Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வெள்ளைக்கொடி வழக்கு : சரத் பொன்சேகாவிற்கு மூன்று ஆண்டுகள் சிறை

வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகை தந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை ட்ரயல் அட்-பார் முறையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.
மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி வராவௌ, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் நடைபெற்றது.

வெள்ளைக்கொடி விவகார வழக்கில் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவை குற்றவாளியாக இனங்கண்ட நீதிபதிகள் குழு அவருக்கு 3 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

அவருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மூன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் தீபாலி விஜயசுந்தர இன்று வெள்ளிக்கிழமை வாசித்தார்.

Exit mobile version