைத் தீர்மானிக்கும். ( தியாகு இந்த அடிப்படையை வலியுறுத்தத் தவறிவிட்டார்.)
தமிழ்த் தேசியம் (திராவிடம் உட்பட) என்றுமே ஒடுக்கப் பட்ட மக்களின் குரலாக ஒலிக்கவில்லை. அதனாலே தான் அதை முன்னெடுத்த வர்க்கங்களின் நலன்கள் கவனிக்கப் பட்டதும் அக் குரல்கள் இந்திய தேசியநலன்களின் குரல்களாகி விட்டன.
மிகச் சிறப்பான சிந்தனை பதிவு உண்மையும் அதுவே.
இந்த கட்டுரை தியாகுவால் எழுதப்பட்டதா? அப்படித்தான் நான் கருதுகிறேன். இல்லையென்று கருத்துச் சொல்லும் பட்டச்தில்…எனது அடுத்த கருத்தை பதிவேன்.
தியாகு தன்னை பொதுவுடமைவாதியாக காட்டிக் கொள்பவர்.இந்த பொதுவுடமைவாதி
பலகசடுகள் அழுக்குகள் நிறைந்த இந்தியமுதாலித்துவத்திற்கு எதிராக அல்லவா? போர்
தொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில்லுள்ள சீரழிந்த கட்சிகள் போல் இந்தியாவில் தமிழருக்கு இருக்கிற உரிமை “கம்மி” தமிழருக்கு இந்தியஅரசு செய்கிறது துரோகம் போன்ற வார்த்தைகள் கடந்த காலத்தில் வை.கோ.நெடுமாறன் போன்றவர்கள் போட்ட
கூச்சல்களே.இதில் தியாகுக்கு என்ன சம்பந்தம்? பொதுவுடமைக்கு தான் என்ன சம்பந்தம்?
ஈழத்தில் தமிழருக்கு புலிகள் செய்த கொடுமைகள் போல 1983 வெலிக்கடை சிறைச்சாலை காடையர்கள்-அரசியல்வாதிகள் செய்த கொடுமைகளை விட குறைவானது இல்லை. தமிழரை காக்க புறப்பட்ட” நாம்தமிழர்” இயக்கதலைவர் பிரபாகரனின் படத்தையே தன்நெஞ்சில் பதித்துள்ளார்.
மீனவர் பிரச்சனை தீர்க்கமுடியாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உண்மையே!.
அதற்கு தமிழ்நாட்டில் சிங்களவர்கள்-சிங்களமாணவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது
எமக்கு தெரியும். அவர்கள் உயிருடன் இலங்கை திரும்மாட்டார்கள் என்று மேடையில்
பேசினால்… சிங்களகிராமத்துகுள் புகுந்து ஏழைவிவசாயிகளை கொன்ற அடுத்த பிரபாகரனே! சீமான்.
இந்த பேச்சு முற்றுமுழுதான இனவெறிபேச்சே!. கைதி செய்தது மட்டுமல்லாமல் நீண்ட
காலம் சிறையில் அடைப்பதற்கும் சட்டத்தில் இடமிருக்கிறது.
இதில்லென்ன? சிங்களவர் யாரும் செத்தார்களா? இல்லையே என்பது பற்றி.
தோழர் தியாகுஅவர்கநேீங்கள்இனவெறிகருத்துக்களுக்கும் பயங்கரவாத செயல்திட்டங்களுக்கும்
துணைபோகக்கூடாது. இந்திய முதாலிளித்துவக்கு முடிவுகட்ட இந்திய தொழிலாளர்
ஐக்கியத்தை பேணி அதற்கான நடவடிக்கைளில் இறங்கவேண்டும். இதுவே இந்திய -இலங்கை பாட்டாளிகளை பாதுகாப்பதற்கான ஒரே வழி!.
தமிழ்நாட்டில்லுள்ள சீரழிந்த கட்சிகள் போல் இந்தியாவில் தமிழருக்கு இருக்கிற உரிமை “கம்மி” தமிழருக்கு இந்தியஅரசு செய்கிறது துரோகம் போன்ற வார்த்தைகள் கடந்த காலத்தில் வை.கோ.நெடுமாறன் போன்றவர்கள் போட்ட
கூச்சல்களே.இதில் தியாகுக்கு என்ன சம்பந்தம்? பொதுவுடமைக்கு தான் என்ன சம்பந்தம்?
இந்தக் கட்டுரையில் இது எங்கே வருகிறது?
இந்த பேச்சு முற்றுமுழுதான இனவெறிபேச்சே!. கைதி செய்தது மட்டுமல்லாமல் நீண்ட
காலம் சிறையில் அடைப்பதற்கும் சட்டத்தில் இடமிருக்கிறது.
இதில்லென்ன? சிங்களவர் யாரும் செத்தார்களா? இல்லையே என்பது பற்றி.
தோழர் தியாகுஅவர்கநேீங்கள்இனவெறிகருத்துக்களுக்கும் பயங்கரவாத செயல்திட்டங்களுக்கும்
துணைபோகக்கூடாது.
இந்தக் கட்டுரையில் இது எவ்வாறு அடக்குமுறைவெளிப்படுகிறது என்பதைத்தான் காட்டுகிறது. தியாகு சீமானை நியாயப்படுத்துவதாக நான் எண்ணவில்லை. நியாயப்படுத்துவதாயின் அது கண்டிக்கப்படவேண்டியதே.
அப்ப கட்டுரை என்னதான் சொல்லுகிறது? கொஞ்சம் தெளிவு படுத்தக்கூடாதா?. இரண்டு வசனங்கள் போதுமே!.
இது “கானல்” அவர்களுக்கும் பொருந்தும்.
இதோ நீங்கள் கேட்ட இரண்டு வசனங்கள்:
இந்தியத் துணைக்கண்டத்தின் எந்தப்பகுதியும் அடக்குமுறைச் சட்டங்களிலிருந்து விலக்குப் பெற்றிருக்கவில்லை.
அடக்குமுறைச் சட்டங்களின் பாதிப்பு மட்டுமின்றி அந்தச் சட்டங்களை ஆளும் அரசுகளின் அணுகுமுறையும் நம்மை அழுத்திக் கொண்டிருக்கின்றது
நன்றி! உங்கள் அடக்கமும் பண்பும்
என்னை மிகவும் கவர்கிறது.
