சரத் பொன்சேகா இராணுவத் தளபதி என்ற அடிப்படையில் மகிந்த ராஜபக்சவிற்கு குடும்பத்தினருக்கு முன்னதகவே போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர். யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட பல அப்பாவிகளை கொலைசெய்து செம்மணி மயானத்தில் வீசியெறிய உத்தரவிட்டவர். சரத் போன்சேகாவின் இந்தக் கூற்று வெள்ளைகொடியோடு சரணடைந்தவர்களைக் கொலைசெய்த சம்பவத்தில் இவருக்கும் நேரடியான தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தைத் தோற்றுவிக்கிறது.
இதே வேளை வெள்ளைக் கொடியோடு சரண்டைந்த விவகாரத்தில் தொடர்பாளராகச் செயற்பட்ட சந்திர நேரு என்ற தமிழ்த் தேசியக் கூட்ட்மைப்பு முன்னை நாள் பாராளுமன்ற உறுப்பினர் சரணடைவுச் சம்பவங்களை இனியொருவிற்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்திலிருந்து வெளியாகும் தமிழ் ஊடகமொன்றுக்கு அளித்தசெவ்வியல் சரத் பொன்சேகா இதனைத் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பிரபாகரன் உயிரிழந்தாகவும், பின்னர் அவரது சடலம் கிடைக்கப் பெற்றதாகவும் அதே நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.