இந்த நிலையில் மோடி என்றால் யார் என்று இந்திய அரசியல் செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான அருந்ததி ராய் கூறுகின்றார்.
‘நரேந்திர மோடி ஆர்.எஸ்.ஏஸ் என்ற அமைப்பின் உறுப்பினர். 1927 ஆம் ஆண்டு இந்த அமைப்பு உருவாக்க்மப்பட்டது. இத்தாலிய பாசிஸ்டான முசோலினியின் கருத்துக்களால் ஆட்கொள்ளப்பட்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. வெளிப்படையாகவே அவர்கள் ஹிட்லரைப் போற்றுகிறார்கள். அவர்களின் நூல் சொல்லும் சில விடையங்கள்;….’ என்பன போன்ற கருத்துக்களோடு அருந்ததி ராய் ஆரம்பிக்கிறார்.
நூல் கூறும் மிக அருவருப்பான சிலவற்றை அருந்ததிராய் கூறுகின்றார்…
‘யூதர்களைப் படுகொலை செய்து ஜேர்மனியைத் தூயமைப்படுத்திய வரலாறு இந்துக்களுக்கு சிறந்த பாடம்….
‘ஹிந்துஸ்தான் (இந்தியா), இந்துக்களின் பூமி, அதில் இந்துக்கள் இந்து தேசமாக வாழ வேண்டும் வேண்டும். ஏனைய அனைவருமே தேசிய நோக்கத்திற்கு எதிரிகள், துரோகிகள், ..
பௌத்த பேரினவாதி அனகாரிக தர்மபாலவிலிருந்து ராஜபக்ச வரை பேசியது போல் இல்லை?
இவரைத் தான் தமிழ்த் தேசிய வாதி என்றும் ஈழத் தமிழர்களுக்காகப் போராடுகிறோம் என்றும் கூறும் வை.கோபாலசாமி ஆதரிக்கிறார். நெடுமாறன் கூட்டுவைத்திருக்கிறார்.
ஈழத் தமிழர்களின் இரத்தம் தோய்ந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தும் இந்தக் கும்பல்கள் தமது தலையீட்டி நிறுத்தினாலே ராஜபக்ச போன்ற பாசிஸ்டுக்கள் நீண்டகாலம் அரசியல் நடத்த முடியாது.
ஒடுக்கப்படும் ஈழ மக்களின் அவலத்தை அவமானப்படுத்தும் இவர்கள் நிறுத்தப் போவதில்லை. ஹிட்லரினதும் முசோலினியினதும் இன்றைய முகங்களான ராஜபக்சவிற்கு எதிரான போராட்டம் மோடிக்கும் எதிரானது தான்.
இந்தியாவிப் பல்தேசிய முதலாளிகளின் விருப்பு பிரதமர் வேட்பாளராக மோடி தெரிவு செய்யப்பட்டுள்ளார். எனென்றால் அவர் பெருந்தொகையான தனியார் முதலீடுகளை அனுமதிக்கிறார். அவ்வாறு பணம்பார்ப்பதற்கான நிலையை ஏற்படுத்தினால் கொலை பாலியல் வன்புணர்வு என்பன பெரிய தவறாகத் தெரியாது என்று ராய் கூறுகின்றார். இது தான் ராஜபக்சவிற்கும் நடைபெறுகிறது.