இந்த அடக்குமுறை முதாலித்துவ குணாம்சம்மே.இனிவரப்போகும் காலங்கள்இன்னும் மோசமாகவே காணப்படும்.
உலகம்திரும்பவும் 1929 காலப்பகுதிக்கே வந்திருக்கிறது.அதாவது முதாலித்துவம் மந்தகாலப்பகுதிக்குள் நுழைந்திருக்கிறது.தொழிலாளிவர்கத்திற்கு தாய்நாடுகிடையாது.அவர்களே தேசம்.இந்திய தொழிலாளி வர்க்கம் தனிமனிதனாக எழுந்து
நின்று இந்திய முதாலித்துவத்தை
தூக்கி எறிவதே ஒரேவழி.
a voter
மிகச் சிறப்பான ஒரு பொழிப்பு.
நன்றி.
கட்டுரை என்ன சொல்லுகிறது , நாம் என்ன சொல்லுகிறோம் , ஒன்றும் புரியாமல் புலிகளை விமர்சிக்கிறோம் பேர்வழி என்றபெயரில் .மல்லாக்கா கிடந்து காறித்துப்பும் கூட்டம் ஏதோ ஒருவழியில் புகுந்து உலகத்தையே மாற்றியமைப்பவர்கள் போல தயவுசெய்து அசிங்கபடாதீர்கள், நீங்களெல்லாம் சமூக அரசியலுக்கப்பாற்பட்டவர்கள், எதை எங்கே பேசவேண்டுமோ அவற்றைத்தான் அந்த இடத்தில் பேசவேண்டும் ,உங்களுக்கு தொழில் துறையில்லையென்பதற்காக திண்ணையில் வீம்புக்கு ஊழிக்கூத்தாடக்கூடாது ,எல்லாம் தமிழனின் தலையெழுத்தூஊஊஊ,
சம்பந்தா சம்பந்தமில்லாமல் இங்கே புலிகளைத் திட்டுவது ஆரோக்கியமான உரையாடலுக்கு உதவாது. ராஜபச ஆட்சியில்நடத்தப் பட்ட வெறியாட்டத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ நியாயப்படுத்தும் எவரதும் மனச்சாட்சி எங்கேயோ போய் மறைந்திருக்க வேண்டும்.
அத்தகைய திசை திருப்பல்கள் அலட்சியம் செய்ய உகந்தவை.
தியாகு சீமானின் கூற்றை நியாயப் படுத்த இயலாமல் தவிப்பதைக் காணலாம். அதே நேரம் அதை அவர் கண்டிக்கத் தயங்குவது அவரது மார்க்சிய உலக நோக்கைக் கேள்விக்குட்படுத்துகிறது.
அவரது வாதங்களையே யாரும் நாளை ஒரு இந்துத்துவ வெறியனைக் காப்பாற்றப் பயன்படுத்தலாம் என்பது அவருக்கு விளங்கவில்லையா?
முப்பது வருடம் தமிழ்மக்களின் வாழ்வு பாழ்ளடிக்கப் பட்டது புலிகளாலேயே. தமிழ்மக்களில் தோன்றிய தவறான தலைமையை தமிழ்மக்களாலேயே தோற்கடிக்க
பட்டிருக்கவேண்டும். தமிழ்மக்களைப் பற்றி கதைப்பதாக இருந்தால் புலிகளைப் பற்றியோ
வட்டுக்கோட்டை நெத்துகளை பற்றி கதைக்காமல் வரலாறு பூரணமாகாது.
இதில் சினிமாகாரரும் தங்களை மாக்ஸியவாதி என்று சொல்பவர்களும் புலிகளை பாதுகாத்து-இல்லை விலத்திவைத்து நாளைய வரலாற்றுக்கு வழி தேடுவது மேலும்அழிவுகளை கொடுப்பதுமல்லாமல் “சயினட்தலைவர்” சென்ற இடத்திற்கே மிகுதி
தமிழ்மக்களையும் கூட்டிச் செல்லும்.
இதுவரை யாரும் செய்யதா உதவியையே மகிந்தா ராஜா பக்சா தமிழ்மக்களுக்கு செய்துள்ளார். இனி எப்படி நகர்கிறது என்பதை இருந்து தான் பார்க்கவேண்டும்
/////இதுவரை யாரும் செய்யதா உதவியையே மகிந்தா ராஜா பக்சா தமிழ்மக்களுக்கு செய்துள்ளார்////. ஓஓ நீர் சிங்கள ராஜபக்சவின் கைத்தடியா, அதுதானே பார்த்தோம் எடுத்ததெல்லாவற்றிற்கும் தேசியத்தலைவரை பற்றி பயப்படுகிறீரேயெண்டு,chandran.raja அல்லது சோரியன் ராசா எண்டு நீரே தலைமைதாங்கி கண்டுபுடிச்சுத்தாரும் ,,
“இதுவரை யாரும் செய்யதா உதவியையே மகிந்தா ராஜா பக்சா தமிழ்மக்களுக்கு செய்துள்ளார்”. — இராச சந்திரன்
என்னே எம் ஈசன் இராசபட்சனின் ஒப்பிலாக் கருணை.
40,000 பேரைக் கூண்டோடு கைலாசம் அனுப்பியதைச் சொல்வேனா!
20,000 பேரை முடமாக்கியதை சொல்வேனா!
300,000 பேரை முட்கம்பி வேலிகளின் பின்னால் போட்டதைச் சொல்வேனா!
அத்தனை பேரையும் பிச்சைக்காரர்கள் ஆக்கிய அற்புதத்தைச் சொல்வேனா!
இன்னமும் தொடரும் நிலப்பறிப்பைச் சொல்வேனா!
அவன் கழலிணை சுவைத்து வாழும் அடியார் குழாம் வாழி வாழி. நீடு வாழி.
முப்பது வருடங்கள் முப்பதுணாயிரம் மீன்னவக் குடும்பங்கள் மீன்பிடிக்க கடல் இல்லாமல் போனதைப் பற்றி ஏன்? சொல்லவில்லை.
தமிழீழம் கேட்கப் புறப்பட்டு மூன்றில் ஒருபகுதி மக்கள் நிரந்தரமாக நாட்டை விட்டு
வெளியேறியிருக்கிறார்களே அதை ஏன் சொல்லவில்லை.?
