Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

“உண்மையான உலக அரசியல் அதிகாரத்தை” நிறுவ வேண்டும்!!!:போப் அறைகூவல்.

 

செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் உள்ள இடை வெளியை அதிகரிக்கும் பொருளாதார அமைப்பை புறந்தள்ளிவிட்டு, பொருளாதாரத்தை மேற்பார்வையிடு வது டன் பொதுவான மக்கள் நன்மைக்காக உழைக்கும் “உண்மையான உலக அரசியல் அதிகாரத்தை” நிறுவ வேண்டுமென்று போப் 16வது பெனடிக்ட் அறைகூவல் விடுத்துள்ளார்.

நடைமுறையில் உள்ள உலக பொருளாதார அமைப்பை அவர் கடுமையாக விமர்சித்தார். பாவங்களின் பாதகமான தாக்கங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன என்றும், நிதியாளர்கள் தங்கள் நடவடிக்கைகளில் நற்குண அடித்தளங்களை மீண்டும் உண்மையாகவே நிறுவ வேண் டும் என்று அவர் தம்முடைய மூன்றாவது “உண்மையில் கருணை” கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தகத்தில் ‘பெரும் சமூகப் பொறுப்பு’ இருக்க வேண்டும் என்று அவர் எழுதியுள்ளார். லாபம் ஒன்றே தனிப்பட்ட இலக்காக மாறிவிட்டால், அந்த லாபமும் தவ றான வழிகளில், பொதுவான நன்மைகளை இலக்காகக் கொள்ளாமல் ஈட்டப்பட்டால், அது செல்வத்தை அழிக் கும் அபாயம் கொண்டது என்பதுடன் வறுமையையும் உருவாக்குகிறது என்று வாடிகனில் வெளியிடப்பட்ட கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சந்தைப் பொருளாதாரம் மிகச் சிறப்பாகச் செயல்பட வேண்டுமென்றால், அதற்குள்ளாகவே வறுமையின் பங்கும் வளர்ச்சிக் குறைவும் இருக்க வேண்டிய தேவை உள்ளது என்று கூறுவது தவறானது என்றும் அவர் தம் கடிதத்தில் எழுதியுள்ளார். மேலும் நடப்பு பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமென்றால் ஏழை நாடுகளுக்கு வளர்ச்சி நிதி வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் அனைவரிடமும் செல்வம் உருவாகும் என்று அவர் தம் கடிதத்தில் எழுதியுள்ளார்.

உலகப் பொருளாதாரம் தனிப்பட்ட நாடுகளால் கட்டுப்படுத்த முடியாத நிலையை அடைந்துவிட்டது என்று போப் குறிப்பிடுவதாக சேவியர் பல்கலைக் கழக பேராசிரியர் ஜான் ஸ்நீகோக்கி குறிப்பிடுகிறார். போப் கடிதம் உலகமய எதிர்ப்பு தடத்துக்கும், அரசின் வெள்ளை அறிக்கைக்கும் இடைப்பட்டே நின்று விடுவதுடன் வலது மற்றும் இடதுசாரி அரசியல் பொருளாதார வகைக்குள் அடங்காமல் நழுவிச் செல்கிறது. சர்வதேச நிதியமும் உலக வங்கியும் மூன்றாம் உலக நாடுகளின் சமூக நலத்திட்டங் களை குறைத்துவிட்டன என்றும் போப் குற்றம் சாட்டு கிறார் என்று ஜான் ஸ்நீகோக்கி கூறுகிறார்.

Exit mobile version