முதலாளித்துவ ஜனநாயகத்தில் கூட ஒவ்வொரு கட்சியும் கொள்கை என்று ஏதாவது ஒரு மக்கள் விரோதக் கருத்தை முன்வைத்துப் பிரச்சாரம் செய்வது வழமை. பாரதீய ஜனதாக் கட்சி கர்னாடகாவிலிருந்து தமிழகத்திற்குப் பிழைப்பிற்கு வந்து நடிகரான ரஜனிகாந் என்ற கோமாளியை வைத்து தேர்தல் பிரச்சரத்தில் ஈடுபட்ட பரிதாபத்தை தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புக்கொண்டுள்ளார். இக்கட்சி ஆட்சிக்கு வந்தால் புலிகளைக் காப்பாற்றும் என தமிழகத்தில் தமிழ் உணர்வாளர் என்று கூறும் கும்பல் பிரச்சாரம் செய்து 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் மக்களையும் புலிகளையும் முடக்கிவைத்துக் கொன்றொழிகக் பின்புலத்தில் செயற்பட்டது.
வன்முறை, தனிநபர் சாகசங்கள், ஆபாசம், ஆணாதிக்கம் போன்ற அனைத்துச் சமூகச் சீரழிவுகளையும் கொண்ட சினிமாக்களால் புகழ்பெற்ற ரஜனியை இந்துத்துவம் நம்பியிருப்பதை இதெ இயல்புகளைக்கொண்ட ராமர் கூடப் பொறுத்துக்கொள்ள மாட்டார்.
கூச்சமின்றி தமிழிசை சௌந்தரராஜன் கூறியது:’ 2016-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தும் வகையில் கட்சியின் அமைப்புப் பணிகள் குறித்து சென்னை உள்பட 10 மாவட்டங்களின் தலைவர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினோம். இதுபோன்ற கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்படும்.
நடிகர் ரஜினிகாந்த் மிகச் சிறந்த தேசியவாதி. ஆன்மிகவாதி. பிரதமர் நரேந்திர மோடியின் நண்பர். தேர்தலுக்கு முன்பும், பின்பும் பாஜக அரசை ஆதரிக்கிறார். மோடி அரசின் திட்டங்களைப் பாராட்டுகிறார். எனவே, அவர் பாஜகவை ஆதரிக்க வேண்டும் என விரும்புகிறோம். ரஜினியின் ஆதரவு கிடைத்தால் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பலம் வாய்ந்த கட்சியாக மாறும்.’