Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வெலிவேரிய படுகொலைகள் : கோத்தவின் திமிரும் பிழைப்புவாத தமிழ்க்கட்சிகளும்

gota_mafiaகோத்தாவின் உத்தரவின் பெயரில் வெலிவேரியவில் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தும் அடித்தும் இலங்கை பாசிச இராணுவம் கொலை வெறித் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டது. இதுவரை கிடைத்த தகவல்களின்படி 10 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரியவருகிறது. தாக்குதல் நடைபெற்று இரண்டு நாட்களுக்குப் பின்னர் கிராம மக்களை யாரோ தூண்டிவிட்டதால் தான் கோலை செய்தோம் என்கிறு கோத்தா திமிரோடு கூறியிருக்கிறார். சிங்கள மக்களையும் திருப்திப்படுத்தித்தான் தமிழர்கள் உரிமை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நெத்தியும் பொட்டுமாக அறிக்கை விடுத்துவரும் கொழும்பைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் விக்கினேஸ்வரன் உட்பட யாரும் ஒரு கண்டன அறிக்கை கூட விடவில்லை.

விக்கியின் அரசியலில் சிங்கள மக்களோடு இணைந்து உரிமையைப் பெற்றுக்கொள்வதென்பது சிங்கள மேட்டுக்குடிகளோடு இணைந்து முழு மக்களையும் ஒடுக்குவதே என்பது தெரிந்த ஒன்றே.

இதே வேளை சுய நிர்ணய உரிமை கேட்டால் இனவாதிகள் எனக் கொக்கரிக்கும் தமிழ் இடதுசாரி அமைப்புக்கள், தலித் சாதிச்சங்கங்கள், ஒருமைப்பாட்டு அமைப்புக்கள், சம உரிமை சாமான்யர்கள் போன்ற யாரும் இது குறித்து மூச்சுக்கூட விட்டதில்ல்லை.

பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி சாகடித்தது இலங்கை பாசிச இராணுவம்

Exit mobile version