Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையின் மாகாண பொருளாதார வளர்ச்சி குறித்து இலங்கை மத்திய வங்கி .

இலங்கையின் மாகாண பொருளாதார வளர்ச்சி குறித்து இலங்கை மத்திய வங்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இலங்கையின் மாகாண பொருளாதார வளர்ச்சி குறித்து இலங்கை மத்திய வங்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், போரிலிருந்து மீண்டிருக்கும் வட மாகாணம், 2010ஆம் ஆண்டில் 22.9 சதவீத உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சியை கண்டிருப்பதாகக் கூறியிருக்கிறது. 2009ஆம் ஆண்டில் இது 12.1 சதவீத வளர்ச்சியாக இருந்தது. மத்திய வங்கியின் கணிப்பீட்டின்படி இது ஒரு துரித வளர்ச்சியாகும்.

போர் முடிந்த குறுகிய காலகட்டத்தில் இது போன்ற ஒரு பொருளாதார வளர்ச்சியை வட மாகாணம் பெற்றிருக்கிறது என்று இலங்கையின் மத்திய வங்கி கூறியிருப்பதில் எந்தவிதமான ஆச்சரியமும் கிடையாது என்று இலங்கைப் பொருளாதாரப் பகுப்பாய்வாளர் முத்துக்கிருஷ்ணன் சர்வானந்தா கூறுகிறார்.

ஏனெனில், 2009ஆம் ஆண்டு என்பது போரின் உச்சக்கட்ட ஆண்டு என்றும் அப்போது வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்தைத் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களும் போரினால் சூழப்பட்டு மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறும் சர்வானந்தா, அதனை அடுத்த ஆண்டுகளில் அப்போது இருந்த நிலையை விட இரு மடங்கு மொத்த உற்பத்தி ஏற்படுவது என்பது வழமையானதுதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2009ஆம் ஆண்டில் இது 12.1 சதவீத வளர்ச்சியாக இருந்தது. மத்திய வங்கியின் கணிப்பீட்டின்படி இது ஒரு துரித வளர்ச்சியாகும்.

போர் முடிந்த குறுகிய காலகட்டத்தில் இது போன்ற ஒரு பொருளாதார வளர்ச்சியை வட மாகாணம் பெற்றிருக்கிறது என்று இலங்கையின் மத்திய வங்கி கூறியிருப்பதில் எந்தவிதமான ஆச்சரியமும் கிடையாது என்று இலங்கைப் பொருளாதாரப் பகுப்பாய்வாளர் முத்துக்கிருஷ்ணன் சர்வானந்தா கூறுகிறார்.

ஏனெனில், 2009ஆம் ஆண்டு என்பது போரின் உச்சக்கட்ட ஆண்டு என்றும் அப்போது வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்தைத் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களும் போரினால் சூழப்பட்டு மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறும் சர்வானந்தா, அதனை அடுத்த ஆண்டுகளில் அப்போது இருந்த நிலையை விட இரு மடங்கு மொத்த உற்பத்தி ஏற்படுவது என்பது வழமையானதுதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version