Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணம்:மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணம் தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்புப் பணம் தொடர்பான ஆவணங்களை மத்திய அரசு ரகசியமாக வைத்துள்ளதாகவும், அவற்றை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்றும் பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, பஞ்சாப் முன்னாள் டிஜிபி கே.பி.எஸ். கில், மக்களவையின் முன்னாள் தலைமைச் செயலர் சுபாஷ் காஷ்யப் உட்பட 5 பேர் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்கள் தங்கள் மனுவில் கூறியிருந்தனர்.

இதனிடையே, புணேவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹாஸன் அலி கான் வெளிநாட்டு பணப் பரிமாற்ற விதிமுறைகளை மீறியது தொடர்பாக அமலாக்கப் பிரிவினர் அளித்த தகவல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்னிடம் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.

Exit mobile version