காலம் காலமாய் ஏழைப் பிள்ளை பிடித்து சயினட் கட்டி பலிகொடுத்துவிட்டு கட்டளை
யிட்டவர்கள் வெள்ளைகொடி பிடித்த சமாச்சாரத்தை ஏன் நீங்கள் இன்னும் வெளியிடாமல்
மெளனம் காக்கிறீர்கள்?.
முகமாலையில் வைத்து கொழும்புலிருந்து கொண்டு வந்த பிளாஸ்ரிக் இடியப்கதட்டுக்கு
வரிபோட்ட கதையை ஏன் இலகுவாக மறக்கிறீர்கள்?.
ஆகபெரிய குற்றமாக கருதப்படுவது.பலநாட்டு வெள்ளைகளோடு உறவு வைத்துக்கொண்டு சிங்களஇனத்துடன் வாழமுடியாது என்று தமிழ்நாட்டு சினிமா கூத்தாடிகளை வைத்து ஒப்பாரி வைகிறீர்களே! இது எந்தவிதத்தில் நியாயமானது?.
வாழ்க்கையை வாழுங்கள்.தப்பில்லை.
ஏதிலிகளாக இருக்கிற ஈழத்தமிழர் வாழ்வை அரசியல் என்ற போர்வையில் நின்மதியை
குலைக்காதீர்கள்.
ஏற்கனவே அரைமனநோய்யாளி நிலைக்கு தள்ளப்பட்டவர்கள். உங்களைப் போல்தான்
அவர்களுக்கும் வாழஆசையுண்டு என்று நினைத்து சிறிது இரக்கம் காட்டுங்கள்.
பிரபாகரனைப்பற்றி நான் பேசவில்லை.
பிரபகரனை எதிர்க்கிற சாட்டில் தமிழ் மக்களின் அழிவை முன்னெடுக்கிற ஒரு ஆட்சிக்கு ஆலவட்டம் பிடிக்கும் எவருக்கும் அக்கறை தமிழ் மக்களின் நலனல்ல.
உங்களுக்கும் மூர்க்கத்தனமான புலி ஆதரவாளர்கட்குமிடையே அடிப்படையில் அதிகம் வேறுபாடு இல்லை என்றே தோன்றுகிறது.
இப்பதான் பாலர் பாடசாலைக்கு போய் வந்த மாதிரியல்லவா? பேசுகிறீர்.
முப்பது வருட தமிழ்மக்களின் வரலாற்றை வரலாற்றில் பட்ட அவலத்தை கதைக்க வேண்டுமென்றால் பிரபாகரனை பற்றியும் மே மாதம் 2009 வரை புலிக்கொடி பிடித்த ஊர்வலம் போன புலம்பெயர்
தமிழரைப் பற்றியும் கதைத்தே தீரவேண்டும்.
கோடலிக் கொத்துவாங்கிய அந்தநாள் ஈழத்துமக்களுக்கு ஒரு திருநாள்
உங்களுக்கு அது துக்கநாளாக இருக்கலாம்.
இப்படியும் சொல்லாம்..புலம்பெயர் தமிழரின் தீயஎண்ணங்களிலிருந்து
ஈழத்தமிழர் விடுதலையடைந்த நாள். அவர்களுக்கு விடுதலை எடுத்துக்
கொடுத்த மகிந்தா ராஜயபக்சா பாராட்டுக்குரியவர் மட்டுமல்லாமல்
இலங்கை வரலாற்றிலும் பதிவு செய்யக்கூடியவரே. இந்தநன்றிக் கடன் தமிழ்மக்களாலேயே நிறைவேற்றி வைக்கப்படும்.
இங்கே இருக்கிற வெள்ளைகாரருக்கு இல்லாத புத்தி உங்களுக்கு
உண்டு என்பதை நாம் அறிவோம்….வங்கி கடன் எடுத்து ஊருக்குள்ளை
வட்டிக்கு கொடுக்கிறது. அந்த வட்டி எடுத்து சீட்டு கட்டுறது. பணத்தை
யாருக்கு வட்டிக்கு கொடுக்கிறயள். உங்கள் சொந்த இனத்திற்கே!.
இப்படியான கேடுகெட்ட புத்திகளே விபரீதமான விளைவுகளையும்
தேடிக் கொடுத்தது.
முதலில் உமது பெயரை “அ” “உ” “எ” ஏ”” என்று வைய்யுங்கள்
எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ் என்பது முகமூடிகள்ளர் என்ற உணர்வு ஏற்படுகிறது. அதுமல்லாமல் புலிகள் செய்த மாயாஜால விளையாட்டுகளையும் நினைவூட்டுகிறது.
////இதுவரை யாரும் செய்யதா உதவியையே மகிந்தா ராஜா பக்சா தமிழ்மக்களுக்கு செய்துள்ளார்////. ஓஓ நீர் சிங்கள ராஜபக்சவின் கைத்தடியா, அதுதானே பார்த்தோம் எடுத்ததெல்லாவற்றிற்கும் தேசியத்தலைவரை பற்றி பயப்படுகிறீரேயெண்டு,chandran.raja அல்லது சோரியன் ராசா எண்டு நீரே தலைமைதாங்கி கண்டுபுடிச்சுத்தாரும் ,,
பெயரில் ஒன்றும் கிடையாது ராஜா சந்திரன் கருத்தை கவனியும். பிரபாவை எதிர்பதாகநினைத்து ராஜபக்சவை ” மாகா ராஜ பக்ச ” ஆக்கி விடுவீர்கள் போலிருக்கிறதே! ஒரு பக்க சர்வாதிகாரம்நசுக்கபட்டுவிட்டது ஆனால்நசுக்கியது அதை விட அசுரத்தனமானது . இரு ப்க்கத்திலும் புதிய தலைகள் உருவாவதுதான்நல்லது.
இருபக்கத்திலும் புதிய தலைமை உருவாகவேண்டும் என்பதில் எனக்கு
எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
தும்மலைக் கொடுத்து இருமலை வாங்கியதாக இருக்கக் கூடாது.
முப்பதுவருடம் சீரழிந்ததையும்
நினைவில் கொள்ளவேண்டும்.
