Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

‌திரு‌ச்‌சி‌‌யி‌ல் ராணுவ அலுவலகம் முற்றுகை!

இலங்கையில் அ‌ப்பா‌வி த‌மிழ‌ர்க‌ள் ‌மீது ‌ ராணுவ‌ம் நட‌‌த்‌தி வரு‌ம் கொடூர தா‌க்குதலை க‌ண்டி‌த்து‌ம், இல‌ங்கை அரசு‌க்கு ம‌த்‌திய அரசு வழ‌ங்‌கி வரு‌ம் ஆயுத உத‌வியை ‌நிறு‌த்த‌க் கோ‌ரியு‌ம், உடனடியாக அ‌ங்கு போர் நிறுத்த‌ம் செ‌ய்ய வலியுறுத்தியு‌ம் திருச்சியில் உள்ள இந்திய ராணுவ அலுவலகத்தை மாணவர்கள் இ‌ன்று முற்றுகையிட்டனர்.

இதனால் அப்பகுதி பெரும் பதட்டத்துக்குள்ளானது. தகவ‌ல் அ‌றி‌ந்து காவ‌ல்துறை‌யின‌ர் ‌விரை‌ந்து வ‌ந்து மாண‌வ‌ர்களை கைது செ‌ய்தன‌ர்.

அ‌‌ப்போது, ம‌த்‌திய அரசு‌க்கு எ‌‌திராகவு‌ம், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியு‌ம் மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

Exit mobile version