பெங்களூர், ஜுலை 15-
அணுசக்தி ஒப்பந் தத்தை தொடர்ந்து பாது காப்பு, வேளாண்துறைக ளிலும் அமெரிக்கா கடுமை யாக தலையீடு செய்யும் என இந்திய விஞ்ஞானி டாக்டர் பிளாசிட் ரோட்ரிக்ஸ் எச்ச ரித்துள்ளார்.
கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனர் டாக்டர் பிளா சிட் ரோட்ரிக்ஸ் இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப் பந்தம் குறித்து கூறுகையில் இந்தியா பாதுகாப்பு, விண் வெளி, அணுசக்தி துறை களில் வலுவுள்ளதாக உள் ளது. எனவே அணுசக்தி ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்திய வேளாண்துறையில் அமெரிக்க தலையீடு இருக் கும் என கருதுகிறேன்.
நமது வேளாண் பல் கலைக்கழகங்கள், மாநில பல்கலைக்கழகங்கள் இந் திய வேளாண் ஆராய்ச்சி அமைப்பு ஆய்வகங்கள் ஆகியவற்றில் அமெரிக்கா வின் பெரும் நிறுவனமான மான்சான்டோவின் கட்டுப் பாட்டுக்குள் வரும் அபாயம் உள்ளது. மான்சான்டோ வின் இலக்கு, இந்தியாவில் சர்வாதிகாரம் கொண்டதாக திகழ வேண்டும் என்பதாகும் என்றார். பி.டி.ரக பருத்தி விதையை தொடர்ந்து மர பணு மாற்றப்பட்ட கத்தரிக் காயை இந்தியாவில் கொண்டு வர முயற்சி நடக்கிறது. மர பணு மாற்றப்பட்ட உண வுப் பொருளுக்கு ஐரோப்பியக் கமிஷன் அனுமதி தரவில்லை, இருப்பினும் இதன் சாதக பாதகங்களை முழுமையாக ஆராயாமல் உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
அணுசக்தி ஒப்பந் தத்தை தொடர்ந்து, அமெ ரிக்கா, இந்தியாவில், தனது பாதுகாப்புத்துறை பொருட்களை விற்பதற் கான சாத்தியக் கூறுகள் உள்ளன. 125 போர் விமா னங்களை சர்வதேச சந்தை யில் இந்தியா வாங்க உள் ளது. கடந்த 20 ஆண்டு களாக தனக்கு தேவையான அணு உலைகளை அமெ ரிக்காவிடம் இந்தியா வாங்கவில்லை. ரஷ்யா, பிரான்ஸ் நாடுகளிடமே அணு உலைகளை பெறு கிறோம் ரஷ்யா, பிரான்ஸ், இஸ்ரேலுடன் இந்தியா ராணுவத்திற்கான கரு விகளை வாங்குகிறது. இந்த நிலையில் இந்திய பாது காப்புத் தளவாடச் சந்தை யில் அமெரிக்கா உள்ளே நுழை யத் துடிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். (பிடிஐ)