ராஜபக்ச ஆட்சி தும்மலும் அல்ல இருமலும் அல்ல. நாட்டைப் பீடித்துள்ள புற்று நோய்.
அதிகார மையத்தை அண்டிபிழைத்துபோவது, துதிபாடுவது தமிழதிகாரவர்க்கத்தின் ஈனக்குணம். (நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன) தமிழ்மக்களின் நிலை கொதிக்கின்ற சட்டியிலிருந்து அடுப்புக்குள் வீழ்ந்த மீனுக்கு சமம். இலங்கை வரலாற்றிலேயே மோசமான சர்வாதிகார ஆட்சிசெய்யும் மகிந்த கும்பலை ஆதரிப்பதற்கு மாக்சிச முகமூடி வேறு. புலிகளை ஆதரித்தும், எதிர்த்தும் சிலர் மனநோயாளிகளாகி விட்டார்கள் என நினைக்கின்றேன்.
சம்பந்தர் அய்யாவின் தலமையில் கூட்டமைப்பு இருப்பது சந்திரன் ராஜாவுக்கு தெரியாதோ/ சம்பந்தர் அய்யாதான் இப்போது தமிழர்க்குத் தலைவர் இதைப் புரிந்து இனி எதையாவது பேசுங்கள் ப்ளீஸ்.
அரோகரா!
புலிகளின் சர்வாதிகாரம் பற்றி எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் இன்று எண்ணெய்த் தாச்சியிலிருந்து எரியும் அடுப்பில் விழுந்த கதையாகவல்லவா இலங்கை நிலவரம் இருக்கிறது.
09/25/2010 யவ 7:56 pஅ
நன்றி! உங்கள் அடக்கமும் பண்பும்
என்னை மிகவும் கவர்கிறது.
இந்த அடக்குமுறை முதாலித்துவ குணாம்சம்மே.இனிவரப்போகும் காலங்கள்இன்னும் மோசமாகவே காணப்படும்.
உலகம்திரும்பவும் 1929 காலப்பகுதிக்கே வந்திருக்கிறது.அதாவது முதாலித்துவம் மந்தகாலப்பகுதிக்குள் நுழைந்திருக்கிறது.தொழிலாளிவர்கத்திற்கு தாய்நாடுகிடையாது.அவர்களே தேசம்.இந்திய தொழிலாளி வர்க்கம் தனிமனிதனாக எழுந்து
நின்று இந்திய முதாலித்துவத்தை
தூக்கி எறிவதே ஒரேவழி.
நீங்கள் எழுதிய மேற்படி குறிப்பு இலங்கைக்கும் பொருந்தும் தானே.
எல்லாரும் பாலர் வகுப்புப் பிள்ளைகள் என்று நினைத்துத் தான் எங்களுக்கு ராஜபக்ச பற்றிப் பாப்பா கதைகள் சொல்லுகிறீர்கள்.
நீங்கள் எவருக்கும் பாப்பாப் பட்டம் சூட்டுவதால் வெட்கக் கேடான ராஜபக்ச ஆதரவு உளறல்கள் உண்மையாகி விடா.
I support Tamil Eelam. You know why? Then only you can practice democracy for Tamil (Sri Lankan). That is the reality through out their very bitter experiences and throughout their very long struggle. All these bitter experience and struggle, undergone by them not for really Tamil Eelam but for their own democracy only. Most of the countries do not know this utter fact.
Wherever people are under discrimination and there is no solutions found, there the separatism starts. The governments, support for violence against minority just for power of individuals should be thought a lesson by a way of punishing them one day for their wrong doing. Then only you can practice democracy for people and in the world. Why Europe has many countries without being a one country? or else why Swiss is having that much of federalism? All that for democracy.
Just supporting family politics we can never achieve democracy. There must be party politics. The person going be contested for election to become the leader for the country should be selected by experts and good people from the party. Seniority also considered up to certain extend but not 100%
Other than south Asia there is no family politics. People worried about democracy in South Asia should not support for family politics. This one way of bringing democracy to the counties of south Asia.
Thanks
Para
how a poor a thing i sometimes find will captivate a greedy mind.
தமிழ்மாறனுக்கு இந்த விஷயம் தெரியாமல் இருக்கிறது இன்னும் ஆச்சரியம். சம்பந்தன்
ஐயாவும் அவர் கூட்டாளிகளும் தமிழ்பிற்போக்கு தலைமைகளின் பிரதிநிதிகள். ஆயுதம்
ஏந்தாத புலிகள்.
இதை விளங்கிக் கொண்டால் மட்டுமே புதிய தலைமைகளை தேடுவதற்கு ஆர்வம் வரும்
படிக்கவேண்டிய பாடத்தில் முதல் இது தான். அரோகரா ஐயாசாமி என்று பின்னோட்டம்
விடுவதில் எந்த சுகமும் இலலை. ஆத்திரபடுவதில் ஒன்றையும் சாதிக்க முடியாது.
“ஆறுவது சினம்”.இது அழகான பொண்மொழி அல்லவா? கற்றுத் தேறுவோம்.
தமிழர்களின் முற்போக்கு பிரதிநிதிகள் யாரென்பதையும் திருவாய் மலர்ந்தருளுங்கள்..அதையும் ராசாபச்சாவிடம் கொடுத்தாச்சா நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்,
பிரபாவுடன் ஒப்பிடும் போது ராஜபக்செ ரொம்ப நல்லவர்,,,வல்லவர்….
ஊருடன் பகைக்கின் வேறூடன் கெடும் அம்மையே உலகில் உள்ள பெயரெல்லாம் உமது பெயராகுக ஆனால் மதிவதனி வேண்டாம்.அவள் மாதரசி.தீவுப்பகுதி மக்களீன் விளக்கு.மனசை வலிக்கப் பண்ண வேண்டாம்.பண்புள்ள மண்ணீல் இருந்து வேண்டுகோள் விடுக்கிறேன்.தயவு செய்து இந்த விளயாட்டு வேண்டாம்.
சொல்ல மறந்துவிட்டீர்கள்: (ராஜபக்செ ரொம்ப நல்லவர்,,,வல்லவர்….) எங்களை எல்லாம் கூண்டோடே கொல்பவர்.
