உலகம் முழுவதிலும் உற்பத்தி சுரண்டலில் ஈடுபட்டிருக்கும் அமரிக்கா, அதனை ஆசியாவில் முழுஅளவில் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாக அவதானிகள் கருதுகின்றனர். மத்திய கிழக்கு மற்றும் பால்கன் நாடுகளோடு ஒப்பு நோக்கும் போது ஆசியப் பிராந்தியத்தில் போர் அழிவுகள் குறைந்த அளவிலேயே காணப்பட்டன. ஆசியாவில் அமரிக்காவின் நேரடித் தலையீடு போர்ச் சூழலை உருவாக்கும் என ஜனநாயக சக்திகள் அச்சம் தெரிவிக்கின்றனர். சீனா போன்ற துருவ வல்லரசுகளின் போட்டியை எதிர்கொள்வதற்கு அமரிக்காவிற்கு ஆசியத் தலையீடு அவசியமானதாகக் கருதப்படுகிறது.