சுரங்கத் தொழில் துறை அரசிற்கு அதிக வருமானம் வழங்கும் தொழில் துறையாக இல்லாத காரணத்தால், அதற்கான உதவிகளையும் மானியங்களையும் 60 வீதத்தால் குறைப்பதென ஸ்பானிய அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் சுரங்கத் தொழிலை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பாடுள்ளதால் 8 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. தவிர, இதனோடு தொடர்புடைய உப தொழில்களில் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை உருவாகியுள்ளது.
பொருளாதாரத்தைக் காப்பாற்றுவது என்ற தலையங்கத்தில் தனியார் வங்கிகளுக்கு இலவசமாகப் பணத்தை வழங்கும் அரச அதிகாரம் இந்தத் தொழிலாளர்கள் குறித்துத் துயர் கொள்ளவில்லை.
சுரங்கப் பகுதிகளுக்குள் அரச படைகளை நுளைய விடாமல் தடுக்க முனையும் தொழிலாளர்களும், போராட்டங்களை நடத்தவிடாமல் தடுக்கும் அரச படைகளும் என ஐரோப்பாவின் குறிப்பிடத்தக்க பொருளாதார நாட்டினுள் மக்கள் போராட்டம் உத்வேகத்துடன் ஆரம்பித்துள்ளது.