தமிழன் தனக்கு கிடைத்ததை சுறுட்டுவற்கல்லாவா நிற்கிறான். சிலவேளைகளில் எமது
சமூக அமைப்புகள் காரணமாக இருக்கலாம். பிள்ளைகளை கரை சேர்கவேணும் .சீதனும்
கொடுக்கவேணும்.கஷ்ரபட்டு படித்தாவது டாக்டர் இன்ஜினியர் ஆக்கி விடவேணும்.
றோட்டிலை உள்ளதுள்ள நல்ல வீடாகக் கட்டவேணும்.
இப்படியான நிலப்பிரவுத்த குணாம்சம் கொண்டவனுக்கு எப்படியும் சுறுட்டல் குணாம்சத்தை தடுக்க முடியாது. பொதுநலம் என்றால் சமூக சேவை என்றால் என்ன
என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.ஆகக் குறைந்தது பியசேனா டக்கிஸ் தேவானந்தா
வரைக்காவது இருக்க வேண்டாமா?.
தமிழ்மக்களை ஆயுதரெளடி பிரபாகரன் ஒருபகுதி பலிகொடுத்து முடிந்தது. ஆயுதம் இல்லாத ரெளடி சம்பந்தன் கோஸ்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களையும் பலிகொடுக்க மேற்குலகத்திற்கு பயணத்தை தொடங்கியிருக்கிறது.
இதன் பலன் தற்போதைக்கு தெரியவராவிட்டாலும் போகபோக மிகுதியையும் அனுபவித்து தான் ஆகவேண்டும். சம்பந்தன் கதைக்கவேண்டியது.இலங்கையரசோடு.
இலங்கையரசு ஒத்துழைப்பு வழங்க மறுத்தால் அரசை மாற்றியமைப்பதற்கு முழு
இலங்கைமக்களையும் அணிதிரட்ட சக்தியுள்ளவனே! தலைவன் ஆகிறான். அவனே
தலைவன்.
சம்பந்தன் “முதல்இரவுபெண்மாதிரி” வெட்கமாகஇருக்கு சும்மா விடுங்கோ! வெட்கமாக இருக்கு சும்மாவிடுங்கோ!!என்பதுமாதிரி கதைக்காமல் இருந்தால் இவர் எப்படி அரசியல்
தலைவர்ராகமுடியும்?.
பொதுவாகவே தமிழர்.தமிழ்அரசியல் தலைவர்மார்களை கண்டுகொள்ள முடிவதில்லை.
இது எழுதப்படாத விதியாகமாறிவிட்டது.தலைவர்களோ தமது பதவி தம் முற்பிறப்பில்
செய்த விதியின் பயன் என்று சொல்லி வாழும் போது நாமேநமக்கு மண்ணை அள்ளி
போடுவது போல் இல்லையா?
வட்டுக்கோட்டையில் இருந்து எங்களுக்கு ஊட்டி ஊட்டி வளர்த்துவிட்டது சிங்களவன்
எம்மைஅடக்கிறான் எம்மைஅடக்கிறான் என்கிற கோஷம் தான். அவன் அடக்கியா
கோட்டைரயில் இறங்கி கட்டுநாயக்காவில் விமானம் ஏறி வந்தனீர்கள்?.
வாழ்வில் உள்ள யதார்த்தை பாருங்கள். மகிந்தராஜபக்சா கொடியவர் என்கிற எண்ணம்
உங்களுக்கு முலைபால் குடித்ததிலிருந்து தொடங்கியது.
வன்னியில் நடந்தஅவலத்திற்கு ராஜயபக்சா பொறுப்பேற்க முடியாது. ஆயுத அரசியல்
சரிவராது என்றவுடன் பிரபாகரன் நந்திக்கடல் பக்கத்தால அல்லது வல்வெட்டிதுறை
பக்கத்தை ஓடியிருக்கவேணும். வருத்தம் முத்தும்வரைக்கும்” பங்கர்”இருந்தது அவர் குற்றம்.
முருகண்டிக்கு இராணுவம் வரும் போதும். அவருக்கு போதுமான காலம் இருந்தது.
அதையும் சரிவரப்படுத்தவில்லை.
தம்பிபிடித்துவைத்துக் கொண்டு அண்ணனை வரச்சொல்லுகிற மாதிரிதான் கிறிமினல்
மூளை வன்னிசனத்தை முள்ளிவாய்கால் வரை நடப்பு காட்டியது.இதில் ராஜபக்சாவை
பேசி பலன் ஏதும் இல்லை.இதன் மூலம் உங்கள் அறியாமைதான் வெளிப்படும்.
இதுவரை உலகில் பிறந்த அரசியல் மேதைகள் எல்லோரும் சந்திரன் ராசாவிடம் தீர்த்தம் வாங்கிக்குடித்து தலையில் தடவி கன்னத்தில்ப்போட்டிருக்கவேண்டும், இனி இருக்கும் நாங்களும் …இனிப்பிறப்போரும்…. இன்றிருப்போரும்… சந்திரன் ராச்சாவின் நாமத்தை இடை விடாமல் ஒருகோடி எட்டுமுறை உச்சரிக்க வேண்டும், சந்திரன் ராச்சாவின் தரிசனம் கிடைத்தால் இன்னும் பேறு கிடைக்கும், ராசபக்சவை வழிபடுங்கள்,,, ராசபக்சவை பின்பற்றுங்கள் ,, ராசபக்க்ஷவை நம்புங்கள் , சந்தேகம் ஏதாவது இருப்பின் சந்திரன் ராச்சாவின் திருநாமத்தை ஓதுங்கள் ,,,,தமிழர் பிரச்சினை தீரும் ,, தீராவிட்டால் தொடர்ந்து சந்திரன் ராசாசாசாசாசாசாசா நினைத்து வருந்தி வேண்டுங்கள்,, தீர்க்கமுடியாவிட்டால் எவரும் தப்புத்தப்பாக சிந்திக்கவோ செயற்படவோ வேண்டாம் சந்திரபக்க்ஷ்ச ராசாவிடம் ஆலோசனை பெறுங்கள், அவரது ஆலோசனைதான் இன்றயகாலகட்டத்தில் சரியாகவும் முக்கியமாகவும் படுகிறது,,, அரோகரா,
கிடைத்த சந்தர்பபத்தை பயன்படுத்தி அவர் மீது ஒரே போடாய் போட்டு விட்டீர்கள் ஆனால் அவரும் விடார், என்னதான் செய்யப் போகிறீர்களோ?
