Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வெளிநாட்டவர்களுக்கு எதிரான நிறவெறிக்கட்சி பிரித்தானியாவில் பெரும்பான்மை:கேள்விக்குள்ளாகும் புதிய தலைமுறை

nigel
நைஜல் பராக்

பிரித்தானியாவில் இன்று நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய ராஜ்ய சுதந்திரக் கட்சி (UKIP) அதிக வாக்குகளைப் பெற்று வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிறவாதக் கட்சியான UKIP பிரித்தானியாவில் வசிக்கும் வெளி நாட்டவர்களுக்கு எதிரான பாசிசக் கட்சியாகும். பிரித்தானியா ஆங்கிலேயர்களுக்கே என்று கூறும் அங்கிருந்து ஏனையோரை வெளியேற்றி பிரித்தானியாவைச் சுத்தப்படுத வேண்டும் என்கிறது.

வலதுசாரி முதலாளித்துவப் பாசிஸ்டுக்கள் உலகம் முழுவது பல்தேசிய வியாபார நிறுவனங்களின் ஆதரவோடு ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தப்படுகின்றனர்.

இலங்கையிலிருந்து பெருந்தேசிய வாத பாசிச அரசால் துரத்தப்பட்டு ஐரோப்பாவில் அகதிகளான ஈழத் தமிழர்களின் எதிர்காலச் சந்ததி இந்தப் பாசிஸ்டுக்களின் கோரக்கரங்களில் சிக்கித் தவிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியா போன்ற ஐரோப்பிய நாடுகளில் பிறந்து வளர்ந்த தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல ஏனைய வெளி நாட்டவர்களும் பல சிக்கல்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். கல்வியை முடித்ததும் வேலை தேடுவதற்கான சிக்கல்கள் போன்ற அடிப்படைப் பிரச்சனைகளிலிருந்து பாதுக்காப்பு அச்சுறுத்தல்கள் வரை பல்வேறு சமூகச் சிக்கல்களை இவர்கள் எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும்.

வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் அழிக்கப்பட்ட போது கொழும்பில் பேரினவாத அரசின் தயவில் தமிழர்கள் வாழ்ந்தது போன்றே பிரித்தானியப் பணக்கார வெளிநாட்டவர்கள் பாசிச அரசின் பாதுகாப்புடன் வாழ்வார்கள்.

சாமானிய வெளி நாட்டவர்கள் இரண்டாம்தர பிரசைகளாக வாழ்விழக்க வேண்டிய நிலை உருவாகும்.
இலங்கை இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளில் வெளி நாட்டுக் கனவில் வாழ்கின்ற மத்தியதர வர்க்கம் உள் நாடுகளிலேயே பாசிஸ்டுக்களையும் அடிப்படை வாதிகளையும் ஆதரிக்கின்றது. இந்தியாவில் நரேந்திர மோடி என்ற பாசிஸ்ட் போன்றே UKIP இன் தலைவரான நைஜெல் பராக்  அமோக ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்துள்ளார்.
பாசிஸ்டுகளுக்கு எதிரான உலகம் தழுவிய ஐக்கிய முன்னணிய முற்போக்கு ஜனநாய சக்திகள் உருவாக்க வேண்டிய சூழலில் குறுகிய அடையாளங்களை வகுத்துக்கொண்டு மக்கள் கூட்டங்களை அடிப்படை வாதிகளாக வியாபாரிகள் மாற்றிவிடுகின்றனர். நீண்ட முதலாளித்துவ ஜனநாயக மரபைக்கொண்ட பிரித்தானியா பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளிலேயே பாசிஸ்டுக்கள் அதிகார பீடத்தில் அமர்கிறார்கள் என்றால் அதன் பின்புலத்தில் வர்த்தக நலன்கள் பொதிந்துள்ளன.

நைஜல் பராக் என்ற நிறவெறி பாசிஸ்டைத் தலைவராகக் கொண்ட UKIP என்ற கட்சி ஐரோப்பியப் பாராளுமன்றத் தேர்தலில் 27 வீதமான வாக்குகளை வென்று முதன்மைப் பெரும்பான்மையைப் பெறும் என எதிர்வு கூறப்படுகின்றது. தொழில் கட்சி 26 வீத வாக்குகளையும், ஆளும் ரோரிக் கட்சி 22 வீத வாக்குகளையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தாராளவாத ஜனநாயகக் கட்சி 9 வீத வாக்குகளை வெற்றிகொள்ளும் எனவும் கூறப்படுகின்றது, இந்த அடிப்படையில், UKIP இற்கு 22 பாராளுமன்ற ஆசனங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரித்தானியாவில் வாழ்கின்ற புதிய சந்ததியின் எதிர்காலம் குறித்துக் குறைந்தபட்சத் துயரருமற்ற தமிழ் அமைப்புக்கள் புலிச்சின்னம் பதித்த கொடி பிடிப்பதா இல்லையா என்ற விவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன.

UKIP இன் வெற்றி பல்வேறு சமூகத் தாக்கங்களை ஏற்படுத்தும் என்ற நிலையில் அது குறித்த விழிப்புணர்வும் விவாதங்களும் அவசியமானவை.

Exit mobile version