அர்பெய்ட் மஷ்ட் ஃப்ரெய் அதாவது ‘வேலை உங்களுக்கு விமோசனம் பெற்றுத்தரும்’ என்ற கண்டனத்துக்குப் பேர்போன வாசகம் இந்தப் பலகையில் அடங்கியிருந்தது.
யூதமக்களுக்கு எதிரான வெறுப்பும் வன்முறையும் அழிந்துவிடவில்லை என்பதை இந்த திருட்டு சம்பவம் காட்டுவதாக இஸ்ரேலிய துணைப் பிரதமர் சில்வன் ஷலோம் கூறியுள்ளார்.
இரண்டாம் உலகப் போர் காலத்தில் அவுஸ்விச் வதை முகாமில் பெரும்பாலும் யூதர்களாக கொல்லப்பட்டிருந்த பத்துலட்சத்துக்கும் அதிகமானோர் பற்றிய நினைவுகளைத் தூண்டும் ஹோலோகாஸ்ட் யூத இன அழிப்பு சின்னமாக இந்த வாசகப் பலகை இருந்துவந்தது.