திரு ராஜயபக்சா! இந்த சந்திரன்.ராஜா இந்த இணைத்தளங்களில் தொலைகாட்சிகளில் விளம்பரங்கள் போல் வருபவன்அல்ல.
இந்த மானடவரலாற்றின் அலைவீச்சியில் ஏதோஒரு கரையில் ஒதிங்கி உயிர்
வாழ்ந்து கொண்டிருப்பவன். எனது நோக்கம் முதலாளிவர்க்கமும்- இதன் அமைப்பு முறையுமே! இதையாரும் இலங்கைக்குள் காணமுடியும் என்று நினைத்தால்….அது ஒரு
பகல்கனவு.
இதுவரை வந்தஇலங். தலைவர்களில் இவரின் பாத்திரம் மிகையானது.இதை உங்களால்உணர முடியாது கவலைக்குரியது. நான் அவரின் தீர்த்தம் வாங்கி குடிக்கிறேன்
என்று நீங்கள் கருதுதினால்…அது சர்தேசதொழிலாவர்கத்தின் நலனுகே!.கடந்த காலத்தில்
தமி்்மக்கள் யாரிடம் தீர்த்தம் வாங்கி குடித்தார்கள் என்பதை அறிந்தோம்.நீங்கள் காதில்
வைக்கிறபூவும் குடிககிற தீர்த்தமும் சரவதேசமுதாலித்துவ்திற்கு ஆதரவாகவும்சர்வதேச தொழிலாளவர்க்கத்திற்கு எதிராகஇருக்கக் கூடாது என்பதில்
கவனம் செலுத்துஙகள்.
மானிடவாழ்க்கையின் அலைவீச்சு எத்தனை வேகமாக வீசுகிறது சந்திரன் ராஜா, காலமாற்றத்தின் கரைகளீல் ஒதுங்கி எழும்போது எமக்கென்றூ எந்த நாட் களூம் இல்லாமற் போய்விடுகிறது, ஓரிடத்தில் அமர்ந்து உங்களயே உற்றூப்பாருங்கள் உங்களீடம் தமிழ் இருக்கிறது,நகைச்சுவை உணர்வு இருக்கிறது உண்மையாய் தெளீவாய் நீங்கள் எழுத நினைத்தால் ஆகாய்ச் சூரியனை உங்களால் கைப்பற்ற முடியும்.
தியாகு தான் ஒரு மர்ர்கிசய வாதி என்பதை மற் ந்து வெகு நாட்கள் ஆகின்றது அவரது மனைவியும் ஒரு கவிதாயினியே . புலம் பெய்ர்ந்த தமிழர்க்ளின் உதவியால் உலகம் சுற்றுபவர்கள் அவர்கள் புலிகளின் பெயர் சொல்லி பணம் சுர்ட்டிய கும்பலிடம் இருந்து கைக்கூலி பெருபவர்கள் அவர்களை தமிழ் நாட்டில் யாரும் பின்பற்றுவது கிடையாது . அப்பிடிய்ருக்க அவரது கட்டுரைக்கு இத்துனைபின்னூட்டங்கள் தேவையா?
தலவைர் வருவரா என்பது தெரியாது ஆனால் தனித் தமிழ் ஈழத்தைப் போரடிப் பெற்றுக்கொடுப்போம் அதை அவர் கையில் வைத்துக் கொடுப்போம் என்று சொல்லமட்டும் தெரிகிறது. யார் போராட்ப்போகிறார்களாம் . தமிழ் நாட்டில் உள்ள இளித்த வய்த்தமிழன் தானே . தமிழ் நட்டின் முத்துக்குமார் என்ற ஏமளித்தமிழன் தீக்குளித்தான் ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்களில் ஒருவர் கூட தீக்குளிக்கவில்லையே ஏன் என்று கேட்க க்விதாயினிக்குத் தோன்றவில்லையே? எப்ப்டித் தோன்றும் விருந்துக்கு அழைதவனிடம் கேள்விகேட்டால் அடுத்த முறை அழைக்க மாட்டனே!
கவிதாயினிக்கு வக்கலாத்து வங்க விரும்புவோர் குமுதம் இதழிலில் அவர் ,அவருடைய கணவ்ர் தியாகு என்கிற தியகராசன் மற்றும் அவர் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் அவருடைய நேர் காணலை படித்துவிட்டுப் பிறகு எழுதவும்.அதில் சீமான் இல்லை வைக் கோ இல்லை அமெரீக்காவில் தமக்கு பிடித்தவற்றைப் பட்டியல் போட்டுள்ளார். தான் சேலைக் கட்டாமல் சுடிதார் அணிந்து சென்ற்துப் பற்றி எழுதியுள்ளார் அடக்குமூறச் சட்டத்தைப் பற்றி எழுத புலி ஆதரவாளார்கள் யாருக்கும் உரிமை இல்லை அதை அவர்கள் முன்னரே தங்கல் அதலைவருக்கு எடுது உரை த்திரு ந்தால் சில ஆயிரம் தமிழர்கள் உயிர் பிழைத்திருப்பர்
/தமிழ் நாட்டில் உள்ள இளித்த வய்த்தமிழன் தானே . தமிழ் நட்டின் முத்துக்குமார் என்ற ஏமளித்தமிழன் தீக்குளித்தான் ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்களில் ஒருவர் கூட தீக்குளிக்கவில்லையே/ நடந்தது எப்படியுமிருக்கட்டும் , ஒருமனிதனின் தற்கொடையை எவ்வளவு குரூரமாக வெளிப்படுத்த உங்களைப்போன்றவர்களால் முடிகிறது,
கவிதாயினியை இங்கு யார் இழுத்துவந்தார்கள், என்னத்தையோ தீர்ப்பதற்கு எவரையெல்லாமோ கரைந்து கொண்டிருப்பதால் ராஜபக்க்ஷவை உங்களைப்போன்றவர்கள் தவிர எவரும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. எனக்கு மூக்கு அல்லது –த்துப்போனாலும் பரவாயில்லை எதிர் வீட்டுக்காரனுக்கு சகுனம் சரியில்லாமலிருக்கவெண்டுமென எண்ணும் உங்களைப்போன்றவர்களுடன் நேர விரையமே தவிர பலன் பூச்சியம்தான் ,, பெருகட்டும் உங்கள் போன்றவர்களின் மனிதநேயமும் சமூகப்பற்றும்.
