Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வெற்றுக்காணிகளில் குடியேற்றம் நிகழும் : இலங்கை அரசு

நாட்டில் எங்கெல்லாம் வெற்றுக்காணிகள் உள்ளனவோ அங்கெல்லாம் மக்கள் குடியேற்றப்படுவார்கள் என்றும் அதனையே டி.எஸ்.சேனநாயக்காவும் மேற்கொண்டார் என்றும் ரம்புக்வெல தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்த கருத்துத் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ரம்புக்வெல இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் எந்தவொரு பிரதேசமும் தனியொரு இனத்துக்குச் சொந்தமானதல்ல என்றும் இன விகிதாசார பிரதேசங்கள் என்பது நிராகரிக்கப்படுவதாகவும் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். காணிகள் இருக்கின்ற இடத்திலேயே மக்களை குடியேற்ற முடியும் என்றும் இதன் போது சிங்களம் தமிழ் முஸ்லிம் என்று வேறுபாடு பார்க்க முடியாது எனவும் ரம்புக்வெல தெரிவித்திருக்கிறார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை ( 40.11.2010) நடைபெற்ற ஊடகவியலாளா சந்திப்பில் இக்கருத்தினை ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஜ.தே.கட்சியின் செயலார், நாட்டில் இன மத மற்றும் சமூக அடிப்படையிலான முரண்பாடுகள் அல்லது சிக்கல்கள் ஏற்படும் வகையில் நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பது அராசங்கத்தின் பொறுப்பாகும் எனத் தெரிவித்திருக்கிறார்.
இதே வேளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் விடுவிக்கக் கூடிய பிரதேசங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கட்டாயமாக இருக்க வேண்டிய சில அதியுயர் பாதுகாப்பு வலயப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு மாற்றுக் காணிகளையும் நஷ்டஈட்டினையும் வழங்குவோம் எனவும், யாழ. ரயில் நிலையத்தில் உள்ள சிங்கள் மக்கள் யாழ்ப்பாணத்தில் என்ன அடிப்படையில் வசித்தனர் என்பது குறித்து ஆராயவேண்டியுள்ளது: இது குறித்து முழுமையான அறிக்கை ஒன்றைக் கோரியுள்ளோம் எனவும் அதியயுர் பாதுகாப்பு வலயம் மற்றும் யாழ.ரயில் நிலையத்தில் தங்கியுள்ள மக்களின் நிலைமை தொடர்பாக கருத்து வெளியிட்ட மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் அத்துமீறிய குடியேற்றங்கள் பற்றி தமது விசனத்தைத் தெரிவித்துள்ளனர். வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம். அங்கு பலவந்தமாக குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். வடக்கு- கிழக்கில தமிழர்களின் பெரும்பாண்மையை இல்லாதொழிப்பதற்கான திட்டங்கள் தற்போது தீட்டப்படுகின்றன. இதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் கூறியுள்ளனர். த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், புளொட் தலைவர் சித்தார்த்தன், ஜ.ம.மு. தலைவர் மனோ கணேசன், த.தே.வி.கூ செயலாளர் சிவாஜிலிங்கம் ஆகியோர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.
இவ்விடய்ஙகள் தொடர்பாக வீரகேசரி ஆசிரியர் தலைப்பு ‘அநாவசியமான அரசியல் பிரச்சினைக்கு தூபமிடக்ககூடாது” எனவும் கருத்துத் தெரிவித்திருக்கிது.

Exit mobile version