Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஸ்பானியப் போலிஸ் ஆர்பாட்டக்காரர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்தியது

பல்தேசிய நிறுவனனங்களது அடியாளான ஸ்பானிய அரசிற்கு எதிராக நேற்று ஸ்பானிய மக்கள் பெரும் போராட்டத்தை நடத்தினர். மக்கள் உழைப்பின் மீதான வரியை அதிகரித்தும், பல்தேசிய நிறுவனங்களுக்கான வரிகளைக் குறைத்தும், தொழிலாளர்கள் போராடிப்பெற்ற சமூக உதவித்தொகைகளைக் நிறுத்தியும் நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்திய ஸ்பானிய அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் ‘காங்கிரசைச்ச் சுற்றிவளைக்கும் போராட்டம்’ (Rodea el Congreso) எனப் பெயரிடப்பட்டிருந்தது.
போராட்டம் நடைபெறுவதை எதிர்கொள்ளும் வகையில் பாராளுமன்றத்தைச் சுற்றிப் பல அடுக்குகள் வேலி போடப்பட்டிருந்தது. வரும் வழியிலேயே போராட்டக்காரர்களைப் போலிஸ் தடுத்து நிறுத்தியது. அவர்களது அடையாளங்களைப் பதிவிடும் முயற்சியில் போலீஸ் ஈடுபட்டது. அத்தனையையும் மீறி ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் கலந்துகொண்டு பாராளுமன்றத்தைச் சுற்றி வளைத்தனர்.

கலகத்தடுப்புப் போலீஸ் படை மக்களால் சுற்றிவளைக்கப்பட்ட போது அது போலிசாருக்கும் மக்களுக்கும் இடையேயான மோதலாக தோற்றமளித்தது.
இறுதியில் போலீஸ் படைகளுக்கள் போராட்டக்காரர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல்கள் மேற்கொண்ட போது போராட்டக்காரர்கள் அதனை எதிர்கொண்டனர்.

Exit mobile version