Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வேட்டைநாயைப் போல தனது புதல்விகளையே தனது பாலியல் இச்சைக்கு உட்படுத்திய தந்தைக்கு 20 வருடக் கடுங்காவல் சிறைத் தண்டனை.

23.08.2008.

சிறுமிகளான தனது இரண்டு புதல்விகளை மோசமான பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக தந்தை ஒருவருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இரண்டு குற்றங்கள் சுமத்தப்பட்டு தாக்கல் செயய்ப்பட்ட வழக்கு ஒன்றில் திருகோணமலை மேல் நீதிமனற்ம் எதிரிக்கு 20 வருட கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கி வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

மனைவி வெளிநாடு ஒன்றிற்கு தொழிலுக்காகச் சென்றிருந்த வேளை தனது பாதுகாப்பில் இருந்த இரண்டு சிறுமிகளை இரவு நேரத்தில் மோசமான பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக சேருவில தெஹிவத்தை பகுதியைச் சேர்ந்த டி.எச்.சந்திரசிறி என்வருக்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கடந்த 2000 2001 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தி்ல் பாதிக்கப்பட்ட சகோதரிகளில் ஒருவருக்கு சம்பவ நேரத்தில் வயது 13. மற்றவருக்கு வயது 11. மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் முன்னிலையில் இந்த வழக்கு விசாணை நடைபெற்றது.

சடடமா அதிபரின் பிரதிநிதியும் ச்ட்டவாதியுமாகிய செல்வி சுகந்தி கந்தசாமி சாட்சிகளை நெறிப்படுத்தினார். பாதிக்கப்பட்ட சிறுமிகள் நீதிமன்றத்தில் சர்ட்சியமளிக்கையில் தாயார் வெளிநாடு சென்றிருந்ததனால் தாங்கள் தந்தையாரின் பாதுகாப்பில் வளர்ந்து வந்ததாகவும் ஒருநாள் இரவு தந்தையார் தன்னை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும் மூத்த சகோதரி தெரிவிததுள்ளார்.

இளைய சகோதரி நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் தான் நித்திரையில் இருந்தபோது தந்தையார் தன்னைப் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாகவும் திடுக்கிட்டு விழித்து எழுந்து தீப்பெட்டியை எடுத்து தீக்குச்சியைக் கொளுத்தி பார்த்தபோது தனது தந்தையே தன்மீது பாலியல் குற்றம் புரிந்தவர் என்பதை அடையாளம் கண்டதாகவும் தெரிவித்துள்ளார். தாங்கள் படித்து வந்த பாடசாலையில் சிறிது காலத்தின் பின்னர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் நடத்தப்பட்ட அறிவ+ட்டல் கருத்தரங்கில் தமது தந்தையார் தங்களுக்கு ஏற்படுத்திய பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பாக அதிகாரிகளிடம் கூறியதாகவும் அதனையடுத்து அந்த விடயம் பொலிசாரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதாகவும் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் பாதிக்கப்பட்ட சகோதரிகள் தெரிவித்துள்ளனர். விசாரணையின் முடிவில் தந்தையாரினால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஸ்பிரயோகம் பற்றி காலதாமதமாகவே பொலிசாரிடம் முறையிடப்பட்டிருந்தாலும் அந்த முறைப்பாடு நியாயமானது என மேல் நீதிமன்றம் கருதுவதாக நீதிபதி எம்.இளஞ்செழியன் கூறியுள்ளார்.

தந்தையாரினால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் அவருடைய பராமரிப்பில் இருந்ததனால் அவரால் தமக்கு ஏற்படுத்தப்பட்ட பாதிப்பு குறித்து அவரை மேவி வெளியில் சொல்ல முடியாத நிலையில் இருந்ததாகவும் எனவே தமக்குக் கிடைத்த முதல் சந்தர்ப்பத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் தமக்கு எற்பட்ட பாலியல் ரீதியான பாதிப்பு குறித்து செய்த முறை்பபாடு நியாயமான காலதாமத முறைப்பாடே என மேல்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் இந்திய உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு ஒன்றினை எ:டுத்துக்காட்டி பாதிக்கப்பட்ட பெண்களோ சிறுமிகளோ எமது சமூகத்தி்ல் தமக்கு ஏற்படும் பாலியல் பாதிப்புகள் குறித்து வெளிப்படையாகக் கூறுவதற்கு முன்வருவதில்லை என்றும் அவர்கள் பொதுவாகவே தமது வாழ்க்கைத் துணையைத் தேடுகின்ற எதிர்காலம் குறித்து அச்சமடைநதிருப்பார்கள் என்றும் நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இநத வழக்கைப் பொருத்தமட்டில் சம்பவம் நடைபெற்ற போது சிறுமிகளாக இருந்தவர்கள் இப்போது இளங்குமரிகளாக இருக்கின்றார்கள்.

இந்தப் பின்னணியில் தந்தையாரினால் தமக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியான துஸ்பிரயோகம் குறித்து இவர்கள் சாட்சியமளித்துள்ளார்கள். எமது சமுதாயத்தில் பெண்களுக்கு இருக்கின்ற கலாசார கட்டுப்பாடுகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிகோரி நீதிமன்றத்திற்கு வரும்போது பூதக்கண்ணாடி வைத்து சாட்சியங்களைப் பரிசோதனை செய்ய வேண்டிய தேவையில்லை என்ற பாலியல் வழக்கு தொடர்பாக இந்திய உச்ச நீதிமன்ற்த்தின் தீர்ப்பை எடுகோள் காட்டி ‘குழந்தைகளின் காவல் தெய்வமாக இருக்க வேண்டிய தந்தை ஒருவர் வேட்டைநாயைப் போல தனது புதல்விகளையே தனது பாலியல் இச்சைக்கு உட்படுத்தியமை அவர்களின் எதிர்கால வாழ்க்கையை நாசம் செய்த ஒரு செயலாகும்.

எனவே இந்த வழ்ககின் எதிரியாகிய தந்தைக்கு கருணை தயவு தாட்சண்யமின்றி தண்டனை வழங்குவதே சாலப் பொருத்தமாகும்’ என நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். 13 வயதே நிரம்பிய மூத்த மகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக 10 வருட கடுங்காவல் சிறைத் தண்டனையும் இளைய மகளாகிய 11 வயது நிரம்பிய சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் செய்தமைக்காக 10 வருட கடுங்காவல் சிறைத் தண்டனையுமாக மொததமாக 20 வருட கடுஙகாவல் தண்டனை வழங்கி திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். அத்துடன் எதிரி 10 ஆயிரம் ரூபா தண்டமாக செலுத்த வேண்டும் எனவும் அதனைச் செலுத்த தவறினால் 2 மாத கடுங்காவல் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி எம்.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்

Exit mobile version