இந்தநிலையில் வெலிவேரியா சம்பவத்துக்கு யார் பொறுப்பேற்கப் போகின்றார்கள் என்று மாற்றுக்கொள்கைக்கான நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் யார் பதிலளிப்பர் என்று அந்த நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது.
அன்னிய நிதியில் இயங்கும் இவ்வாறான அமைப்புக்களுகே சனநாயகத்தின் மீதான அக்கறை காலத்துக்குக் காலம் பீறிடும். இதுவரைக்கும் இலங்கையில் ஜனநாயகம் இருந்ததா என்ற கேள்வியெல்லாம் கேட்கமாட்டார்கள். இலங்கையில் பாசிச ஆட்சி மக்களைக் தின்று புதைத்தாலும் இவர்கள் துயர்கொள்ள மாட்டார்கள். அதே வேளை இலங்கையில் மக்கள் போராட்டங்களும் புரட்சிகளும் உருவாகும் சூழல் ஏற்படும் போது மட்டுமே சனநாயாகம் குறித்துத் துயர் கொள்வார்கள்.