Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஹிலாறி கிளின்டன்; மோனிக்க லெவன்ஸ்கியின் கதையை மறந்துவிட்டார்!:இலங்கை பிரதமர் .

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாறி கிளின்டன் மோனிக்க லெவன்ஸ்கியின் கதையை மறந்துள்ளார். ஏனைய நாடுகளில் காணப்படும் பெண்கள் துஷ்பிரயோகம் குறித்து குற்றம் சாட்டுவதை விடுத்து அவர் தனது பின்புலம் குறித்து கவனம் செலுத்த வேண்டுமென பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க வானொலியொன்றுக்கு இன்று காலை வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் ஹிலாறி கிளிண்டன் இலங்கை உட்பட யுத்தம் இடம்பெறும் பல நாடுகளில் பெண்கள் பாலியல் வல்லுறவிற்குட்படுவதாக தெரிவித்திருந்தார்.இதனையடுத்து இது குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விளக்கமளித்து அறிக்கையொன்று வெளியிட்டதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹிலாறி கிளிண்டனின் கணவர் பில் கிளிண்டன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த சமயம் அவரது ஊழியரொருவரான மோனிக்க லெவின்ஸ்கியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இலங்கைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் இலங்கை மீது போர் குற்றங்களை தாக்கல் செய்ய முனைந்துள்ளதாகவும் சில அரசாங்க அதிகாரிகள் மீது குற்றங்கள் சாட்டியிருந்ததாகவும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

விசேட விருந்தினர் போக்குவரத்திற்காக வீதிகள் மூடப்பட்டிருந்த சமயம் ரொபேர்ட் ஓ பிளேக் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்புவதற்காக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து வேறொரு இடத்திற்கு நடந்து சென்றதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version