Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஹிரோஷிமா அழிவு 65-ஆம் ஆண்டு நினைவு தினம்.

அமெரிக்க ஏகாதிபத்தி யம் வீசிய நாசகர அணு குண்டால் ஏற்பட்ட அழிவு வேலைகளின் 65ம் நினைவு நாள் ஜப்பானின் நாக சாகியில் கடைப்பிடிக்கப் பட்டது. இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் பிரிட் டன் மற்றும் பிரான்ஸ் நாடு களின் பிரதிநிதிகள் முதல் முறையாகக் கலந்து கொண் டனர்.இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரண டைய விரும்புவதாக அறி வித்த பின்பு இரண்டு குண்டு களையும், அமெரிக்கா அதன் மீது வீசியது. அமெரிக்கா வின் அணுகுண்டு சோத னைக்கு ஜப்பானிய மக்கள் சோதனைக் கூட வெள் ளெலிகளாகப் பயன்பட்ட னர். இன்று வரை 65 ஆண் டுகளில் அணுகுண்டால் தாக்கப்பட்ட ஒரே நாடு ஜப்பான் என்பது குறிப் பிடத்தக்கது.திங்களன்று நாகசாகி நிகழ்ச்சியில் அமெரிக்க பிரதிநிதி கலந்து கொள் ளவில்லை. ஹிரோஷிமா நிகழ்ச்சியில் அமெரிக்க தூதர் கலந்து கொண்டார். அணு வல்லரசுகளான மூன்று நாடுகளும் இவ்விரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண் டது, அணு ஆயுத ஒழிப்பு முயற்சிகளுக்கு ஊக்கம் அளிக்கும் என்று முதலா ளித்துவ ஆதரவு ஏடுகள் கூறுகின்றன.அணு ஆயுதத்தால் தாக் கப்பட்ட ஒரே நாடு என்ற முறையில் அணு ஆயுதமற்ற உலகை அடையும் முயற்சி களுக்கு தலைமையேற்கும் தார்மீகப் பொறுப்பு ஜப் பானிடம் உள்ளது என்று ஜப்பான் பிரதமர் நவோடா கான் நினைவஞ்சலிக் கூட் டத்தில் மீண்டும் வலியுறுத் தினார். திங்கட்கிழமை யன்று காலை 11.02 மணிக்கு (1945ம் ஆண்டில் ஆகஸ்ட் 9 அன்று நாகசாகியில் அணு குண்டு வெடித்த நேரம்) ஒரு நிமிடம் மவுனம் கடைப் பிடிக்கப்பட்டது.முன் அலுவல் காரண மாக அமெரிக்க தூதர் ஜான் ரூஸ் நாகசாகி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிய வில்லை என்று அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.அணு ஆயுத ஒழிப்புக் காக உலக அணு வல்லரசு கள் பணியாற்ற வேண்டும் என்றும், அதில் ஜப்பான் தலைமைப் பாத்திரம் ஏற்று அணு ஆயுதங்களைத் தடை செய்யும் .நா. பொதுச் செயலாளர் பான் கிமூனின் அறை கூவலுக்கு உதவ வேண்டும் என்று நாக சாகி மேயர் டோமிஹிசா டாவே கூறினார்.

Exit mobile version