Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வெற்றிலைக்கேணி மாதா கோயில், படையினரின் முகாமாக மாற்றப்பட்டது கண்டு யாழ். ஆயர் அதிர்ச்சி!

வெற்றிலைக்கேணி யில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க ஆலயமான கப்பல் ஏந்திய மாதா கோவில் படையினரின் முகாமாக மாற்றப்பட்டுள்ளதாக யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வன்னி மற்றும் வடமராட்சி ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்ட ஆயர், வடமராட்சி கிழக்கில் உள்ள வெற்றிலைக்கேணியில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க கப்பல் ஏந்திய மாதா கோவில் இராணுவ முகாமாக மாற்றப்பட்டுள்ளதை கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தேவாலயம் மிகப்பெரும் இராணுவ முகாமாக மாற்றப்பட்டுள்ள விவகாரத்தை ஊடகங்க ளுக்கோ அல்லது வேறு அமைப்புக்களுக்கோ தெரிவிக்க வேண்டாம் என இராணுவம் ஆயருக்கு உத்தரவிட்டுள்ளது.

வன்னிப் பகுதிக்கு சென்ற ஆயர் அங்கு உள்ள பெருமளவான தேவாலயங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். வெற்றிலைக்கேணி மாதா ஆலயம், மிகப் பெரும் இராணுவத் தளமாக மாற்றப்பட்டுள் ளதுடன், அதனை சுற்றி வேலிகளும், காவல் நிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

தேவாயலமும் சேதமடைந்துள்ளது. பெரு மளவான மக்கள் வழிபடும் இந்த தேவால யத்தை இராணுவம் முகாமாக பயன்படுத்தி வருவதால் மக்களின் மத உணர்வுகளை அது புறம்தள்ளியுள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன. இதனிடையே வடமராட்சி கிழக்கு கட்டைக் காட்டு பகுதியிலும் பெருமளவான ஆலயங் கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version