Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஷிண்டே கருத்துத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 24 இல் ஆர்ப்பாட்டம் : இந்திய அரசின் தோல்வி

காவி பயங்கரவாதத்தைப் பரப்புவதற்காக பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பயங்கரவாத பயிற்சி முகாம்களை நடத்துகின்றன என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே குற்றம் சுமத்தியதற்கு இந்துத்துவா அமைப்புக்கள் மறுப்புத் தெரிவிக்கவில்லை.
பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இந்து பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்காக பயிற்சி முகாம்களை நடத்தி வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விழிப்புடன் கண்காணித்து வருகிறோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் வெளிப்படையகக் கூறியிருந்தார். அதற்கு எதிர்ப்புத் நேரடியான மறுப்பு எதனையும் தெரிவிக்காத பாரதீய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ் போன்ற மத அடிப்படைவாதிகள் அமைச்சர் மன்னிப்புக் கோர வேண்டும் .என்றும் பதவி விலக வேண்டும் என்றும் கூறிவருகின்றனர்.

அதன் மறுபுறத்தில் தமது பயங்கரவாத, மக்கள் விரோத நடவடிக்கைகள அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவே கருத இடமுண்டு.
இதுகுறித்து பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:-

இந்துத்துவா அமைப்புகள் தீவிரவாதத்தை வளர்க்கின்றன என்று கூறியுள்ள மத்திய மந்திரி சுஷில் குமார் ஷிண்டேவை பதவியிலிருந்து நீக்கவேண்டும். மேலும் இதற்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் இருவரும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும். ஷிண்டேவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 24-ம் தேதி நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்.

என்று கூறிய போதும் பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புக்கள் பயங்கரவாத பயிற்சி முகாம்களை

நடத்திவருகின்றனவா இல்லையா என்பது குறித்து ரவிசங்கர் எதுவும் கூறவில்லை.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு அன்னிய நாடுகளிலிருந்து வரும் பணத்தின் மூலம் குறித்தோ அவர்களின் நாடு தழுவிய பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து வெளியான தகவல்கள் குறித்தோ இதுவரை வாய் திறக்காத காங்கிரஸ் கட்சி கண்துடைப்பிற்காக மட்டும் இந்து பயங்கரவாதிகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்துவா பயங்கரவாத அமைப்புக்கள் பயிற்சி முகாம்களையும், குண்டு வெடிப்புக்களையும் சுந்ததிரமாக நடத்தும்போது அவர்களைக் கைதுசெய்ய முடியாமலிருப்பது இந்திய அரசின் தோல்வியே.

Exit mobile version