
நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல், சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷீத் ஆகியோர் அதில் பங்கேற்றார்கள். அட்டார்னி ஜெனரல் ஜி.இ. வஹன்வதி, தொலைத் தொடர்புத்துறைச் செயலர் சந்திரசேகர் ஆகியோரும் அதில் பங்கேற்றனர்.
கடந்த வாரம், நார்வே அமைச்சர் டெல்லி வந்து கபில் சிபலிடம் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் அன்னிய மூலதன சுரண்டலுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் இந்திய அரசு தீர்ப்பிற்கு எதிராகச் செயற்படலாம் என அரசியல் வட்டாரங்களில் கருத்துத் தெரிவிக்கப்படுகிறது.