ஈவ் டீசிங் வழக்கை தொடர்ந்து உத்தர பிரதேச மாநில பிஜ்னோர் நீதிபதி அளித்த தீர்ப்பில், ஜீன்ஸ்,கருப்பு உடை, நகை மற்றும் மொபைல் போன்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
இந்த தீர்ப்பின் மூலம் ஈவ் டீசிங் தவிர்க்கப்படும். நாகரீக உடைகளை அணிந்தால் பிரச்சனைககளில் இருந்து தப்பிக்கலாம் என்று கூறியுள்ளார்.
இனிமேல் இவற்றிலிருந்து தப்புவதற்காக முகமூடி அல்லது பர்தா அணிந்து வரச்சொன்னாலும் வியப்படைவதற்கு இல்லை. தெற்காசிய நாடுகளில் பெண்களை வதைப்பதும் மிரட்டுவதுமே அவர்களைக் கவர்வதற்கான வழிமுறை என்று கருதும் பிந்தங்கிய இளைஞர் சமூகத்திற்கு தீனி போடும் இந்த நீதிபதி போன்றவர்கள் உலகமயமான அழிவுக்கலாச்சரத்திற்கும் பிந்தங்கிய நிலப்பிரபுத்துவக் கலாசாரத்திற்கும் பாலம் அமைத்துக்கொடுப்பவர்கள்.