Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வெளிநாட்டவர்களுக்கு எதிரான பாசிஸ்ட் தமிழர்களுக்கான கட்சியை உருவாக்கினார்

williamsonwide_LRG_inioruஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் தேசிய முழக்கம் சரியான அரசியல் திசைவழியில் திட்டமிடப்படாவிட்டால் அது பாசிசமாக மாற்றமடைந்து மக்களின் அழிவிற்கு வழிவகுக்கும். பெருந்தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் உழைக்கும் மக்களை அணிதிடரட்டி அதன் முன்னணிப்படையால் தலைமை தாங்காவிட்டால், தேசியம் என்பதை பல்தேசிய நிறுவனங்களும், வியாபாரிகளும், பயன்படுத்திக்கொள்வார்கள். இது பெரும் மக்கள் அழிவில் முடிவடையும்.

வெறுமனே உணர்ச்சியூட்டும் கோசங்களையும், ஒளிவட்டம் கட்டப்பட்ட சில தனி நபர்களையும் கொண்ட குழுக்கள் தமது சுய தேவைகளுக்காகப் போராட்டங்களைப் பயன்படுத்திக்கொள்வார்கள்.

உறுதியான உழைக்கும் மக்களின் தலைமையிலான மக்கள் சார்ந்த அரசியல் தலைமை மட்டுமே பாசிஸ்டுக்களின் உள்ளீட்டைத் தடுக்க முடியும்.

ஈழப் போராட்டத்தின் தோல்வியில்ருந்தும் அழிவிலிருந்தும் இதனைக் கற்றுக்கொள்ள மறுக்கும் புதிய தமிழ் அரசியல் தலைமைகள் இலங்கை அரசின் இனச்சுத்திகரிப்பிற்குத் துணைபோகின்றன.
புலம்பெயர் நாடுகளில் சுய நிர்ணைய உரிமைக்காகக் குரல்கொடுக்கப் போவதாக தமிழர்கள் மத்தியிலும், சீக்கியர்கள் மத்தியிலும், குர்திஷ் இன மக்கள் மத்தியிலும் பிரச்சாரம் மேற்கொண்டுவந்த கிரகாம் வில்லியம்சன் என்பவர் அறியப்பட்ட பாசிஸ்ட்.!

வில்லியம்சன் தேசிய முன்னணி(NF) மற்றும் பிரித்தானிய தேசியக் கட்சி(BNP) என்ற இரண்டு பாசிஸ்ட் கட்சிகளின் உயர்மட்ட உறுப்பினர். இந்த இரண்டு கட்சிகளும் வெளி நாட்டவர்களுக்கு எதிரான நிறவெறி வன்முறைக் கட்சிகள்.! பிரித்தானியாவில் குடியேற்ற வாசிகளை வெளியேற்ற வேண்டும் என்றும், வெள்ளை நிறத்தவர்களே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்றும் பல வன்முறைகளில் ஈடுபட்ட இக் கட்சிகளின் தேசிய முன்னணியில் உதவித்தலைவராகப் பதவி வகித்தவர் கிரகாம் வில்லியம்சன். இவர் பிரித்தானிய தேசியக் கட்சியின் அதிகார உறுப்பினருமாவர்.

இப் பாசிஸ்ட் பி.என்.பி தலைவரின் ஐரோப்பியப் பாராளுமன்ற முகாமையாளருடனும், பற்றிக் ஹரிங்டன் என்ற தேசிய முன்னணியின் முக்கியஸ்தருடனும் இணைந்து தேசிய விடுதலை முன்னணி என்ற கட்சியை உருவாக்கினார். புத்தம்புதிய பாசிஸ்டுகளின் கட்சியின் நோக்கங்களில் ஒன்றாக உலகம் முழுவதும் உள்ள தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமையை வலியுறுத்துவது என்பதாகும்.
ஒரு புறத்தில் ஏனைய மக்கள் கூட்டங்களை மனிதர்கள் அல்ல என்று அவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் இந்தக் கும்பல்களுக்கு தேசிய விடுதலை வெறும் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கான கருவி.

பிரித்தானியத் தமிழர்கள் நடத்தும் அரசியல் கூட்ங்களில் தமிழர்களுக்கு ஆதரவாகத் தோன்றும் பாசிஸ்ட் வில்லியம்சன் புலம்பெயர் அமைப்புக்களால் நிபந்தனையின்றி வரவேற்கப்பட்டவர்.
ஐரோப்பியப் பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் உட்பட மேலும் ஏழு தேசிய இனங்களின் விடுதலைக்ககக் குரல்கொடுக்கப்போவதாக தேசிய விடுதலை முன்னணியை உருவாக்கியிருந்த வில்லியம்சன் என்ற பாசிஸ்டை சனல் 4 ஊடகம் அம்பலப்படுத்தியுள்ளது.

தமிழ் நாட்டில் இனவெறியைத் தூண்டும் வை.கோ போன்றவர்கள் இந்து பாசிஸ்டுக்களுடன் இணைந்து வாக்குப் பொறுக்குவதை ஆதரிக்கும் புலம்பெயர் தமிழ் அயோக்கியர்கள் பி.என்.பி போன்ற பாசிசக் கட்சியையும் ஆதரித்தால் வியப்படைவதற்கில்லை.

தம்மைத் தாமே அழித்துக்கொள்ளும் கோடரிக்காம்புகளுக்கு தமிழர்களை விடச் சிறந்த உதாரணம் கிடைக்காது என்று வரலாறு எழுதிக்கொள்ளும்.

சனல் 4 இன் ஆக்கம்:

Exposed: far-right veteran seeking London multicultural vote

Exit mobile version