இன்று இரண்டாவது முறையாக கோல்கத்தா நகருக்கு வரும் ஹிலாரி கிளிண்டன், நாளை மேற்கு வங்க செயலர்கள் மட்டத்திலான கூட்டத்தில் பேசுவார் என்றும், மேற்கு வங்கத்தின் முதல் பெண் முதல்வர் மம்தா பானர்ஜியைச் சந்திக்க வுள்ளதாகவும் தெரிகிறது.
இந்தச் சந்திப்பின்போது, சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு, வங்கதேசத்துடனான உடன்படிக்கைகள் ஆகியவை குறித்து விவாதிக்கவுள்ளதாகத் தெரிகிறது. அவர்களது சந்திப்பில் இந்த இரண்டும் முக்கிய இடம்பெறுகின்றன.
சில்லரை வர்த்தகத்தில் பல்தேசியக் கம்பனிகளின் முதலீடு அமரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகளில் பல்லாயிரக்கணக்கானோரைப் பலிக்கடா ஆக்கியுள்ளது. சிறிய நிறுவனங்களை விழுங்கிய பெரு ஒரு சில விரல்விட்டு எண்ணக்கூடிய பெரு நிறுவனங்கள் மலிவான கூலிகளையும் உள்வாங்கிக் கொள்கின்றன. தொழிலாளர்கள் மீதான நேரடி ஒடுக்குமுறையும் சிறிய முதலீடுகளின் அழிவும் ஐரோப்பாவில் இத்தாலி, கிரேக்கம், இஸ்பானியா போன்ற நாடுகளின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. கிரேக்கத்திலும் இத்தாலியிலும் பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்தியா போன்ற வறிய நாடுகளில் இந்த முதலீடு பெரும் அழிவையே ஏற்படுத்தும்.
அமரிக்காவின் பார்வை பட்ட எல்லா நாடுகளிலும் போரும் மனித அழிவுகளுமே எஞ்சியுள்ளன. இந்தியாவில் நேரடியான தலையீட்டுக்குத் தயாராகிவிட்ட அமரிக்கா பெரும் அழிவுகளை ஏற்படுத்தும் என எதிர்வுகூறப்படுகின்றது.