Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

‘வெள்ளைக்கொடி’ பெட்றீக்கா ஜேன்ஸ் நாடு திரும்பினார்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வெள்ளைக்கொடி வழக்கின் தீர்ப்பு வழக்கப்படவிருந்த கடந்த 18 ஆம் திகதிக்கு முன்தினம் அதாவது கடந்த 17 ஆம் திகதி அதிகாலை சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்தின் தலைவர் லால் விக்ரமதுங்க, அதன் ஆசிரியர் பெட்றீக்கா ஜேன்ஸ் ஆகியோர் வெளிநாடு சென்றிருந்த நிலையில், கடந்த 19 ஆம் திகதி அவர்கள் மீண்டும் நாடு திரும்பினர்.

இவர்கள் இருவரும் 17 ஆம் 18 ஆம் திகதிகளில் சிங்கப்பூரின் லேண்ட் மார்க் விலேஜ் விடுதியில் தங்கியிருந்தனர்.

வெள்ளைக்கொடி தொடர்பான தகவலை சரத் பொன்சேக்கா, பெட்றீக்கா ஜேன்ஸிடம் வழங்கியதாக உறுதிப்படுத்தி சாட்சி கூறியவர், லால் விக்ரமதுங்க என்பது குறிப்பிடதக்கது.

Exit mobile version