இந்தவகையில் ஐரோப்பிய ஒன்றியம் இந்தப் போராட்டத்தைக் கண்டு மிரண்டு போயுள்ளது. விசாரண நடத்த வேண்டும் என்று கூக்குரலிடுகிறது. மக்கள் போராட்டம் மேலும் தொடரும் என்ற அச்சத்திலேயே அவற்றை ஒடுக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முனைகிறது. இந்த வகையிலேயே கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஈழப் போராட்டம் அன்னியர்களதும் விதேசிகளதும் கைகளில் ஒப்படைக்கப்பட்டது.
வெலிவெரியப் போராட்டத்தில் மக்களுக்கு ஏற்பட்ட விழிப்புணர்ச்சியைத் திசைதிருப்பவே இலங்கை அரசாங்கம் தனது குண்டர்படைகளுடன் கிரான்பாஸ் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியது. அமரிக்க ஆதரவுடனும் கோதபாயவின் வழிகாட்டலிலும் செயற்படுவதாகக் கருதப்படும் பௌத்த அடிப்படை வாதக் குழுக்களின் ஊடாக போலிஸ் பாதுகாப்புடன் இத் தாக்குதல் நடத்தப்பட்டது.
வெலிவேரிய சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. வெலிவேரிய மற்றும் கிராண்ட்பாஸ் சம்பவங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
துரித கதியில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.