கவிதாயிணைப் பற்றிக் கரையக் காரணம் அவர் பாட்டு மட்டும் எழுதி சென்றுவிட்டால் நாம் அதைப் பற்றி விமர்சிக்கப்போவது இல்லை ஆயின் தம்மை புலிகளின் அடுத்த தலைவராக எண்ணிக் கொள்வதால் தான் அவரைப் பற்றி எழுதும் படி நேர்ந்த்தது.
திரைப் பாடல் கவிதாயினி தாமரை அவர்கள் ஈழத்தமிழர் சிக்கல் பற்றி நேர்காணல் அளிப்பதும் அதை குமுதம் , ஜுனியர் விகடன் போன்ற பத்திரிககள் வெளியிடுவதும் நல்ல நகைச் சுவை.
30 நாட்கள் பயணம் செய்தும் அம்மையருக்கு தலைவர் இருக்கும் இடம் .அவர் உயிருடன் உள்ளாரா என்ற செய்தி கூட தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் முள்ளிவாய்க்கால் பகுத்யில் இருந்த்து எப்ப்டியோ தப்பி வன்தவர்கள் சொல்லவதை மட்டும் சொல முடிகீறது.
தலவைர் வருவரா என்பது தெரியாது ஆனால் தனித் தமிழ் ஈழத்தைப் போரடிப் பெற்றுக்கொடுப்போம் அதை அவர் கையில் வைத்துக் கொடுப்போம் என்று சொல்லமட்டும் தெரிகிறது. யார் போராட்ப்போகிறார்களாம் . தமிழ் நாட்டில் உள்ள இளித்த வய்த்தமிழன் தானே . தமிழ் நட்டின் முத்துக்குமார் என்ற ஏமளித்தமிழன் தீக்குளித்தான் ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்களில் ஒருவர் கூட தீக்குளிக்கவில்லையே ஏன் என்று கேட்க க்விதாயினிக்குத் தோன்றவில்லையே? எப்ப்டித் தோன்றும் விருந்துக்கு அழைதவனிடம் கேள்விகேட்டால் அடுத்த முறை அழைக்க மாட்டனே!
முத்துக் குமார் பற்றிய உங்கள் உணர்ச்சிப் புரிந்து கொள்ளக்கூடியதே அனால் அதைவைத்து அரசியல் பண்ணும் தமிழ் தேசியர்கள் பற்றி உங்களுக்குத்தெரியுமா? , முத்துக்குமார் பிணம் இருந்த மேடையில் நடந்த நிகழ்வுகள் உங்களுக்குத் தெரியுமா? கேட்டு உணர்க முத்துக்குமார். உயிர் பெற்று இருந்தால் தமிழ்த் தேசியத் தலைவர்களின் முகத்தில் காறி உமிழ்ந்த்துவிட்டு மீண்டும் ஒருமுறை தீக்குளித்திருப்பான். அது செல்க
ஒரு மாவோயிஸ்ட்டாக தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்த ஒரு மனிதன் சீமான் போன்ற சாதி வெறியர்களுக்காக் வக்கலாத்து வாங்கவும் , பார்ப்பன தல்வியிடம் சரணடையும் கொடுமைஐ நீங்கள் உணராத்து வியப்பளிக்கிறது
எம் போன்ரறவர்களின் மனித நேயம் புலி அதரவாளர்களின் மனித நேயத்தைவிட அதிகம் தான் .
தாமரையின் தலைவன் சூரியன் என்பதால் அவர் சூரியத்தேவன் உயிரோடிரிருக்கிறார் என்பது தவறல்ல அது மட்டுமல்ல எங் கே குரல் கொடுக்க வேண்டுமோ அங்கு எல்லாம் அவர் குரல் கொடுக்கிறார்,ஒரு தமிழராய் அவர் தமிழ் சினிமாவில் வாழ்வதே சிரமம் இதற்கும் அப்பால் அவர் தமிழ் உண்ர்வோடிருக்கிறார்.சீமானின் சாதி வெறீ என்பதே உங்கள் மீது சந்தேகத்தை எற்படுத்துகிறது?அவரவர் நம்பிக்கையில் தலையிட நாம் யார்?முதலில் நம்மைத் திருத்துவோம்.
நல்ல் காமெடி தலவன் என்ரறால் உயுருடன் இருக்கிறரா என்பதுக்கூட தெரியாமல் கண்ணை மூடிக்கொள்ள வேண்டுமா? அவ்வாரு செய்ர்தவற்கு பெயர் அரசியலா? மூள்ளிவய்க்கால் முடி ந்து 1 வருடம் ஆகியும் தலவனின் நிலை தெரியாமல் மக்களை ஏமாற்றுவது சரியாகுமா? சூரியதேவனை உயிருடன் இருப்பதாக காட்டுவதில் அவர்களுக்கு அரசிய,ல் .பொருளாதர ஆதாயம் இருக்கிறது.
சீமானின் சாதி வெறி தமிழ் உலகம் நன்கு அறி ந்த்தது. தேவர் சிலைக்கு மாலை அணிவித்து தன்னுடைய அரசியல் வழ்க்கையினைத் துவக்கியவர் அவர். நீங்கள் அய்யப்பட வேண்டியது அவரைத்தான் எம்மை அல்ல
திரு.துரை இளம்முருகன் நடந்ததை மறந்து கதைக்காதீர்கள். எம்மிடம் ஏமாந்தவர் ஒருவர்
தான் இருந்தார். முத்துக்குமாருக்கு பதிலாக முருகதாஸ் இருந்தார்.இவருக்கும் ஒரு வித்தியாசம் தான் இருந்தது.
முத்துக்குமார் தமிழ்நாட்டில்லிருந்து டாக்டர் ராமதாஸ் அனுப்பப்பட்டு தமிழ்என்றால் பிரபாகரன் …. பிரபாகரன் என்றால் தமிழ்என்று சத்தியம் எடுத்துவந்தார்.
