பல நூறு ஆண்டுகளாக இந்திய சமூகத்தின் பெரும்பகுதி இந்து அடிப்படைவாதக் கருத்தியலால் பாதிக்கப்பட்ட ஊனமுற்ற மக்கள் கூட்டமாக வாழ்கின்றது. இந்து அடிப்படைவாதிகளின் வன்முறையின் இதுவரை கண்டுகொள்ளாத சுசில் குமார் ஷிண்டே உள்ளிட்ட அரசியல் வாதிகள் முதல் தடவையாக அவர்களின் பயங்கரவாத நடவடிக்கை குறித்து கருத்து வெளியிட்டார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். ன் பயிற்சி முகாம்களில் இந்து தீவிரவாத பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது என்று சுஷில்குமார் ஷிண்டே கூறியிருந்தார். இது குறித்து உறுதியான மறுப்பு எதனையும் தெரிவிக்காத பாரதீய ஜனதா கட்சி இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்தியுள்ளது. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் ஜந்தர் மந்தர் அருகே நடைபெற்ற போராட்டத்தில் ஷிண்டேயின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பா.ஜ.க. மாநில செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.