Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஹிலாரி கிளின்டன் சவுதி அரேபிய சர்வாதிகார மன்னருடன்..

அமரிக்க ராஜங்க செயலர் ஹிலாரி ரொட்டாம் கிளிங்டன் அமரிக்காவின் நெருங்கிய நாடான சௌதி அரேபிய மன்னர்ரும் சர்வாதிகாரியுமான மன்னர் அப்துல்லாவைச் சந்தித்தார். சிரிய அரசு மீதான தாக்குதல்கள் குறித்தே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது சவுதி அரேபிய உளவுத்துறையைத் தலைவரான மோகன் பின் அப்துல் அஸீஸ், பாதுகாப்பு அமைச்சர் சல்மன் பின் அப்துல் அஸீஸ் ஆகியோரும் உடன் இருந்தனர். இதே வேளை அமரிக்க ஆதரவு நாடுகளும் சர்வாதிகாரிகளின் ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளுமான பஹ்ரெயின், காட்டார், ஒமான், குவைத் ஆகிய நாடுகளின் அரச அமைச்சர்களும் கிளிங்டனை சனி – 31.03.2012 – அன்று சந்திக்கின்றனர். சிரிய சர்வாதிகார ஆட்சியின் ஒடுக்கு முறையை ஆயுதமாகப் பயன்படுத்தி அந்த நாட்டின் வளங்களை அபகரிக்க மேற்கு நாடுகள் அனைத்து முயற்சிகளையும் அமரிக்கா தலைமையில் மேற்கொள்ளும் அதே வேளை அமரிக்காவிற்கு ஆதரவாக அரபு நாடுகள் சிலவும் அணி சேர்ந்துள்ளன.

Exit mobile version