சினிமா நடிகரும் கவிஞருமான வ.ஐ.ச.ஜெயபாலன் 2013 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் இலங்கை சென்றிருந்த போது விசா விதிகளை மீறியதாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டதைக் காரணமாக முன்வைத்தே அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். அதேவேளை சுவிஸ் நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் திலக் என்பவர் ஈ.பி.டி.பி என்ற அரசியல் கட்சியின் கூட்டத்தில் ஈ.பி.டி.பி பிரதிநிதி என்ற அடிப்படையில் கலந்துகொண்டதாக அக்கட்சியின் உத்தியோக பூர்வ இணையத் தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊர்காவற்துறை அலுவலகத்தில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றது. கூட்டம் நடைபெற்றதற்கான படங்கள் போன்ற ஆதாரங்களுடன் 04.02.2013 திகதியிடப்பட்டு இச் செய்தி வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சட்டப் பிரச்சனை குறித்து அதிகமாக அலட்டிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழக்கறிஞர்கள் கூட்டம் விசா விதிகளை மாற்றியமைக்க வேண்டும் அல்லது திலக்கை வெளியேற்ற வேண்டும் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என இனியொரு சார்பில் பகிரங்க வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.