ஸ்னோடெனைக் கொலைசெய்வதற்காகப் பல அமெரிக்க உளவுத்துறையினர் அலைந்து திரிவதாக அதன் முக்கிய உறுப்பினர்கள் பலர் தெரிவிக்கின்றனர்.
பஸ்பீட் buzzfeed இடம் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவர் நிலையத்தின் ஆய்வாளர் ஒருவர், சந்தர்ப்பம் கிடைத்தால் ஸ்னோடெனை நானே தீர்த்துக்கட்டுவேன். இங்கு பலர் என்னுடைய கருத்தோடு ஒத்துப் போகிறார்கள் என்கிறார். தொடர்ந்த அவர் ஸ்னோடெனின் தலையில் துப்பாக்கிக் குண்டைச் செலுத்திக் கொல்வதற்கு விரும்புகிறேன் என்றார்.
அமெரிக்க இராணுவ உளவாளி ஒருவர் buzzfeed இற்குக் கூறுகையில், சந்தர்ப்பம் கிடைத்தால் கதையை முடித்துவிடுவதுதான் சரியானது என்கிறார். தொடரும் அவர், சாதாரணமாக மொஸ்கோ தெருக்களில் ஸ்னோடென் சென்று வருகிறார். பலசரக்கு சாமான்களை வாங்கிக்கொண்டு செல்கிறார். அப்பாவித் தனமாக தனது இருப்பிடத்திற்குச் செல்கிறார். அடுத்து நீங்கள் அறிந்துகொள்ளப் போவது தனது குளியலறையில் இறந்துகிடந்தார் என்பதை என்று கூறுகிறார்.
அமெரிக்க அரசு மரத்துப்போன கொலை வெறியர்களை உருவாக்கி வைத்திருக்கிறது. அதிகாரவர்க்கமும் அதன் அடியாட்களும் மனித குலத்தின் விரோதிகளாகத் தோன்றியுள்ளனர்.
ஸ்னோடென் வெளியிட்ட தகவல்கள் குறித்து அமரிக்க இரும்புத்திரை அரசின் தலைமை நிர்வாகி ஒபாமா தாம் உளவுபார்த்தமைக்காக மன்னிப்புக் கேட்க முடியாது என அவமானத்தை நியாயப்படுத்தியுள்ளார்.
அதே வேளை, என் தலையில் துப்பாக்கியால் சுட்ட பின்னரே அமெரிக்க ஏஜண்டுகள் ஓய்வார்கள் என்று, எட்வேட் ஸ்னோடன் தெரிவித்துள்ளார். ரஷயாவில் இருந்தவாறு, ஜேர்மனியில் உள்ள பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு தனது நேர்காணலை வழங்கியிருந்தார். அமெரிக்கா கூறுவதுபோல நான் ரஷய உளவாளி அல்ல. நான் ஒரு அமெரிக்க பிரஜை, என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால் நான் வந்து ரஷ்யாவில் சரணடைந்துள்ளேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவணங்களை எடுக்க ரஷ்யா உதவியது என்று பேசப்படுவதை அவர் அடியோடு மறுத்துள்ளார். அமெரிக்கா எந்த நாடுகளை உளவுபார்கிறது, எந்த தலைவர்களின் மோபைப் போன்களை ஒட்டுக்கேட்டது என்பது தொடக்கம் தற்போது என்ன செய்துவருகிறது என்பது போன்ற பல விடையங்கள் எட்வேடிடம் உள்ளது. இதனை எல்லாம் அவர் உடனே வெளியிட மாட்டார் என்று கூறப்படுகிறது.