இலங்கையில் போர் நடக்கும் பகுதியிலிருந்து வெளியேற முயன்ற பொதுமக்களில் குறைந்து 200 பேரை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றதாக, தற்போது இராணுவத்திடம் சரணடைந்துள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி அவர்கள், விடுதலைப் புலிகள் பொதுமக்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாகவும், பலவந்தமாக 13 வயது சிறார்களையும் அவர்கள் படைகளில் சேர்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை அரசின் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள ஒரு ஒளிநாடாவில் இருக்கும் பேட்டியிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். இந்த ஒளிப்பதிவு அச்சுறுத்தலின் பேரில் செய்யப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
போர் நடக்கும் பகுதிகளிலிருந்து வெளியேற முயலும் பொதுமக்களை தடுக்கும் முகமாக அவர்களை நோக்கி விடுதலைப் புலிகள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக, நம்பத்தகுந்த தகவல்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
BBC.