இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருவதாக இருந்தது. தற்போது காலவரையின்றி இது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வடக்கு இல்லினாய்ஸ் மாவட்ட அமெரிக்க அரசு வழக்கறிஞர் அலுவலகம் கூறுகையில், சிகாகோ மாவட்ட கோர்ட்டில் ஹெட்லியின் காவல் மற்றும் தொடக்க கட்ட விசாரணை குறித்த மனு வெள்ளிக்கிழமை வருவதாக இருந்தது. தற்போது இது ரத்து செய்யப்பட்டுள்ளது. திட்டமிட்ட நாளில் இது நடைபெறாது. புதிய தேதியும் தீர்மானிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ட
மாஜிஸ்திரேட் அர்லான்டர் கீஸ் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வருவதாக இருந்தது. விசாரணை ஏன் திடீரென ரத்து செய்யப்பட்டு காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஹெட்லியின் வழக்கறிஞர் ஜான் தீஸும் கருத்து தெரிவிக்கவில்லை.
அதேசமயம், இன்னொருவரான ராணா மீதான விசாரணை திட்டமிட்டபடி வருகிற புதன்கிழமை நீதிபதி நான் நோலா முன்பு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.