Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வெலிக்கடை சிறையில் நடந்தது கலவரம் அல்ல படுகொலைகள்

இலங்கை வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை எதிர்வரும் மூன்று வாரங்களில் வெளியிடப்படும் என்று அதற்கா அமைக்கப்பட்ட மூன்று பேர் அடங்கிய விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. வெலிக்கடை சிறையில் நடைபெற்ற படுகொலைகளை அரசே திட்டமிட்டு நடத்தியுள்ளது என்பது வெளியுலகத்திற்கு மூடி மறைக்கப்படுவதா அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் மாதம் 9ம் திகதி பலத்த பாதுக்காப்புக்களுடன் கூடிய வெலிக்கடைச் சிறையில் இலங்கை அரசின் மகிந்த குடும்பத்தைச் சார்ந்தவர்கள் செயற்கையான கிளர்ச்சியையும் கலவரங்களையும் உருவாக்கினர். அவர்கள் பாதுகாப்புப் படைகளுடன் ஆயுத மோதலில் ஈடுபடுவது போன்ற தோற்றம் வெளி உலகிற்குக் காட்டப்பட்டது.
பின்னதாகக் கலவரங்கள் ஒடுக்கப்பட்டதாக பாதுகாப்புப் படைகள் தெரிவித்தன. ஆயுதங்களோடு கூரைகளில் ஏறி கிளர்ச்சி செய்ததாக கைதிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.
அந்த வேளையில் உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை. மறு நாள் 10ம் திகதி நவம்பர் மாதம் அதிகாலை 27 கைதிகளை சிறைச்சாலை விசாரணை அறைக்கு அழைத்து சிறைச்சாலைக் காவலாளிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளனர்.
துமிந்த சில்வா மற்றும் மகிந்த குடும்பத்தின் போதைப் பொருள் கடத்தல் கும்பலின் கீழ் மட்ட உறுப்பினர்கள் தொடர்பான விசாரணை நடைபெற இருந்த வேளையிலேயே கொலைகள் நடைபெற்றுள்ளன.
கைதிகள் விசாரணையின் போது காட்டிக்கொடுப்பாளர்களாக மாறும் சந்தர்ப்பங்கள் காணப்பட்டதாலேயே கொலை செய்யப்பட்டனர் என்ற உள்ளகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

செ.பா
Exit mobile version