Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வேண்டுகோள்

DSC_2162இறுதி யுத்தத்தின் அழிவிலிருந்து இன்னும் மீளமுடியால் தவிக்கும் வெள்ளாம்முள்ளிவாய்க்கால் கிராமத்தில் இருந்த பாரதியார் சனசமூக நிலையம் அழிக்கப்பட்டு இன்று சுவடேதும் இல்லாமல் இருக்கிறது.

முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தில் உயிர்தப்பி தடுப்பிலிருந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ள பல இளைஞர்கள் வேலை ஒன்று பெற்றுக் கொள்ள அலைகிறார்கள்.

முள்ளிவாய்க்காலில் மீதமாய் எஞ்சியுள்ள தமிழர்களுக்கு இ்ளைஞர்களுக்கு பிள்ளைகளுக்கு பத்திரிகை படிக்க ஒரு நூல் நிலையம் அமைத்துத் தர வட மாகாணசபையால் முடியவில்லை.

முற்றாக அழிக்கப்பட்ட வெள்ளாம்முள்ளிவாய்க்கால் கிராமத்தில் 2013 ஆம் ஆண்டு இந்திய வீட்டுத் திட்டத்திற்கு 107 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு கிராமசேவகர் பணிமனையில் பெயர் விவரம் ஒட்டப்பட்டிருந்தது. பின்னர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுத் திட்டம் வன்னிமாவட்ட அமைச்சர் ஒருவரால் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் முறையிடுகிறார்கள்.

தமிழ்க் கூட்டமைப்பு நினைத்திருந்தால் ஒரு இலட்சம் வீடுகள் அமைத்துக் கொடுத்திருக்க முடியும். அழிக்கப்பட்ட வெள்ளாம் முள்ளிவாய்க்கால் கிராமம் 50 ஆயிரம் இந்திய வீட்டுத் திட்டத்தால் ஏமாற்றப்பட்டிருக்காது.

முதலமைச்சர் நிதியத்திற்கு இன்னும் அனுமதியில்லை என்று உங்களுக்குக் கதை சொல்வார்கள். கட்சிக்கென்று வங்கிக் கணக்கில்லையா? தினக்குரல் கருணைப்பாலத்திற்கு வங்கிக் கணக்கிருக்கிறது. பலரும் பணத்தை வைப்பிலிடுகின்றனர். கருணைப்பாலம் அளப்பரிய பணியாற்றுகிறது.

தமிழ்க் கட்சிகளால் ஒரு  அமைப்பை வெளிப்படையாக அமைத்து கணக்கெடுப்புச் செய்து வீடு மலசல கூடம் கிணறு தேவையானவர்களுக்கு அமைத்துக் கொடுக்க முடியாதா? சரியான முறையில் திட்டமிட்டு முன்வந்திருந்தால் புலம்பெயர் மக்கள் மட்டுமல்ல உள்நாட்டில் உள்ள நல்லிதயங்களும் உதவியிருப்பர். தமிழர்களாலேயே வீட்டைக் கட்டியிருக்க முடியும்.

தினக்குரல் பத்திரிகை கருணைப்பாலத்திற்கென்று 3 பேரை வேலைக்கு அமர்த்திச் செய்வதை 50 வருடங்களுக்கு மேலாக தமிழர்களின் உரிமைக்காகப் போராடிக் கிழித்து வரும் ஒரு கட்சியால் செய்ய முடியாதா?

தமிழ்க் கூட்டமைப்பு மக்களை முற்றாக அழிய விடப்போவதாக சித்தாவத்தை உதயகுமார் தனது முகநூலில் சொல்வது பொய்யாகித்தான் போகுமா?

தமிழ்ச் சமூகத்திற்காக உங்களிடம் 2 சிறு உதவிகளைக் கேட்கின்றேன். நேரடியாக உரியவர்களைத் தொடர்பு கொண்டு உதவுங்கள்.

1. “ஒரு நூல் நிலையம் திறக்கப்படுகிற போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது” என்று ஒரு அறிஞர் சொன்னார். வெள்ளாம் முள்ளிவாய்க்கால் பாரதியார் சனசமூக நிலையத்திற்கு கட்டிடம் அமைத்து தளபாடம் கொள்வனவு செய்ய ரூ 6 இலட்சம் மதிப்பிட்டுள்ளார்கள். கட்டிடம் அமைத்தால் தாம் ஏனைய உதவிகளைச் செய்வதாக பிரதேச சபை அறிவித்துள்ளது. கோரிக்கையயை இணைத்துள்ளேன். உரியவர்களிடம் சேர்ப்பியுங்கள். செய்தியை மனோகணேசனிடமாவது சேர்ப்பியுங்கள். எவர் மூலவாது செய்விப்பார்.

2. கிளிநொச்சி ஊற்றுப் புலத்தில் வாழும் வித்தியாவும் அவரது பிள்ளைகளும் வாழ்வதற்கு வழியேற்படுத்திக் கொடுங்கள். இணைப்பைப் பார்க்க.

அன்புடன்
பா.துவாரகன்

Exit mobile version