Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வை.கோ படு தோல்வியடைந்த பின்னரும் இனக்கொலையாளிக்கு வாழ்த்துத் தெரிவித்தார்

vaikoதமிழகத்தில் பாஜக அணியில் 7 தொகுதிகளில் மதிமுக போட்டியிட்டது. ஆனால் 7 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியிருக்கிறது அக்கட்சி. மதிமுக பொதுச்செயலர் வைகோவும் விருதுநகர் தொகுதியில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அகில இந்திய அளவில் நரேந்திர மோடி ஆதரவு பேரலை மிகப் பெரும்பான்மையான மாநிலங்களில் வீசியதால் பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெறவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரமிக்கத்தக்க மகத்தான வெற்றி பெறவும் வாக்காளப் பெருமக்கள் தீர்ப்பளித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்று பிரதமர் பதவி ஏற்க இருக்கும் நரேந்திர மோடி அவர்களுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் வாக்காளப் பெருமக்கள் வழங்கி உள்ள தீர்ப்பை ஏற்பதுதான் ஜனநாயகம். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஊழலற்ற நேர்மையான அரசியலை வென்றெடுக்கவும், தன்னலமற்ற மக்கள் பொதுத்தொண்டை முன்னெடுக்கவும் உறுதிகொண்டு தொடர்ந்து பாடுபடும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
தோல்வியின் பின்னரும் கறுப்புப் பட்டியுடன் பார்ப்பனீயம் பேசும் வை.கோபாலசாமி தமிழீழ வியாபாரம் குறித்துத் தனது அறிக்கையில் குறிப்பிடவில்லை.

வை.கோ உட்பட  மக்களை தீடிரென உணர்ச்சிவசப்படுத்தி வாக்குத் திரட்டும் அனைவருமே சுய நிர்ணய உரிமைக்குக் கோட்பாட்டு அளவில் எதிரிகளான கட்சிகளுடன் தேர்தலுக்காகக் கூட்டிணைந்து தாம் தன்னுரிமைக் கோரிக்கைகளுக்கு எதிரானவர்கள் என வெளிப்படுத்தினர்.
இறுதியாகக் கிடைத்த தகவல்கள்:

விருதுநகர் மக்களவை தொகுதியில் உள்ள ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணனே அதிகமான வாக்குகள் பெற்று முன்னணியில் இருந்தார்.
விருதுநகர் மக்களவை தொகுதியில் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியது ஆகும். இத்தொகுதியில் அதிமுக, திமுக, மதிமுக, காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் உள்பட 26 பேர் போட்டியிட்டனர். இதில் ஒவ்வொரு வேட்பாளரும் சட்டப்பேரவை தொகுதி வாரியாக பெற்றுள்ள வாக்குகள் விவரம் வருமாறு:
விருதுநகர்: இத்தொகுதியில் 163638 பதிவான வாக்குகளில் அதிமுகவிற்கு-55130, மதிமுக-37030, திமுக-34072, காங்கிரஸ்-7388, மார்க்சிஸ்ட்-3244, நோட்டா-2088.
சிவகாசி: இங்கு 166881 வாக்குகள் பதிவானது. இதில், அதிமுக-64840, திமுக-43307, மதிமுக-43518, காங்கிரஸ்-5927, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-2332, நோட்டா-2637.
சாத்தூர்: இத்தொகுதியில் மொத்தம் 166665 வாக்குகள் பதிவாகியதில் அதிமுக-65739, திமுக-40099, மதிமுக-45823, காங்கிரஸ்-3978, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-3934, நோட்டா-1491.
அருப்புக்கோட்டை: இந்த தொகுதியில் 1,51,241 பதிவாகின. அதிமுக-56349, திமுக-40789, மதிமுக-37057, காங்கிரஸ்-5063, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-2933, நோட்டா-1817.
திருமங்கலம்: இந்த தொகுதியில் 194480 வாக்குகளில் அதிமுக-82891, மதிமுக-46362, திமுக-45403, காங்கிரஸ்-8999, மார்க்சிஸ்ட்-3263 மற்றும் நோட்டா-1715 ஆகும்.
திருப்பரங்குன்றம்: இத்தொகுதியில் மொத்தம் 1,86,214 வாக்குகள் பதிவாகின. அதில் அதிமுக-81338, திமுக-36960, மதிமுக-49764, காங்கிரஸ்-7044, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-4384, நோட்டா-2458.

முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலம் – எனது சாட்சியம் : இயக்குனர் ராம்
Exit mobile version