Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

‌மீனவ‌ர்க‌ள் காலவரைய‌ற்ற வேலை ‌நிறு‌த்த‌ம் : கட‌ற்கரை வெ‌றி‌ச்சோடி காண‌ப்படு‌கிறது.

இல‌ங்கை கட‌ற்படை‌யினரா‌ல் து‌ப்பா‌க்‌கி முனை‌யி‌ல் ‌சிறை ‌பிடி‌த்து செ‌ல்ல‌ப்ப‌ட்ட த‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் 21 பேரையு‌ம் ம‌ற்று‌ம் அவரது 5 படகுகளையு‌ம் ‌விடு‌‌வி‌க்க கோ‌ரி ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் காலவரைய‌ற்ற வேலை ‌நிறு‌த்த‌ப் போ‌ரா‌ட்ட‌த்‌தில‌் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

இ‌ந்த வேலை ‌நிறு‌த்த‌‌ப் போரா‌ட்ட‌த்‌தா‌ல் 10 ஆ‌யிர‌த்‌தி‌ற்கு‌ம் மே‌ற்ப‌ட்ட படகுக‌ள் கடலு‌க்கு செ‌ல்ல‌வி‌ல்லை. இதனா‌ல் கட‌ற்கரை வெ‌றி‌ச்சோடி காண‌ப்படு‌கிறது.

இ‌ந்த ‌நிலை‌யி‌‌ல், இலங்கைக் கடற்படையினர் செய்துவரும் அட்டூழியத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ‌மீனவ‌ர்க‌ள் ச‌ங்க‌ம் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்‌றியு‌ள்ளது.

மேலு‌ம் இப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வரை‌யி‌ல் காலவரம்பின்றி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது எனவும் அச் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

Exit mobile version