சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் சுதந்திரத்துக்கான அரங்கம் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கம், சட்டத்தரணிகள் சங்கம், ஊடக அமைப்புக்களின் ஒன்றியம் உட்பட ஏனைய பல அமைப்புக்களின் சார்பிலும் பிரதிநிதிகள் உட்பட ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன் அரசாங்கத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளையும் தாங்கியிருந்தனர். ‘வடக்கிலும் சுட்டுக் கொன்றனர் தெற்கிலும் சுடுகின்றனர்”. ‘இந்த அரசாங்கத்துக்கு இடமளிக்கக் கூடாது” , ‘அரச பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவோம்” , ‘அரச தலைவர்களே கொலைகாரர்கள்” ‘தண்ணீர் கேட்ட மக்களை சுட்டுக் கொல்வதா ஜனநாயகம்” என்று கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் வெலிவேரிய பகுதி மக்களும் கலந்துகொண்டனர். வெலிவேரிய தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்ட மூவரது புகைப்படங்களும் ஆர்ப்பாட்டத்துக்கு நடுவே வைக்கப்பட்டு பலியானவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். வெலிவேரிய பகுதியைச் சேர்ந்த பௌத்த பிக்குகளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதுடன் கோஷங்களையும் எழுப்பினர்.
மனித உரிமையும் மக்களின் உணர்வுகளும் அன்னிய நாடுகளிடம் தஞ்சமடைவதற்காகவும் வியாபாரம் செய்வதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இவற்றிற்கு அப்பால் மக்கள் போராடத் தயார் என்பதை வெலிவெரியப் படுகொலைகள் கூறுகின்றன.