Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

“இந்தியா எமக்கு மிகவும் பலமாகவுள்ளது. நாம் இரகசியமாகப் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருகின்றோம்”:இலங்கை வெளிவிவகார அமைச்சர்.

28.03.2009.

“இந்தியா எமக்கு மிகவும் பலமாகவுள்ளது. நாம் இரகசியமாகப் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருகின்றோம் .இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைக்கு இந்தியா பேருதவி வழங்கியிருப்பதாக ”   இலங்கை வெளிவிவகார  ரோகித்த போகல்லாகம ‘த ஹின்டு’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் நிபுணத்துவம் வாய்ந்த வகையிலும், பொறுப்பு வாய்ந்த வகையிலும் முன்னெடுக்கப்படுகிறது என சங்கப்பூரிலிருந்து வழங்கிய செவ்வியில் அவர் கூறியுள்ளார்.
இராணுவ ரீதியான வெற்றியில் தாம் அவசரம் காட்டவில்லையெனக் குறிப்பிட்டிருக்கும் போகல்லாகம, மனித உரிமை நிலைமைகளையும் கவனத்தில் எடுத்திருப்பதாகத் தெரிவித்தார். 

 

Exit mobile version