அதே சத்தியத்தை முருகதாஸ் லண்டனுக்கு வரும்போது அல்லது லண்டலில் இருந்து
போய் எடுத்திருந்தார். ( இதுவும் புலிகளின் போராட்ட ரகசியங்கள் போல் வெளிவராதவை)
முத்துக்குமார் இந்தியாவின் அரசியல்அடையாளம் கொண்ட இடத்தில் மண்ணென்னை
ஊற்றி நெருப்பு தட்ட வைத்தோம் என்றால்… நாங்கள் அதைவிட சற்றுபெறுமதியான பெற்றோல் ஊற்றி உலகத்தில் அரசியல்அடயாளம் கொண்ட இடத்தில் நெருப்பு தட்டி வைத்தோம்.
வேண்டுமானால் நாங்கள் பதினொட்டு.நீங்கள் ஒன்று என்று சண்டை போடலாமே
ஒழிய ஏதும் செய்யவில்லை என்று சொல்லமுடியாது.
விரலுக்கு ஏற்ற வீக்கம் தானே. எங்களால் முடிந்தது அவ்வளவு தான்.
நன்றி இது ஒரு புது செய்தி. புலிகள் பற்றிய செய்திகளிலெது பொய் எது மெயென்பதை முடிவு செய்யவே இயலவில்லை
தொடர்ந்து வாருங்கள். இன்னும் நிறையவே இருக்கிறது.
போகிற இடமெல்லாம் சண்டை பிடிப்பதால் எனக்கு ஆதரவாக எவரும் கருத்துச் சொல்வதில்லை. நீங்கள் ஆதரவு தந்திருக்கிறீர்கள். அதுவும் நிரந்தரமாக இருக்குமா?
என்பது சந்தேகப்படுவதில் நியாயம் இருக்கிறது என்று நினைக்க வேண்டும் தமிழ்மாறன்.
சூரியனை கைப்பற்றி நான் என்னசெய்ய? யாரும் கவிஞர்கள் வழியில் அகப்பட்டால் இநத
அறிவுரையை அவர்களிடம் சொல்லுங்கள்.
எனக்கிருக்கிற ஆசை இறுதிவரைக்கும் ஒழுங்காக வீட்டுவாடகை கொடுத்திட வேண்டும்
கடைவரை மணைவி வீட்டைவிட்டு துரத்திவிடக் கூடாது.அரசியல் ரீதியில் உள்நாட்டு
யுத்தம் முடிவுக்கு வந்ததில் தூக்கத்தையாவது ஒழுங்காக செய்யமுடிகிறது.
தமிழ்நாட்டில் பாப்பாபட்டி கீரிப்பட்டி மக்கள் சென்னை பட்டணத்திலை கம்பீரமாக நடக்கவும் நச்சதிர ஹோட்டலில் தங்கிவருகிற வசதிகள் கிடைக்கிறவர்களாக மாற்றியாக வேண்டும்.
அதற்கு முதல் இவர்கள் பெயரை வைத்து இவர்களுக்கா தங்கிறவர்களை தடுப்பதாக
இருந்தால் இவர்களுக்கு இலசவச-கட்டாய கல்வித்திட்டத்தை கொண்டுவர வேண்டும்.
காமராஜர்ர்க்குப் பிறகு தமிழ்நாட்டிக்கு இன்னும் யாரும் வரவில்லை.
றோட்டு போடுகிறோம் விளக்கு கம்பம் வைக்கிறோம் என்கிற வாக்குறிகளை எல்லாம்
இந்த கல்விக்கு பின்னால் அமையமுடியும் என்பதை புரியவைக்கிற அரசியலைத் தொடங்கவேண்டும். இதுவே எனது ஆகக்கூடிய ஆசையும் இறுதி விருப்பமும்.
/போகிற இடமெல்லாம் சண்டை பிடிப்பதால் எனக்கு ஆதரவாக எவரும் கருத்துச் சொல்வதில்லை. நீங்கள் ஆதரவு தந்திருக்கிறீர்கள். அதுவும் நிரந்தரமாக இருக்குமா?
என்பது சந்தேகப்படுவதில் நியாயம் இருக்கிறது/
கோடரிக்காம்புகள் போகிற இடமெல்லாம் கொத்து வெட்டுத்தான் , அதை மனதார ஒப்புக்கொண்டதற்கு நன்றி, திருந்தி நடக்கப்பாருங்கள் , திருந்தினால் உங்களை நோக்கி சமூகத்தின் கருணைப்பார்வை திரும்ப நிறைய சந்தற்பமிருக்கிறது, மற்றும்படி நீங்கள் நினைப்பதுபோல் உலகம் இயங்கவேண்டும் என நினைப்பதுகூட ஒருவித நோய் என்று நான் சொல்லவில்லை அறிவியல் பகர்ந்திருக்கிறது, இயற்கைக்குட்பட்டு சமூக நீரோட்டத்துடன் நங்கள் போவதுபோல நீங்களும் முயற்சித்தீர்களானால் அந்திம காலத்திற்குள் ஆச்சரியம் நிறையவே காணலாம் முயற்சியுங்கள்,
யேசு நாதர் செல்வது போல் சொன்ன வார்த்தைகள் உங்களுக்கும் நினைவு படுத்த வேண்டும் கானல். “அறியாமல் செய்கிற பாவத்தை மன்னித்து விடும்.”
பொருளாதாரவெறியால் இயற்கையே பலமாக அடிக்குமேல் அடி
வாங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் ஏன் என்னை பற்றி கவலைப் படுகிறீர்கள்?.
அது சரி கானல் > சமூக நீரோட்டத்துடன் நாங்கள் போவது போல்..>
இதென்ன புது பாஷையாக இருக்கிறது?. வந்த இடத்தில் இப்படியான தடங்களை முழுமையாக நான் காணவில்லையே? அது என்ன சமூக நீரோட்டம் என்று தெளிவு படுத்த
முடியுமா? திரு.கானல்.
எனக்காக இல்லாவிட்டாலும் உலகில் வாழும் பத்தில் ஒன்பது ஜீவன்களுக்காக நிச்சியம்
நீச்சல் அடிப்பேன். அதை விரைவாகத் தெளிவு படுத்துங்கள். அதிக அளவு விபரம் தேவையில்லை. இதே பின்னோட்ட வரிகளை அடக்கினாலே போதுமானவை.